மாணவர்களை தொழில்நுட்பத்தில் ஊக்குவிக்கும் அண்ணா பல்கலையின் 'குருக்ஷேத்ரா' விழா அறிவிப்பு!

1

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப ஆண்டு விழாவான 'குருக்ஷேத்ரா" (Kurukshetra'16), பிப்ரவரி 17- 20 வரை நடைப்பெற உள்ளது. நேற்று நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்விழா குறித்து அறிவிக்கப்பட்டது.  

சாதனைகளின் சங்கமமாக திகழ்ப்போகும் இவ்விழா, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும், இவ்விழாவிற்கு யுனெஸ்கோ ஆதரவு அளித்துள்ளது கூடுதல் சிறப்பு.

நிகழ்ச்சியைப் பற்றி

பத்திரிக்கையாளர் சந்திப்பில், பல்கலைகழகத்தின் டீன் நாராயணசாமி, ரெஜிஸ்ட்ரார் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த வருட குருக்ஷேத்ராவில் 33 நிகழ்ச்சிகளும், 520 -க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாகவும், இந்தியாவைத் தவிற 18 நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வர உள்ளதாகவும் திரு.நாராயணசாமி தெரிவித்தார்.

பத்திரிக்கையாளரிடம் திரு.கணேசன் கூறுகையில்,

"இந்த முறை, நாங்கள் 14 மாதிரி திட்டங்களைக் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல், அதை மக்களுக்காக உடனே செயல்படுத்தப் போகிறோம். நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், எங்கள் திட்டங்களை நாளை சந்தையிலும் நீங்கள் பார்க்கலாம்", 

என்று மாணவர்களின் படைப்புகள் மீதுள்ள ஏராளமான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

திட்டங்களைப் பற்றி

மேலும், நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவுள்ள 14 மாதிரி திட்டங்களைப் பற்றி மாணவர்கள் விரிவாக விளக்கினர். சமூக நலம் சார்ந்த கருவிகள் பட்டியலில் ஏர் லாக், படிக்கட்டு பயண விபத்தை தடுக்கும் கருவி, அப்னியா மானிட்டர், அஷெரா, சாலை விபத்துகளை கண்டறியும் கருவி, கண்காணிப்பு எந்திரன் மற்றும் தூய்மை ரோபோ ஆகிய திட்டங்கள் இதில் உள்ளன. 

இதில் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஸ்வச் பாரத்' திட்டத்தை ஒட்டி தூய்மை ரோபோ திட்டம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தனர். 

தொழில்துறை திட்டங்கள் பட்டியலில் ஸ்மார்ட் ஆட்டோ, என்.ஐ.யு.கவுண்ட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட வழுக்கா நிறுத்தி ஆகிவை இடம் பெற உள்ளன.

முக்கிய விவரங்கள்

பிப். 17 அன்று தொடங்கும் இந்த மூன்று நாள் விழாவில், 'புதிய தொழில்துறை பட்டறைகள்' அறிமுகப்படுத்தபடவுள்ளன. 'பில்ட் யுவர் 3டி பிரிண்டர்' போன்ற இலவச பயிற்சி வகுப்புகளும் உள்ளன. 'கார்னிவல்' (karnival), 'இ ஃபார் எஜுக்கேட்' (E for Educate) மற்றும் 'ஸ்டார்டஅப் வீக்கெண்ட்' (Startup Weekend) போன்ற பல நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்போவதாகக் திரு.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தமிழ் யுவர்ஸ்டோரி "ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்" நிகழ்ச்சியின் பிரத்யேக மீடியா பார்ட்னர் ஆகும்

Kurukshetra'16 சம்பத்தப்பட்ட மேலும் தகவல்ளுக்கு

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்