இரு இளைஞர்கள் தூய்மை இந்தியா திட்டத்துக்கு லட்சக்கணக்கான மக்களை திரட்டியது எப்படி?  

0

புத்தாண்டுக் கொண்டாட்ட இரவுக்குப் பிறகு, அதிகாலை நேரத்தில் வருண் குர்நானே மற்றும் அருண் கான்சந்தானி ஆகியோர் வீட்டுக்குத் திரும்பினர். தன் கையில் ஒரு காலியான கேன் இருந்ததால், குப்பைத் தொட்டியை தேடத் தொடங்கி்யிருந்தார் வருண். இருவருக்கும் ஆச்சரியம் என்னவென்றால் சில கிலோமீட்டர்கள் தாண்டிச் சென்றபோதும் மும்பை போன்ற ஒரு நகரத்தில் குப்பைத்தொட்டி தென்படவில்லை என்பதுதான். “நாங்கள் தேடிச் சென்றோம், ஏனெனில் எங்களுக்கு நேரம் இருந்தது. ஆனால் எல்லாருக்கும் இது போல் தேட நேரம் இருக்குமா என்ன?” என்கிறார் வருண்.

அடுத்த நாள் காலை 2016ஆம் ஆண்டில் தொடக்கமாக இருந்தது. மும்பையின் டிஎஸ்இசி (தடோமால் சஹானி) பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவர்கள், நேற்றைய இரவின் யோசனையில் மும்பையை தூய்மை செய்வது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

2016 ஆண்டு பிறந்த அடுத்த தினமே "தூய்மை மும்பை"  என்ற முயற்சியை துவக்க இந்த இரு 21 வயது இளைஞர்கள் முடிவெடுத்தனர்.

தூய்மை இந்தியா

இந்த இருவரும் மும்பைக்கு அருகிலுள்ள ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். “பிரிஹான் மும்பை மாநகராட்சி, 20 ஆயிரம் குப்பைத் தொட்டிகள் இருப்பதாக கணக்கு காட்டினாலும், அதில் ஒரு பகுதி அளவு மட்டுமே இருப்பதாக எங்களுடைய ஆய்வு தெரிவித்தது ” என்று கூறுகிறார் வருண். குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தால் அவர்கள் வெளியிலேயே குப்பைகளை கொட்டிவிடுவதாக தங்களிடம் பேசிய பெரும்பாலான மக்கள் தெரிவித்தார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கான தீர்வும் அவர்களுக்குத் தெரியவில்லை.

அடுத்த பதினாறே நாட்களில் மக்கள் குப்பைத் தொட்டியை கண்டறிவதற்கான ஆப்ஸை உருவாக்கினார்கள். அதற்காக மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த இடத்தில் குப்பைத் தொட்டி அடையாளம் காணப்படாமல் இருந்தால், அல்லது காணாமல் போயிருந்தாலும் ஆப்ஸ் உதவும். வருணும், அருணும் 400 கிலோ மீட்டர் ஊர் ஊராகச் சுற்றி 700 குப்பைத் தொட்டிகளை அடையாளம் கண்டார்கள்.

“குப்பைத் தொட்டி இல்லை என்ற ஒரே காரணத்தால் இனி மக்கள் குப்பையை வெளியே கொட்டக் கூடாது என்பதற்காக இதைச் செய்தோம்” என்கிறார் வருண்.

நேர்த்தியான மும்பை

அந்த ஆப்ஸின் பெயர் 'டைடி' Tidy. இந்த எண்ணம், தொழில்நுட்மும் லட்சக்கணக்கான மக்களின் சக்தியும் சேர்ந்து தூய்மை இந்தியாவை உருவாக்கியிருக்கிறது. எப்படி ஒருவர் புதிய குப்பைத்தொட்டியை குறிப்பார்? (அல்லது ஆப்ஸில் குப்பைத் தொட்டியைப் பார்க்காதபோது) பயனர் ஆப்ஸில் உள்ள வரைபடத்தில் அந்த குப்பைத்தொட்டியை படம்பிடித்து, அதை டைடி குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும். பயனர்கள் வசிப்பிடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் குப்பைத் தொட்டி இருக்கவேண்டும். டைடி குழுவினர் விவரங்களை ஆய்வு செய்தபிறகே, குப்பைத் தொட்டி ஆப்ஸில் தெரியவரும். 

