பாவமன்னிப்புக்கான நடிகரின் தேடல் தொழில் தொடங்கும் எண்ணத்தில் முடிந்த கதை!

0

‘ஆம் ஐயா நான் என் தந்தையை கொன்றுவிட்டேன்!’ இது அவரின் கவிதைக்கான வரிகள் மட்டுமல்ல, அனுஜ் டிக்கு, தன்னுடைய இதயத்தில் சுமந்து கொண்டிருக்கும் குற்ற உணர்வின் சுமை அது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அனுஜ் டிக்கு, வெள்ளித் திரையில் ஒரு வெற்றி நடிகர். நெஞ்சை உறைய வைக்கும் அந்த சம்பவம் அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

“நான் கருப்புத் துணியால் என் முகத்தை மூடி இருந்தேன், பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் என்னைச் சுற்றி இருந்தனர், அவர்கள் என்னை படம்பிடிக்க முயற்சித்தனர்! தவறான காரணங்களை கூறி என்னை வைத்து தேசிய அளவில் செய்திகள் உருவாகின” என்று தன் தந்தை கொல்லப்பட்ட அன்று தான் கைது செய்யப்பட்டதை நினைவுபடுத்திக் கூறுகிறார் அவர்.

அனுஜ், அனுராக் கஷ்யப்பின் நோ ஸ்மோக்கிங் படத்தில் நடித்திருக்கிறார். ஹேவெல்ஸின் 'ஷாக் லகா லகா' தொடர் விளம்பரங்கள் அது வரை அவருக்கு புகழ் ஏற்படுத்தின. 6 ஆண்டு கால கடின உழைப்பு மற்றும் 65 விளம்பரங்களுக்குப் பிறகு அனுஜிற்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. 2012 ஏப்ரல் 7ந்தேதி அனைத்தும் மாறிவிட்டது. மறுநாள் காலை டெல்லி செல்வதற்கு முன் அனுஜின் தந்தை அருண்குமார் டிக்கு அன்றைய இரவை மும்பையில் உள்ள அவரின் அடுக்குமாடி குடியிருப்பில் கழித்தார். அன்று இரவு ஆயுதங்களுடன் வந்த ஒருவர் வீட்டை உடைத்து உள்ளே வந்து அருண்குமார் டிக்குவை கொலை செய்து விட்டார்.

“15 வெட்டுக் காயங்கள்” இருத்தாக நினைவுகூர்கிறார் அனுஜ்.

எதிர்பாரா விதமாக அனுஜ் குற்றவாளியாக்கப்பட்டார். அந்த மர்ம நபருக்கு மும்பையில் இருந்த வீட்டை வாடகைக்கு விட அனுஜ் ஒப்புக்கொண்டிருந்தார். நட்பின் அடிப்படையில் அந்த நபருக்கே வீட்டை கொடுக்க சம்மதித்தேன். நான் ஏன் இந்த அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு விடுகிறேன் என்பதை தெரிந்து கொள்ள என் தந்தை திடீரென டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்தார். அன்று மாலை வாடகைக்கு வர இருந்தவர்கள் வீட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களை அருண் உள்ளே அனுமதிப்பதை தவிர அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை.

“…பின்னால் இருந்து தாக்கினார்கள், அவரால் முடிந்த அளவு போராடினார். உதவி கேட்டு கதறினார், ஜன்னல் கதவுகளை தட்டினார். கதவைத் திறந்து மனிதநேயத்தின் அவமானமான இந்த நேரத்தை பார்க்க நினைத்தார். அவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார், நான் எங்கும் அவர் பார்வையில் இல்லை,” – அனுஜின் சோகத்தை விளக்கும் கவிதையின் மேலும் சில வரிகள்.

டிக்கு நேபாளத்தில்நம்பிக்கைக்காக வேண்டிக்கொணடிருந்தார்
டிக்கு நேபாளத்தில்நம்பிக்கைக்காக வேண்டிக்கொணடிருந்தார்

அந்த நேரத்தில் யாருமே பார்க்கவில்லை, கொலைகாரர்கள் தப்பிவிட்டார்கள், அருண் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது.

