ஒரு காலத்தில் ப்யூன், இப்போது ரூ.10 கோடி விற்றுமுதல் காணும் நிறுவன முதலாளி!

0

பலரும் கனவு காண்பதுண்டு, ஆனால் ஒரு சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. சோட்டு சர்மா; சண்டிகரை சேர்ந்த சிஎஸ் குழுமத்தில் நிறுவனர் மற்றும் சிஇஒ. அவரின் கதை சாதனையாளரில் ஒன்றாகும். 

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிறிய கிராமம் கங்க்ராவை சேர்ந்த சோட்டு, தன் பணி வாழ்க்கையை ஒரு ப்யூனாக தொடங்கினார். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற தூண்டுதலால், காலையில் பணியும், இரவு நேரத்தில் படிப்பிலும் தன் நேரத்தை செலுத்தினார். இன்று அதே மனிதர், இரண்டு சாப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அவரின் நிறுவன விற்றுமுதல் 10 கோடி ரூபாய் ஆகும். 

பட உதவி: அமர் உஜாலா
பட உதவி: அமர் உஜாலா

சோட்டு தன் பட்டப்படிப்பை தலியரா கல்லூரியில் 1998-ம் ஆண்டு முடித்தார். மாதம் 5 ஆயிரம் கூட சம்பாதிக்கமுடியாததால் அவரால் கணினிப் பயிற்சி வகுப்பில் சேரமுடியவில்லை. அப்போதே அவருக்கு கம்யூட்டரின் வருங்காலம் மற்றும் அது தரக்கூடிய வளர்ச்சி குறித்து அறிந்திருந்தார். அதனால் சண்டிகருக்கு வந்தார் சோட்டு.

நிதி நிலைமை சரி இல்லாததால், அவரால் எந்த நல்ல இடத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஒரு கம்யூட்டர் செண்டரில் ப்யூனாக பணியில் சேர்ந்தார். வேலை பார்த்துக் கொண்டே அங்கே கணினி பயிற்சி எடுத்துக் கொண்டு எப்படியோ மைக்ரோசாப்ட் மென்பொருள் டெவலப்பர் சான்றிதழை பெற்றார். 

அவரின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருந்த காரணத்தினால், பலமுறை அவர் உணவின்றி உறங்கியுள்ளார். சோட்டு கூடுதலாக சம்பாதிக்க குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தார். சைக்கிளில் வலம் வந்த அவரிடம் ஒரு கம்யூட்டர் கூட இல்லை. இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பணம் சேமித்து, ஒரு பைக் மற்றும் கணினி ஒன்றை வாங்கினார். 

மென்பொருள் டெவலப்பர் ஆனதால், அவருக்கு ஆப்டெக் கம்யூட்டர் மையத்தில் பயிற்சியாளார் வேலை கிடைத்தது. மதியம், மாலை என்று பல வகுப்புகளை எடுத்தார் சோட்டு. 2000-ம் ஆண்டிற்குள் சுமாராக சம்பாதித்த அவர், தன் கனவை நிஜமாக்க முடிவெடுத்தார். 

ஒரு இரண்டு அடுக்கு ப்ளாட்டை வாடகைக்கு எடுத்து, தன் சொந்த கம்யூட்டர் செண்டரை துவங்கினார். ஆறு மாதகாலத்தில், சுமார் 80 மாணவர்கள் இவரின் மையத்தில் சேர்ந்தனர். பயிற்சியை முடித்த பல மாணவர்கள் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டதால், இவரின் மையத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. 

பின்னர் 2007-ல் CS Infotech என்ற பெயரில் இன்ஸ்டிடூட் தொடங்கினார். தற்போது அங்கே 1000 மாணவர்கள் வரை பயிற்சி எடுக்கின்றனர். சோட்டு 150 பேரை பயிற்சி மையத்தில் பணியமர்த்தி உள்ளார். அவர் கண்ட கனவை நினைவாக்கிய மகிழ்ச்சியில் பல நல்லுதவிகளையும் செய்கிறார் இந்த முன்னாள் ப்யூன். 

கட்டுரை: Think Change India