'ஸ்டார்ட் அப் இந்தியா', 'ஸ்டேண்ட் அப் இந்தியா'- நிகழ்ச்சியைப் பார்க்க என்ன செய்ய வேண்டும்?

0

16, ஜன.2016.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘இது நடக்காது’ என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த விஷயம் அது. இன்று அது நாடே பார்க்க நடக்கவிருக்கிறது. இந்திய தொழில் முனைவு சரித்திரத்தில் ஓர் புதிய அத்தியாயம் இன்று உருவாக இருக்கிறது. ஆம், புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா’ (Startup India Standup India) என்ற செயல் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து தொழில் முனைவோரிடையே உரையாற்ற இருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு தொழில் முனைவோருக்கு அரசின் அர்ப்பணிப்பும் ஆதரவும் கிடைக்கும் தருணமிது.

ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா நிகழ்ச்சியை எப்படிக் காண்பது என்ற ஆவலா? இதோ, பல வழிகள் இருக்கின்றன:

(யுவர் ஸ்டோரியை ட்விட்டரில் தொடர @YourStoryCo. நேரடி ஒளிபரப்பைப் பார்க்க இந்த இணைப்பை சொடுக்கவும்: http://yourstory.com/tag/startup-india/

1.தொலைக்காட்சியிலும் (Doordarshan National (DD1) இதனைப் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்க: https://www.youtube.com/watch?v=X8T4Xnjuy0Q (மாலை 6 மணி முதல்)

2. அரசு இணையதளத்தில் பார்க்க: http://webcast.gov.in/startupindia/ (காலை 9.30 மணி முதல்)

3. பிரதமரின் இணையதளத்தில் காண ( மாலை 6 மணி முதல்) – http://pmindiawebcast.nic.in/

4. இவைதவிர இந்த இணையதளங்களும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன: https://www.edcast.com/…/watch-the-launch-of-startup-india-

ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டம் பற்றி…

மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை செயலர், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சூத்திரதாரியான அமிதாப் காந்த், நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தொழில் மற்றும் வணிகத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக ட்விட்டரில் ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கம் குறித்த உரையாடல்களில் மணிக்கணக்கில் ஈடுபட்டனர்.

இந்த தேசமே மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்த அறிவிப்பை (தொழில் முனைவோருக்கான செயல் திட்டம்) பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 16) வெளியிடுகிறார். தொழில்முனைவோருக்கு இருக்கும் கவலைகள், எதிர்பார்ப்புகள் குறித்து யுவர் ஸ்டோரியின் ஆய்வில் ஆயிரக்கணக்கான கருத்துக்களைக் குவித்திருக்கின்றனர்.

முதலீட்டைத் திரட்டுவது, வள ஆதாரங்களை சேகரிப்பது, எளிமையான விதிமுறைகள், தேவையற்ற சட்டங்களை நீக்குவது ஆகியவை குறித்துத்தான் அவர்கள் அதிகம் பேசியிருக்கின்றனர்.

தற்போது எல்லோருடைய கண்களும் தேசியத் தலைநகரை நோக்கிக்கொண்டிருக்கின்றன. அங்குதான் அரசு அதிகாரிகளும் தொழில்முனைவோரின் நட்சத்திரங்களான முதலீட்டாளர்களும் இணைந்து நாட்டின் தொழில் முனைவுச் சூழலை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்று ஆராயப் போகின்றனர்.

இன்று (16 ஆம் தேதி) நாள் முழுக்க நடக்க இருக்கும் இந்நிகழ்ச்சியில் சர்வதேச தொழில்முனைவுப் பயிற்சிப்பட்டறை நிகழ்கிறது. இதில் வல்லுநர்களின் கலந்துரையாடல்கள் இடம் பெறுகின்றன.

அதில் விவாதிக்கப்படும் தலைப்புகள்:

  • தொழில்முனைவுக்கும் புதுமைக்கும் கதவு திறப்போம்: இந்திய தொழில் முனைவோர் செழித்து வளர செய்ய வேண்டியது என்ன?
  • பெண்மையைக் கொண்டாடுவோம்: புதுமை படைக்கும் மகளிர் தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகள்!
  • டிஜிட்டலைசேஷன் இந்தியாவின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றும்…
  • சுகாதாரத் துறையில் நான்கு கால் பாய்ச்சலுக்கு என்ன செய்யலாம்?
  • எல்லோருக்கும் நிதிச்சேவை

விரிவான நிகழ்ச்சி நிரலுக்கு இங்கே சொடுக்கவும்.

தமிழில்: தூரிகை