அனுஜ் அந்த சமயம் கோவாவில் தன்னுடைய ‘நண்பருடன்’ இருந்தார், அவருக்குத் தான் வீட்டை வாடகைக்கு விட இருந்தார் அவர். அனுஜை அந்த நபர் ஒரு ‘சிறிய சுற்றுலா’ அழைத்து சென்றிருந்தார், ஆனால் அனுஜிற்கு தெரியாமலேயே போதைப் பொருளை அவருக்குக் கொடுத்திருந்தார். அனுஜை கொல்வது தான் திட்டம். “மும்பையில் என் தந்தையின் மரணம் நிகழ்ந்திருக்காவிடில் கோவாவில் அவன் என்னை கொன்றிருப்பான்” என்கிறார் அனுஜ். அவன் என்னை “உயிர் பிழைக்க விட்டதற்கான ஒரே காரணம் என் தந்தை கொலை செய்யப்பட்டதால் போலீஸ் என்னைத் தேடி வரும், அப்போது நானும் கொல்லப்பட்டால் இரண்டு கொலைப் பழியும் தன் மீது விழுவதை அவன் விரும்பவில்லை போலும்.”

அனுஜிற்கு போதைப் பொருளை கொடுத்து விட்டு அவருடைய தொலைபேசியை எடுத்து அவரை தொடர்பு கொள்ள முடியாதபடி செய்து விட்டனர். எனினும் விரைவிலேயே போலீஸ் அவரை சிப்லனில் பிடித்தது. அனுஜின் நிலையை போலீசார் புரிந்து கொண்டனர், உடனே அருணின் கொலை வழக்கில் அனுஜ் மீது சந்தேகப்பட்டனர்.

அனுஜ் கம்போடியா கோவிலின் நீண்ட பயணம்
அனுஜ் கம்போடியா கோவிலின் நீண்ட பயணம்

சோகம்

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது நான் வீட்டுக்கு வந்து ஷவரின் கீழே நின்று கொண்டு ஐந்து மணி நேரமாக சோப்பை எடுக்க முயற்சித்தேன் ஆனால் என்னால் எடுக்க முடியவில்லை. என் உடல் முழுதும் அதிர்ச்சி பரவி இருந்தது” என்று பெங்களூரில் நடந்த நீண்ட கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அனுஜ் மும்பையில் இருந்து வெளியேறி டெராடூனில் இருந்த தன் தாத்தா பாட்டியுடன் இருந்தார். குற்ற உணர்வால் தவித்ததால் நம்பிக்கையை பெற போராடிக் கொண்டிருந்தார். நடந்தவற்றிற்கு தன்னைத் தானே குற்றம் சுமத்திக் கொண்டார். “நான் அங்கு இருந்திருந்தாலோ அல்லது எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலோ என் தந்தை உயிரோடு இருந்திருப்பார் என்று என்னை யோசிக்க வைத்தது.”

அவர் கவிதை எழுதத்தொடங்கினார், தான் வளர்ந்த போது சுற்றிப் பார்த்த இடங்களை பார்க்கச் சென்றார். ஓராண்டுக்குப் பிறகு 2014ல் அனுஜ் அந்த அடுக்குமாடி குடியிருப்பை விற்றுவிட்டு, தன்னுடைய பயணத்தை ஷர்தம் மற்றும் அமர்நாத் யாத்திரையில் இருந்து தொடங்கினார். அவர் ஜம்மு காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரையும், வடகிழக்கில் இருந்து அமிர்தசரஸ் மற்றும் வாஹா எல்லை வரையும் பயணித்தார்.

தூரம் அவருக்கு பல்வேறு கோணங்களை அளித்தது. அவருக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நீண்ட பயணம் அர்த்தப்படுத்தியது. நீண்ட தூர பயணம் அவருக்கு தெளிவை ஏற்படுத்தியது. “நான் இழந்த அன்பை திருப்பிக் கொடு” என்ற தன் அழைப்பை கண்டுவிட்டதாக அனுஜ் எளிமையாகக் கூறுகிறார்.

அவருடைய பணிவு தெளிவாகத் தெரிகிறது. அனைத்தையும் இழந்தை ஒரு மனிதன் உலகுக்கு அன்பை திருப்பி அளிக்க விரும்புகிறான். ஏறத்தாழ 120 நாட்களை 12 நாடுகளில் (கம்போடியா, வியட்நாம், பாலி, தி பிலிஃப்பைன்ஸ், மாலத்தீவுகள் அவற்றில் சில) செலவிட்டிருக்கிறார் அவர். அடுத்த ஏழு ஆண்டுகளில் 200 நாடுகளை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ளார், இதற்கு அவர் வைத்துள்ள பெயர் டிக்குவின் ட்ராவல்த்தான்.

