பரெய்லி முதல் புது தில்லி வரை: டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கும் ராஷ்மி வர்மா

0

பன்னிரெண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்து பிறகு, மேப் மை இண்டியா(Mapmy India) எனும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனத்தை தொடங்க ராஷ்மியும் அவரது கணவரும் இந்தியாவிற்கு திரும்பினர். 1994ல் ஜி.ஐ.எஸ் துறையில் இறங்கி, டிஜிட்டல் வரைபடம், ஜிபிஎஸ் வழி செலுத்தல், இருப்பிடம் தொடர்பான சேவைகள், ஜி.ஐ.எஸ் மற்றும் இதையொத்த வணிக நுண்ணறிவு தீர்வுகள் ஆகிய துறைகளில் முன்னணியில் இருக்கிறது இந்நிறுவனம்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரெய்லி கிராமத்தில் பிறந்த ராஷ்மி, வெகு சிலப் பெண்கள் மட்டுமே பொறியியலை கையிலெடுத்திருந்த அந்த காலத்தில், ஐஐடி ரூர்கே பொறியியல் கல்லூரியில் படித்தார். பன்னிரெண்டு வருடம் அமெரிக்காவில் இருந்ததோடு சேர்த்து, மொத்தம் முப்பத்து நான்கு வருடங்கள் தொழில்நுட்பத்திலும், மேலாண்மையிலும் அனுபவம் இருக்கிறது ராஷ்மிக்கு. அதில் எட்டு வருடங்கள் ஐ.பி.எம்மில்,மேம்பட்ட மென்பொருளுடன் வேலை செய்திருக்கிறார்.

“ஐ.பி.எம்மின் முதன்மை தொழில்நுட்பத்தின் மீது எனக்கு கட்டுப்பாடு இருந்தது. எனக்கு அந்த தொழில்நுட்பம் மிக வசதியாக இருந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் அந்த தொழில்நுட்பம் புகழ்பெற்றதாக இருந்தாலுமே மேசைக் கணினி மீது கவனம் திரும்பியிருந்தது. நாங்கள் எங்களை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, அதனால், தொடக்கத்திலேயே, இருப்பிடத்தை அடித்தளமாகக் கொண்டு ‘ஜி.ஐ.எஃப்’ உருவாக்குதல் தான் தொழில்நுட்பத்தில் எங்கள் துறையாக இருக்கும் என அறிந்தோம்”.

மேப்மை இண்டியா(Mapmy India)

புதிதாக ஒன்றை தொடங்க வேண்டிய காரணத்தினால் தான் ராஷ்மியும் அவர் கணவரும் இந்தியாவிற்கு வந்தனர். ராஷ்மி, தனக்கு அனுபவம் இருக்கும் துறையில் எதையாவது தேர்ந்தெடுக்க விரும்பினார். வரைபடம் உருவாக்குவதையும், தயாரிப்பையும் பணியமர்த்துதலையும் ராஷ்மி கவனித்துக் கொள்கிறார்.

“எங்களுடைய வரைபடம் மற்றும் தரவு தயாரிப்புகள் விரிவானவை.மேலும், பல துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்பவையாகையால், இணைய வணிகம், தானியங்கி, கண்காணிப்பு, அரசாண்மை, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, அதிகப்படியான அடுக்குகளும், ஆயிரக்கணக்கான காரணிகளும் இருப்பதாய் அர்த்தம். இந்த அளவிலான தரவுகளை கட்டிப் பராமரிப்பது நிச்சயம் சவால் தான். புதிய தொழில்நுட்பங்களும், அணுகுமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதால், ஆற்றல்மிக்க சூழல் இருக்கிறது, அதில் வெற்றிகரமாகவும் இருக்கிறோம்.”

சர்வதேச நிறுவனங்களுக்கு மத்தியில், நிலைத்திருப்பதற்கு சவால்கள் தனியாக இருக்கிறது. தலைமை நிலையில், நிலைத்திருக்க விரும்பும் நிறுவனம், ஒரு ஸ்டார்ட்-அப் போலவும் சிந்திக்க வேண்டும் எனும் ராஷ்மி, “புதுமையும், பரிணாம வளர்ச்சியும் முடிவில்லாத செயல்பாடுகள். வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார், என்ன விரும்புவார் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஸ்டார்ட்-அப்களோ, பிரபல நிறுவனங்களோ - துணிவோடு இருப்பவர்கள் எப்பொழுதுமே முன்னிலையில் இருப்பர்” என்கிறார்.

