கல்வி கற்பித்தலில் பிசித்ரா பாத்சாலாவின் தனித்துவமான அனுகுமுறை!

0

கொல்கத்தாவின் செல்டாவில் உள்ள லோரேட்டோ டே பள்ளியில் ஆங்கில ஆசிரியையான ரோஷ்னி தாஸ்குப்தா, “எனக்கு ஆசிரியப் பணியில் கண்களைத் திறந்துவைத்த பிசித்ரா பாத்சாலாவுக்கு நன்றி சொல்லியாகவேண்டும். அந்த வழிமுறை வலிமையாகவும் எளிதாக திரும்பி செய்யக்கூடியதாகவும் இருந்தது” என்று உற்சாகமாகப் பேசுகிறார்.

த ஓரியண்டல் செமினரி மாணவரான ராஜீப் கோட்டல், “பிசித்ரா பாத்சாலா' (Bichitra Pathshala)அந்த சவாலை அளிக்கவில்லையென்றால் நான் படங்களை இயக்குவேன் என்று எனக்கே தெரிந்திருக்காது” என்கிறார் ஆரியதாஹாவில் உள்ள டெக்னோ இந்தியா ஸ்கூல் முதல்வர் ஜோயித்தா தாஸ்குப்தா.

பிசித்ரா பாத்சாலா நடத்திய த ஆர்ட் ஆர் ஜெக்ஸ்ட்பொசிஷன் (The Art of Juxtapositions) பற்றிய பயிற்சிப் பட்டறைக்கு நன்றி. எங்களுக்கு பயன்படுத்திப் பார்க்க புதிய கருவி கிடைத்திருக்கிறது. வகுப்பறைகளில் பல அற்புதமான விஷயங்களை செய்துபார்க்கும் சாத்தியங்களை அது திறந்துவைத்திருக்கிறது.

ரோஷ்னி, ராஜீப் மற்றும் ஜோயித்தா ஆகியோருக்கு ஒரு விஷயம் பொதுவானது. பிசித்ரா பாத்சாலா நடத்திய பயற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு அதனால் பயனடைந்தவர்கள். அதன் பெயருக்கு உண்மையாகவே புதுமையான அனுபவத்தை அது அளித்திருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எழுச்சியூட்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரிசையில், பிசித்ரா பாத்சாலாவின் நோக்கமே வகுப்பறைகளில் பாடங்களை திரைப்படங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் வழியாக கற்பித்தல்தான். நவீன தொழில்நுட்ப யுகமான இப்போது ஒவ்வொருவரும் இதற்கு உறுதியளிக்கவேண்டும்.

“கடந்த பத்து ஆண்டுகளாக, கல்வியின் எல்லா நிலைகளிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி CCE எனப்படும் தொடர்ந்த விரிவான மதிப்பீட்டை அறிமுகப்படுத்தியது. நாங்கள் பிசித்ரா பாத்சாலாவில் அளிக்கும் நகரும் படங்களுடன் கற்பித்தல் முறை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. பிசித்திரா பாத்சாலா சொசைட்டியாக 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கற்றலை நகரும் படங்களைக் கொண்டு மகிழ்ச்சியானதாக மாற்றுதல், விமர்சனபூர்வமாக ஊடகத்தைப் பார்க்கும் நுக்ரவோர்களாக மாணவர்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக வைத்திருந்தோம்” என்று விளக்கம் தருகிறார் சுபா தாஸ் மொல்லிக், நிறுவனர் – செயலாளர், பிசித்ரா பாத்சாலா.

“நாங்கள் பல்வேறு வகையான திரைப்படங்களை, கல்வி கற்பித்தலை முழுமையானதாக மாற்ற பயன்படுத்தினோம். புகழ்பெற்ற படங்கள், ஆவணப்படங்கள், யு டியூப் வீடியோக்கள், செய்திகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை வைத்து பாடத்திட்டத்தை வகுத்தோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊடகத்தை விமர்சிக்கும் நுகர்வோர்களாக உருவாக்கினோம். எங்களுடைய திட்டங்களை ஆசிரியர்கள், மாணவர்களிடம் வளர்ப்பதற்காக பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம். நாங்கள் 2010ல் நடத்திய் டூல்ஸ் இன் ஸ்கூல்ஸ் என்ற மிகப்பெரிய பயிற்சிப் பட்டறைக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர்” என்கிறார் சுபா.

2010ம் ஆண்டு முதல் பிசித்ரா பாத்சாலா, ஆசிரியர்கள், மாணவர்களுக்கான 25க்கும் அதிகமான பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளது. கொல்கத்தாவின் முக்கிய பள்ளிகளிடையே அவர்களுடைய பாட முறைகள் பிரபலம். கிழக்கு இந்தியாவிலேயே மிகவும் பழைமையான மீடியா நூலகங்களில் ஒன்று பிசித்ரா பாதாசாலாவில் உள்ளது. இங்கு 10 ஆயிரம் நூல்களும் ஆய்விதழ்களும் உள்ளன. திரைப்பட ஆவணக்காப்பகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான உலகப் புகழ்பெற்ற படங்கள், கலைப் படங்கள், கல்விப் படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் அரிதான பரிசோதனைப் படங்கள் உள்ளன என மேலும் சுபா கூறுகிறார்.

இந்தப் படங்கள் மாணவர்களுக்கு நல்ல சினிமாவைப் பற்றி அறிமுகத்தைத் தருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளைப் பற்றி அவர்கள் பரிச்சயப்படுத்திக்கொள்ளமுடிகிறது. மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட படங்கள் வகுப்பறையில் மொழிகள், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் மற்றும் வாழ்வியல் கல்வி என பல்வேறு வகையான பாடங்கள் தொடர்பாக விவாதத்தை ஏற்படுத்துகின்றன. பல்வேறு பாடத்திட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு பள்ளியின் பாடத்திட்டத்தை உருவாக்கி, பாடங்களுக்கு ஏற்ற படங்களையும் தேர்ந்தெடுத்தோம்.

இன்று தொழில்நுட்பம் என்பது நமது வாழ்க்கையின் தப்பமுடியாத பகுதியாக இருக்கிறது. கற்பித்தல், படித்தல் சூழல் உள்பட நம்முடைய வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கலந்திருக்கிறது. தொழில்நுட்பம் மேம்படுத்துவதோடு முடக்கவும் செய்கிறது. ஒருபக்கம், எல்லா தகவல்களும் நம்முடைய விரல்நுனியில் இருக்கின்றன. மறுபக்கத்தில், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்புக்கு அடிமையாகியுள்ள நிலையில், மாணவர்களின் கவனத்தைக் கவர்வதற்கு போராட வேண்டியிருக்கிறது.

சரியான முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், இணையதளம் வழியாக தகவல்களைப் பெற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லமுடிகிறது. அதே நேரத்தில், 24X7 மணிநேரமும் சுயசிந்தனை மற்றும் பகுப்பாய்வு செய்யும் திறனை தூண்டிவிடுவதும் சவாலான காரியம். திரைப்படங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ வழியாக கற்றுக்கொள்ளல், தொழி்ல்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான கற்பித்தல் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது. அதில் ஊக்கம் பெற்ற ஆசிரியர்கள், அவர்களுடைய மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை க்ரியேட்டிவ்வாக பயன்படுத்தி புதுமையான கற்றல் அனுபவத்தைத் தருகிறார்கள்.

ஆக்கம்: Baishali Mukherjee தமிழில்: தருண் கார்த்தி