டிக்கு தற்போது முறையான ஸ்கூபா பயிற்றுனர்
டிக்கு தற்போது முறையான ஸ்கூபா பயிற்றுனர்

டிக்குவின் ட்ராவல்த்தான்

டிக்குஸ்ட்ராவல்த்தான்.இன் (tikkustravelthon.in) தகவல்கள் அனைத்தும் சுற்றுலா தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களை புகைப்படங்கள், வீடியோக்கள், ப்ளாகுகள் மற்றும் ட்ராவெலாகுகளாக அளிக்கிறது. ஸ்பான்சர்களைப் பெறுவதற்காக தற்போது சுற்றுலா இணையங்களான மேக்மைட்ரிப், ஹாலிடேஐக்யூ மற்றும் ட்ராவல்ஜுன் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சுற்றுலாவை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்காமல் அவற்றின் சிறப்புகளை உயிர்ப்புடன் கதையாக்குவதே இதன் நோக்கம். அதே சமயம் இது படம்-தபால்அட்டை-அல்லது எழுத்து வடிவம் இல்லை ஏனெனில் அனுஜ் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படவில்லை.

அவர் இதை பல்வேறு பிரிவுகளாக தெரிவு செய்கிறார். அதாவது ஆன்மீகம்(மதம்); விருப்பம்(களவி); உணவு; இரவு வாழ்க்கை மற்றும் சாதனை விளையாட்டுகள் என தன் இணைய பக்கத்தில் பிரித்துக் கூறுகிறார்.

‘டிக்குவுடன் சுற்றுலா’வில் மக்கள் அனுஜை தங்களது சொந்த சுற்றுலா வழிகாட்டியாக வைத்து கொள்ளலாம். அவர் ஆர்வமாக இருப்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது, ஏனெனில் அவர் தன்னுடைய திட்டங்களை என்னுடைய நோட்பேடில் எழுதி காண்பித்தார். இன்று அனுஜிற்கு உலகத்துடன் பகிர்ந்து கொள்ள பல்வேறு விஷயங்கள் உள்ளது. அவருடைய உலகம் வேகமாக நகர்ந்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு தெருவும் அவருடைய கதைக்கு புது அனுபவங்களை சேர்க்கின்றன.

மக்களுக்கு அவர் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவது எளிமையானதமாக இல்லை. “ஆனால் என்னை நம்ப வைப்பதைவிட வேறு வழி இல்லை என்பதை நான் உணர்ந்தேன். நீங்கள் தனித்தீவாக வாழ முடியாது. உங்களிடம் எந்த மாதிரியான அன்பு இருக்கிறதோ அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு குடும்பம் இல்லை, அதனால் இந்த உலகமே என்னுடைய குடும்பம். உலகத்தை நேசிப்பதே ஒரே வழி அது உங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும்.”

கம்போடிய கைமர் நடனக் கலைஞர்களுடன்
கம்போடிய கைமர் நடனக் கலைஞர்களுடன்

இந்த ஆன்மீக உணர்வே அவரை இணைத்தது. கேதர்நாத்தில் வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து அங்கு மீதம் இருப்பது ‘பீம்சிலை’ – ஒரு பெரிய பாறை கோவிலின் வலது புறம் விழுந்து, தண்ணீரின் ஓட்டத்தை தடுத்து, ஆற்றின் பாதையை அங்கிருந்து மாற்றியது.

அந்த பயணத்தின் போது அனுஜ் சில அகோரிகளுடன் அமர்ந்திருந்தார். அவர்களை பணிவுடன் அணுகி அவர்களோடு கலந்துரையாடினார். அந்த உரையாடல் ஒரு நீண்ட ஆலோசனையாகிவிட்டது. அனுஜ் அவர்களிடம் தான் எப்படி தன் தந்தையின் மரணத்திற்கு காரணமானார் என்பதைக் கூறினார். அதில் ஒரு அகோரி மட்டும் தனிப்பட்ட ஒரு கோணம் வைத்திருந்தார், “உங்கள் தந்தைக்கும் இந்த பீம்சிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, உங்கள் தந்தை தான் உங்கள் பீம்சிலை என்றார்.”

அந்த சிறிய நன்மதிப்பு அனுஜை அது வரை அவர் சுமந்த வந்த குற்ற உணர்வின் சுமையில் இருந்து சாந்தப்படுத்தியது. எந்த வாழ்விற்குமே உத்தரவாதம் இல்லை என்பதை அது அவருக்கு உணர்த்தியது, எல்லா வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

அனுஜ் தற்போது இலகுவாக உணர்கிறார், ஆனால் தன்னைத்தானே மன்னித்துக் கொள்ள முடியாத ஒரு தவிப்பும் அவரிடம் உள்ளது. அவர் கவிதை வரிகளில் கூறியது போல “நான் ஏன் என் பாவங்களுக்காக அவதிப்படுகிறேன் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏய் முட்டாளே, நீ அவருடைய மகன், அது உன்னுடைய கடமை. நான் என் வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவர் எனக்காக தியாகம் செய்தார். அதனால் சந்தேகம் வேண்டாம், நண்பனே, என் தந்தையை கொன்றது நான் தான்.”