தொழிநுட்பத்தினுடனான நீண்ட கால தொடர்பு, அமெரிக்காவின் வேலை செய்தது மூலம், தான் கற்ற மிகப் பெரிய பாடம் என ராஷ்மி சொல்வது, “ஐ.பி.எம்-ல் கற்றுக் கொண்டது என்னவென்றால், ஏதாவது ஒரு விஷயத்தில் சமரசம் ஆகிவிட்டால் அதனோடிருந்து, அதில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, அதில் ஏற்படும் முதல் சிக்கலின் போதே அதைக் கைவிடக் கூடாது. அந்த சிக்கலைத் தீர்வு செய்ய வேண்டும், அதைப் பொறுமையோடு செய்ய வேண்டும். ஏதாவது பிரச்சனை வந்த உடனேயே ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றிற்கு போகும் பலரைப் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்” .

இத்தனை வருடங்களில் அவர் கற்றுக் கொண்ட மற்றொன்று, புதுமையைப் பற்றி. “அமெரிக்காவில், மக்கள் தொழில்நுட்பத்தோடு வசதியாக இருந்தார்கள். புத்தக அறிவிற்காக என்பதையும் கடந்து, தொழில்நுட்பத்தை, செயல்களிலும் பயன்படுத்துவர். அவர்களால் தயாரிப்புகள் உருவாக்கவும், தீர்வு காணவும் இதை ஏற்றுக் கொள்ள முடிந்தது. ”

ராஷ்மியைப் பொறுத்தவரையில், இந்த எண்ண ஓட்டம் தான், இந்தியாவில் ஸ்தாபனத்தை நிறுவவும், அதை வளர்க்கவும் வைத்தது.

சேஃப்மேட் (Safe mate)

மேப் மை இண்டியா, சமீபத்தில் சேஃப்மேட் எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சேஃப்மேட்டின் மூலம், பயனரின் இருப்பிடத்தைக் கண்டறியலாம். ராஷ்மியைப் பொறுத்தவரையில், சேஃப்மேட் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“சேஃப்மேட்டின் தனித்தன்மையை வெளிப்படுத்துவது என்னவென்றால், அது வேறெந்த செயலியையோ அல்லது ஸ்மார்ட்ஃபோனையோ சார்ந்து இயங்குவதில்லை. அதைக் கொண்டு, நடைப்பயிற்சியின் போது பாதை மாறியோ, தொலைந்தோ போகும் முதியவர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கலாம், இடத்தையும் கண்டறியலாம். பள்ளிகள் மாணவர்களுக்காகவும், நிறுவங்கள் பணியாட்களுக்காகவும் இதை அளிக்கலாம். முக்கியமாக, இரவில் வெகு தாமதமாக பயணிப்பவர்களும், பாதுக்காப்பற்ற இடங்களில் தனித்து பயணிப்பவர்களும் இதை உபயோகிக்கலாம். காவல் துறை, பொது மக்களை இதை உபயோகிக்க சொல்லி பரிந்துரைக்கலாம். அதன் மூலம் சிறுவர்கள், பெண்கள், அக்கம்பக்கத்தார் ஆகியோரின் பாதுகாப்பும் மேம்படும்.”

வேலையும், வாழ்க்கையையும் சமன் செய்வது

வேலையையும், வாழ்க்கையும் சமன் செய்வது ராஷ்மி சந்தித்த மிகப் பெரிய சவால். அவருடைய குழந்தைகள் வளர்ந்துக் கொண்டிருந்த பொழுது, அவர் நீண்ட நேரங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும். வேலையில் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர், அதனால் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதும் முக்கியம். “ இந்த சவாலை கடக்க எனக்கு ஆதரவளிக்கும் கணவர் இருந்தது, மிக உதவியாக இருந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் வேலையைக் கவனித்துக் கொள்வோம், அவர் எனக்கு மிகவும் ஊக்கமாய் இருந்தார்.”

பெண்களுக்கு மட்டும், முன்னேற்றத்திற்கு தடை இருப்பது உண்மையா எனக் கேட்டால், உடனடியாக, “ நான் அப்படி நினைக்கவில்லை. மேப்மை இண்டியாவில் அப்படியில்லை. போதுமான அனுபவமும், திறமைகளும், வேகமும், முனைவும் இருந்தால் அவர்கள் எந்த நிலைக்கு வேண்டுமானால் போகலாம், அவர்களை யாரும் நிறுத்த முடியாது” என்கிறார்.

கலை

ராஷ்மிக்கு, இன்னொரு கலை முகமும் இருக்கிறது. அவர் முறையாக நடனம் பயின்றவர், பள்ளியிலும் கல்லூரியிலும், திருமணத்திற்கு பின்னரும் கூட நடனமாடியிருக்கிறார். பாரம்பரிய சங்கீதத்தை எனும் போது, தினமும் சாதகம் செய்கிறார். “மேடையில் பாடியதில்லை என்றாலுமே, சங்கீதத்தின் மேல் மரியாதை வைத்திருக்கிறேன், தியானத்தின் உயர் வடிவமாய் அதை கருதுகிறேன்.”