’காலா’ செட்டிங்கா...? டயலாகை பேசி வைரலாக்கிய நம்ம தல தோனி! 

இக்விடாஸ் வங்கி வெளியிட்டுள்ள CSK வீரர்களின் காலா திரைப்பட டயலாக் விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது!

0

தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்களுக்கு வரவேற்பு அதிகம் ஒன்று ரஜினிகாந்த் மற்றொண்டு CSK தோனி. இருவரையும் தமிழ் மக்கள் தலைவர் என கொண்டாடுவது வழக்கம். இவர்களை தனித்தனியாக பார்த்தாலே ஆர்பரிக்கும் நம் மக்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்பட டீசரை CSK ஆட்டக்காரர்கள் சிலரை வைத்து டப்ஸ்மாஷ் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர் சென்னையைச் சேர்ந்த இக்விடாஸ் வங்கி.

ஒரே இரவில் பிரம்மாண்ட வரவேற்பை கண்டுள்ளது இந்த வீடியோ. முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங் மற்றும் தல தோனி நடித்து வெளியாகி உள்ளது இந்த காலா வீடியோ. ரஜினி குரலில் தோனி நடித்திருப்பது இந்த வீடியோ ஹிட் அடிக்க ஓர் முக்கியக் காரணம்.

“தமிழகத்தைச் சேர்ந்த நாங்கள் தமிழ் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என நினைத்தோம். இதைப் பற்றி நாங்கள் யோசித்த போது எங்களுக்கு தோன்றிய முதல் காம்போ ரஜினிகாந்த் மற்றும் csk ஆட்ட நாயகர்கள் தான்,”

என்கிறார் இக்விடாஸ் வங்கியின் ஊடக தொடர்பாளர் நிஷாந்த். இது போன்ற வீடியோக்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர், விரும்பிப் பார்க்கின்றனர். அதனால் அவர்களை இது விரைவில் சென்று அடைகிறது என்கிறார். மேலும் தாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார்.

“தோனியிடம் காலா விடியோவை போட்டு காட்டிய போது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் இந்த வீடியோவில் நடித்துத் தர கேட்டதும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.”

இந்த ஐபிஎல் பகுதியை முன்னிட்டு, இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்டத்தில் இறங்கும் csk உடன் இணைந்து கடந்த மார்ச் 22-ம் தேதி ’Yellow Army' என்னும் சேவிங்ஸ் அக்கௌன்டை வெளியிட்டுள்ளனர் இக்விடாஸ் வங்கி. இந்த அக்கௌன்டை பெறுபவர்களுக்கு csk நாயகர்களான தோனி, ரைனா, மற்றும் ஜடேஜாவின் புகைப்படம் பொருந்திய டெபிட் கார்டும் அத்துடன் மினி csk கிட்டையும் வழங்குகிறது இக்விடாஸ் வங்கி.

இந்த Yellow Army சேவிங்ஸ் அக்கௌன்டை பிராவோ மற்றும் முரளி விஜய் வெளியிட்டனர். இதை பிரபலமாக்கும் நோக்கிலும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும் இந்த காலா-CSK விடியோவை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். அடுத்த மூன்று வருடங்களுக்கு CSK உடன் இக்விடாஸ் இணைந்திருக்கும்.  

Related Stories

Stories by Mahmoodha Nowshin