14 ஸ்டார்ட்-அப்’களில் 40 கோடி முதலீடு செய்துள்ள சென்னை AJ Ventures நிறுவனம் தொடங்கவுள்ள இன்குபேஷன் மையம்!

0

சென்னையைச் சேர்ந்த தொடக்ககால முதலீட்டு நிறுவனமான ஏஜே வென்ச்சர்ஸ் மற்றும் இன்வெஸ்மெண்ட்ஸ் (AJ Ventures and Investments), 14 ஸ்டார்ட்-அப்’களில் இதுவரை 40 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் செய்துள்ளது. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ அனில் ஜெயின், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலாகவும், தேவையான வளர்ச்சி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். 

”நான் தொடக்கத்தில் தனிப்பட்ட முறையில் முதலீடுகள் செய்து வந்தேன். ஆனால் கடந்த ஆண்டில் இருந்து இத்துறை அடையும் வளர்ச்சியைக் கண்டு வென்ச்சர் நிறுவனமாக தொடங்கி, ஒரு குழுவை அமைத்து, நிர்வகித்து முதலீடுகள் செய்து வருகிறோம்,” என்றார் அனில் ஜெயின். 
அனில் ஜெயின்
அனில் ஜெயின்

இதுவரை, Easypolicy.com, Loanadda, HAPPYEMI, Artwaley, Evenrank, Orbo, Sun Telematics, ILoveDiamonds, Wassup, Flabfit, Ovenfresh, Kyvor Genomics, OTO Magnetics மற்றும் அண்மையில் Detect Technologies உள்ளிட்ட 40 ஸ்டார்ட்-அப்’ களில் அனில் ஜெயின் முதலீடு செய்துள்ளார்.

முதலீடுகள் குறித்து அவர் விவரிக்கையில்,

“உலக அளவில், வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நம் இந்திய நாடை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வல்லமை படைத்தவர்கள் கொண்ட இடமாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த புரட்சியின் போது, AJ Ventures and Investments அதன் வளர்ச்சியில் பங்கெடுக்க விரும்புகிறது. ஒரு காலத்தில் இந்தியா உலகத்தில் ஸ்டார்ட்-அப் இருப்பிடமாக உயர்ந்த இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.  

மேலும் விவரித்த அவர், 

“நாங்கள் உலகத்தரம் வாய்ந்த ஒரு இன்குபேஷன் மையத்தை சென்னையின் மையப்பகுதியில் நிறுவ உள்ளோம். அதில் புதுமையான ஐடியாக்கள் மற்றும் இளம் மற்றும் வளரும் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த வழிகாட்டுதல் மையத்தின் மூலம் இந்தியாவின் கூகிள், ஃபேஸ்புக் அல்லது ஏர்பிஎன்பி போன்ற நிறுவனங்களை உருவாக்க விரும்புகிறோம். அதற்கான சிறப்பான வழிகாட்டல், பயிற்சி, கட்டமைப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளோம்,” என்றார்.

ஏஜே வென்ச்சர்சின் குழு, திறமையான, அனுபவமிக்க, பல்துறை வல்லுனர்களை கொண்டுள்ளது. மேலும் பல மெண்டர்களுடன் இணைந்து இந்த இன்குபேஷன் மையத்தை நடத்தவுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரவுள்ள இந்த மையத்தில் சுமார் 50-க்கும் அதிகமான ஆலோசகர்கள், வல்லுனர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் களை வழிநடத்தும் மெண்டர்கள் இணைந்திருப்பார்கள். 

AJ Ventures and Investments பின்னணி

இந்நிறுவனத்தைச் சேர்ந்த Refex Group ஆரம்பக்கட்ட முதலீடுகள் வழங்கும் ஒரு கிளை குழுவாகும். இதை அனில் ஜெயின் 2002-ல் நிறுவைனார். சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம், புதுப்பிக்கத்தக்க சக்தி, தொழிற்சாலை எரிவாயு மற்றும் கட்டிடத்தொழில் என்று பலதுறைகளில் தங்களின் பங்கை நிலைநாட்டியுள்ளது.

இக்குழுமத்தில் ஒட்டுமொத்த வருவாய் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.  இரண்டாம் தலைமுறை தொழில்முனைவரான அனில் ஜெயின், குடும்பத்தொழிலுக்கு அப்பால் தன்னக்கென ஒரு நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டு சொந்த தொழில் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.