புதிய 200 ரூபாய் நோட்டுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 10 அம்சங்கள்!

0

நிதி அமைச்சகம் கடந்த புதன்கிழமை புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1934 ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 24-ன் படி, மத்திய இயக்குனர்களின் போர்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் இது பற்றி IANS இடம் பேசுகையில், 

“200 ரூபாய் நோட்டு ப்ரிண்டிங் தொடங்கப்பட்டுள்ளது, பொது மக்கள் மத்தியில் விரைவில் புழக்கத்திற்கு வரும். இது சிறிய தொகை வரிசை ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை மக்களிடையே அதிகரிக்க எடுக்கப்படும் நடவிக்கை,” என்றார். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பிறகு, மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு பரிமாற்றங்கள் செய்வது கடினமாக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர். 100ரூ போல் 2000 ரூபாய்-க்குள் மற்றொரு சிறிய தொகை நோட்டுகளுக்கான தேவை இருந்தது. அதன்படி 200 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

200 ரூபாய் நோட்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 10 முக்கிய அம்சங்கள்:

1. 200 ரூபாய் நோட்டு 66 mm x 146 mm அளவில் உள்ளது.

2. புதிய நோட்டுகளில் ‘ஸ்வச் பாரத்’ அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் ‘க்ளீன் இந்தியா’ விழிப்புணர்வின் லோகோ இடம் பெற்றிருக்கும்.

3. இதில் சான்ச்சி ஸ்டுபாவின் மையக்கருத்தை பின்பக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

4. 200 ரூபாய் நோட்டு வெளியிடும் திட்டத்தை நிதி அமைச்சகம் முடிவெடுத்தது. டிசைனை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

5. ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் ஆர்பிஐ 200 ரூபாய் நோட்டுகளை மஹாத்மா காந்தி எண்கள் வரிசையில் ரிசர்வ் வங்கி ஆளுனர் ஊர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியிட தொடங்கியது. 

6. நோட்டை உயர்த்தி பார்த்தால் மறுபக்கம் தெரியும் விதம் மெல்லிய நோட்டுகளான 200 ரூபாய், தேவனாகிரி எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது.

7. மஹாத்மா காந்தியின் படம் நோட்டின் மையப்பகுதியில் இருக்கும். ‘RBI’, ‘भारत’, ‘India’, மற்றும் ‘200’ ஆகியவை சிறிய எழுத்துக்களில் நோட்டில் இருக்கும். நோட்டை சாய்த்தால் அதிலுள்ள நூல் பச்சை கலரில் இருந்து நீலமாகும்.

8. கண் பார்வையற்றோர் வசதிக்காக, மஹாத்மா காந்தியின் படம், அசோக சக்கரம், ₹200 ஆகியவை சற்று உயர்ந்த எழுத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

9. நோட்டின் அடி பாகம் மஞ்சள் நிறத்தில் உள்ளது.

10. இதே நோட்டு பல டிசைன்கள், விதங்களிலும் உள்ளது. முக்கிய வண்ணம் மட்டும் அதே வடிவில் இருக்கும். 

தகவல் உதவி: IANS