ஒவ்வொரு குப்பைத்தொட்டிக்கும் தனித்துவமான சாவி கொடுக்கப்பட்டிருக்கும். அது பயனர்களுக்கு நன்றாக தெரியும்படி இருக்கும். ஒருவேளை ஆப்ஸில் எப்போதும் இருக்கும் இடத்தில் இருந்து குப்பைத்தொட்டி நகர்ந்துபோவதை பயனர் சுட்டிக்காட்டினால், டைடி குழுவினர் அதற்கான புதிய இடத்தை ஆப்ஸில் கொண்டுவந்துவிடுவார்கள். இந்த நடவடிக்கைகள் தன்னியல்பாக நடப்பதில்லை. வருணும் அருணும் ரேடியோ அதிர்வலைகளை வைத்து பிரச்சினைகளை தீர்க்கச் சொல்கிறார்கள். ஆனால் பிஎம்சி மென்பொருளால் அதை தீர்க்கமுடியாது.

இருவரும் ஆரம்பத்தில் வருவாயை பெற்றுத்தரும் ஒன்றாக ஆப்ஸை உருவாக்கவில்லை. சேவை மனநிலையில் அதை உருவாக்கினார்கள். இப்போது வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த தூய்மைத் திட்டத்தில் சேர்ந்து செயலாற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புகள் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

“நாங்கள் 1,000 குப்பைத்தொட்டிகளை மும்பையில் குறித்துவைத்திருக்கிறோம். அதில் 63 சதவீதம் பயனர்கள் அளித்த விவரங்கள்” என்கிறார் வருண். இந்த எண்ணம் எளிமையானது, அரசின் தலையீட்டை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாடு முழுவதும் கிடைக்கும் ஆதரவு பெரிதாக இருக்கிறது.

இளைய இந்தியாவின் கனவுகள்

வருணும் அருணும் நாட்டு சேவை செய்யும் புதிய முயற்சியால் ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டான்ட் அப் இந்தியா இயக்கத்தின் முன்னணியில் இருக்கிறார்கள்.

வருண் கூறுகையில், 

“இந்த ஆப்ஸ் ஒரு சமூக தொடக்கநிலை முயற்சி, தூய்மை நகரம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு உதவுகிறது. நாங்களும் தொடக்கநிலை முயற்சிகளில் இணைந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவோம்”.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, வருணும் அருணும் மற்ற தொடக்கநிலை முயற்சிகளுக்கான இணையதளங்கள் மற்றும் செயலியை உருவாக்க உதவி செய்துவருகிறார்கள். டைடி குழுவினர் பொது சிறுநீர் கழிப்பிடங்களையும் குறிக்கத் தொடங்கியுள்ளனர். இக்குழு மற்ற நகரங்களிலும் செயல்படத் தொடங்கியிருக்கிறது. மேலும், குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடும் திட்டம் வைத்திருக்கிறது.

“எங்களுடைய பெருங்கனவு என்பது தினசரி பிரச்சினைகளுக்கு கணிசமான அளவு தீர்வு காண்பதுதான்” என்று நம்பிக்கையுடன் பேச்சை முடிக்கிறார் வருண்.

ஆக்கம்: SNIGDHA SINHA |   தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

குப்'பை' விளம்பரம்: தூய்மை டெல்லிக்கு புது வியூகம் வகுத்த 3 இளைஞர்கள்!

பூக்களை சுத்தப்படுத்தி, பூமியை சுத்தப்படுத்தும் மதுமிதா பூரி!