தங்கள் பாக்கெட் மணி சேமிப்பான ரூ.1.5 லட்ச ரூபாயை அரசு பள்ளி மேம்பாடுக்கு அளித்து உதவிய 4 மாணவர்கள்! 

0

பெங்களுரு கம்மனஹல்லியில் உள்ள கல்யான் நகர் ஆரம்பப்பள்ளி அத்தியாவசிய தேவைகள் இல்லாமல், படிப்பிற்கு தேவைப்படும் வசதிகளும் பழுதாகி அவசர தேவையுடன் இருந்தது. இதைப் பற்றி அறிந்த நான்கு மாணவர்கள் அந்த பள்ளிக்கு உதவ 1.5 லட்ச ரூபாய் சேர்த்து நன்கொடையாக தந்துள்ளார்கள். 

பத்தாம் வகுப்பு மாணவி நேஹா ரெட்டி, எட்டாம் வகுப்பு மாணவன் த்ருவா ரெட்டி, கல்லூரி மாணவி நிதி சங்கர் மற்றும் நான்காம் வகுப்பு தீக்‌ஷித்தா ஒன்று சேர்ந்து இந்த பணத்தை சேர்த்துள்ளனர். தங்களின் பாக்கெட் மணியிலிருந்து இதை சேர்த்து பள்ளி நிர்வாகத்திடம் மேம்பாட்டு பணிகளுக்காக கொடுத்துள்ளனர். ஆனால் இதைப் பற்றி அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவில்லை. உதவி கிடத்த பள்ளி அதிகாரிகளே அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் இந்த உதவியை பற்றி தெரிவித்துள்ளனர். 

டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பேசிய நிதி ரெட்டி,

“நாங்கள் எல்லா வசதியுடன் கூடிய பள்ளியில் படிக்கிறோம், ஆனால் இந்த ஏழை மாணவர்கள் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாமல் எப்படி படிப்பார்கள்? அதனால் எங்கள் பாக்கெட் மணியிலிருந்து பணத்தை சேமித்து பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தோம்.” 

நிதியின் வீட்டில் பணிபுரிபவர் அவரின் மகன் படிக்கும் ஆரம்பப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாதது பற்றி கூறியபோதே இக்குழந்தைகளுக்கு இந்த ஐடியா தோன்றியுள்ளது. நிதி தன் மற்ற மூன்று நண்பர்களிடம் இதை தெரிவித்து, அரசு பள்ளிக்கு தேவையான கழிப்பறை வசதி, வகுப்பறையில் பென்சுகள் மற்றும் வகுப்பறைகளை பெயிண்ட் அடிக்க தங்கள் சேமிப்பை கொடுத்து உதவினர். 

சில மாதங்களுக்கு முன், குர்கானைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் துஷார் மெஹ்ரோத்ரா, இதே போன்று ஒரு அரசு பள்ளிக்கு புத்தகங்கள் உட்பட பல வசதிகளை  செய்து கொடுத்தார். இதற்காக அவர், கூட்டுநிதி திரட்டல் மூலம் நிதி சேர்த்து அந்த பள்ளிக்கு உதவினார். அந்த நிதி கொண்டு பள்ளிக்கு பேன், குடிநீர் வசதி, போன்றவை செய்து கொடுக்கப்பட்டது. துஷார், வார இறுதி நாட்களில் அந்த பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு சம்மந்தமான வகுப்புகளை  எடுக்கிறார்.

கட்டுரை: Think Change India