மாதவிடாய் சார்ந்த தவறான கருத்துக்களை தகர்த்தெறியும் இந்தியாவின் ’பேட்வுமன்’!

1

மாதவிலக்கு சார்ந்த கருத்துக்கள் இந்தியப் பெண்களையும் சிறுமிகளையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாயா விஷ்வகர்மா. மத்திய பிரதேசத்தின் நரசிங்பூர் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனது 26 வயது வரை சானிட்டரி நாப்கின் குறித்து கேள்விப்பட்டதில்லை.

இதன் காரணமாக பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளார். தற்போது 36 வயதான இவர் தான் சந்தித்த அதே போன்ற பிரச்சனைகள் மற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

அதற்காக ’இந்தியாவின் பேட்வுமன்’ என்றழைக்கப்படும் இவர் கலிஃபோர்னியாவில் புற்றுநோய் குறித்த தனது ஆராய்ச்சியை விடுத்து இந்தியா திரும்பினார். தனது இளமைக் காலம் குறித்து பிடிஐ-க்கு தெரிவிக்கையில்,

முதல் முறை மாதவிடாய் ஏற்பட்டபோது என்னுடைய பெண் உறவினர் ஒருவர் துணியை பயன்படுத்துமாறு என்னிடம் அறிவுறுத்தினார். இதனால் பல்வேறு நோய்தொற்று ஏற்பட்டது. நமது சமூகத்தில் மாதவிதாய் சுகாதாரம் குறித்து பேசுவதே தடைசெய்யப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இளம் வயதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்தப் பிரிவில் செயல்பட உந்துதலளித்தது.

மாயாவின் பெற்றோர் விவசாயக் கூலியாக பணிபுரிந்தனர். இந்த வருவாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை நிர்வகிக்க முடியாமல் போராடினர். இருந்தபோதும் மாயா படிப்பை நிறுத்தவில்லை. திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தவில்லை. எனவே பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்டரி பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

அதன் பிறகு எய்ம்ஸ்-ல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமெரிக்காவிற்குச் சென்று லூகிமியா வகை புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். பிறகு இந்தியா திரும்பினார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரில் ’சுகர்மா ஃபவுண்டேஷன்’ (Sukarma Foundation) துவங்கினார். இந்தியா முழுவதுமுள்ள பெண்களை சந்தித்து மாதவிடாய் குறித்த தவறான நம்பிக்கைகளை தகர்ந்தெறிந்து சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவன் முக்கியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதே சமயம் இந்த பெண்களுக்காக இவரது ஃபவுண்டேஷன் விலை மலிவான சானிட்டரி நேப்கின்களையும் தயாரிக்கிறது. இதன் வாயிலாக மாயா சானிட்டரி நாப்கின்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவடன் அவற்றை தயாரித்து மலிவு விலையில் விற்பனையும் செய்கிறார்.

இவர் இத்தகைய முயற்சியை துவங்கி இரண்டாண்டுகள் ஆன நிலையில் 2,000-க்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் தனது பணி குறித்து ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’-க்கு தெரிவிக்கையில்,

இயந்திரத்திற்குத் தேவையான பணம் கூட்டுநிதி வாயிலாகவும், தனிப்பட்ட சேமிப்பு வாயிலாகவும் என்னுடைய சுகர்மா ஃபவுண்டேஷனின் கலிஃபோர்னியா மற்றும் இந்திய சாப்டரில் இணைந்திருக்கும் நண்பர்கள் வாயிலாகவும் பெறப்பட்டது. சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க விலை மலிவான சிறந்த இயந்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோதுதான் ’பேட்மேன்’ என்றழைக்கப்படும் முருகானந்தத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர் பயன்படுத்திய இயந்திரத்தையும் பார்த்தேன்,” என்கிறார்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL