வர்த்தகத்தில் போட்டியாளர் என்ன செய்கின்றனர் எனும் புரிதலை வழங்கும் ஸ்டார்ட் அப்  

கனெக்ட் இன்சைட்ஸ், புத்திசாலித்தனமான முடிவுகளை மேற்கொள்வதற்காக இணைய விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து ஒருங்கிணைந்த புரிதலை அளிகிறது. 

0

டெவலப்பர், புரோகிராமர் மற்றும் அனலிஸ்ட்டாக மென்பொருள் துறையில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியதே 37 வயதான சமீர் நர்கருக்கு வர்த்தக வளர்ச்சியில் பிக் டேட்டா மற்றும் சமூக ஊடகங்களை பங்கை புரிந்து கொள்ள போதுமானதாக இருந்தது. வர்த்தக நிறுவனங்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றும் மார்க்கெட்டிங் கருவியாக சமூக ஊடகம் விளங்குகிறது. இதனால் ஊக்கம் பெற்ற சமீர், 2011 ல் பல வித எண்ணங்களை முயன்று பார்த்தார்.

கனெக்ட் இன்சைட்ஸ் குழுவினர் 
கனெக்ட் இன்சைட்ஸ் குழுவினர் 

இதன் பயனாக அவருக்கு கனெட்க் இன்சைட்ஸிற்கான ஐடியா உண்டானது. சமூக ஊடகங்கள் மற்றும் இதர இணைய தரவிகளில் இருந்து புரிதலை பெறும், வலையில் கேட்கும் மென்பொருளை ('web listening software'), உருவாக்கினார். சமீர் புனே பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு பயின்றவர்.

“25 மில்லியன் இணையதளங்களை பார்வையிட்டு, உடனக்குடன் முடிவுகளை பட்டியலிடும் தேடியந்திரம் ஒன்றையும் உருவாக்கினோம். செய்திகளை புதிய கட்டத்திற்கும் கொண்டு செல்லும், பிரத்யேகமாக்கி கொள்ளக்கூடிய டாஷ்போர்டையும் உருவாக்கினோம். இன்று, கனெக்டை ஆற்றல் மிக்க சமூக புரிதல் கருவியாக மாற்றியுள்ள தரவுகள் தவிர, யுஐ/ யுஎக்ஸ் தான் எங்கள் பலமாக இருக்கிறது,” என்கிறார் சமீர்.

இணைய நெருக்கடி மேலாண்மை, தொழில் நிறுவன அளவீடு, சமூக ஊடக ஆய்வு மற்றும் சமூக சி.ஆர்.எம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை பெற்றிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

சொந்த நிதி

சொந்தமாக நிதி திரட்டி துவங்கிய நிறுவனம் ஆரம்ப மாதங்களில் சராசரியாக மாதம் ரூ. 3 லட்சம் தொகையை ஈர்த்துக்கொண்டது என்கிறார் சமீர்.

சமீர் கல்லூரி நாட்களில் சி மற்று சி ++ புரோகிராமிங் மொழிகளில் சிறந்து விளங்கியதால், மென்பொருள் துறையில் வாழ்க்கையை துவங்க ஆர்வம் கொண்டிருந்தார். மென்பொருள் துறையில் 7 ஆண்டுகள் பணியாற்றியது டிரைவேட்டிவ்கள், மியூச்சுவல் பண்ட் மற்றும் காப்பீடுகளுக்கான நிரல்களை எழுதும் வாய்ப்பை அளித்தது.

வர்த்தக வளர்ச்சிக்கு உதவி

இணையத்தில் மக்கள் தங்கள் நிறுவனம் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை வர்த்த நிறுவனங்கள் அறிந்து கொள்ள கனெக்ட்டின் சமூக ஊடக புரிதல் மற்றும் ஆய்வு மென்பொருள் உதவுகிறது. அனைத்து இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து தகவல்கலை திரட்டி, அதை குரல், உணர்வு மற்றும் பொருட்கள் டாஷ்போர்டு வழியே வகைப்படுத்தி அளிக்கிறது. செல்வாக்கு மிக்கவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள மற்றும் உரையாடலின் பலன் என்ன அறியவும் வழி செய்கிறது. கனெக்ட் இன்சைட்ஸ் 25 மில்லியன் இணையதளங்களில் இருந்து திரட்டப்படும் சொந்த தேடியந்திரம் மூலம் பயனர்களுக்கு புரிதலை வழங்குகிறது. பின்னர் இந்த தரவுகள் கொண்டு உடனுக்குடன் ஆய்வுகளை டாஷ்போர்டு மூலம் அளிக்கிறது..

“எளிமையாக சொல்வது என்றால், எங்கள் தேடியந்திர சிலந்திகள் கட்டிடங்களில் உள்ள எலிவேட்டர்களை போன்றவை. தரவுகளை திரட்ட, எங்களிடம் 25 மில்லியனுக்கு மேல் கட்டிடங்களும் அதற்கு மேல் எலிவேட்டர்களும் இருக்கின்றன. எங்கள் மென்பொருள் கட்டமைப்பு காரணமாக அதிக தரவுகளை சேமிக்க முடியும். இதற்கு மேல் முடிவுகள் விரைவாக வருவதற்காக லூசனே தேடல் உத்தியை பயன்படுத்துகிறோம். இந்த அடிப்படை நுட்பம் தான் வேறுபாட்டை அளிக்கிறது,” என சமீர் விளக்குகிறார்.

கனெக்ட் இன்சைட்ஸ், கீவேர்டு தேடல் மூலம் புரிதலை பெறுகிறது. நிறுவனங்களுக்கு டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். யூடியூப் ஆகிய சேனல்களுக்கான குறிப்புகளையும் அளிக்கிறது. இந்த புரிதல்கள் நிறுவனங்களுக்கு தங்கள் விளம்பர திட்டங்களின் வீச்சை புரிந்து கொள்ளவும், போட்டி நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று அறியவும் உதவுகின்றன. பெரிய அளவில் வாடிக்கையாளர் சேவை குழு இல்லாமலே சமூக சி.ஆர்.எம் மற்றும் பணிசார் விஷயங்களை தெரிந்து கொள்ள நிறுவனங்களுக்கு இது உதவுகிறது.

“இன்று 60 வாடிக்கையாளர்கள் உள்ளனர். கனெக்ட் இன்சைட்ஸ் ஒரு மென்பொருள் சேவை (எஸ்.ஏ.ஏஎஸ்) ஆகும். ஒவ்வொரு மாதமும் 6 புதிய வாடிக்கையாளர்கள் கிடப்பதால் மாதந்தோறும் 16 சதவீத வளர்ச்சி சாத்தியமாகிறது,” என்கிறார் சமீர்.

வளர்ச்சியை நோக்கி

மும்பையைச்சேர்ந்த கனெக்ட் 15 ஊழியர்களை கொண்டுள்ளது, அதன் சேவைம், ஆட்டோமொபைல், தொலைதொடர்பு, மொழுதுபோக்கு, ஐ.டி, மருந்தக துறை உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் ரூ.16 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.4 கோடி எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் சமூக ஊடக ஆய்வு சந்தை 2015 ல் 1.60 பில்லியன் டாலராக இருந்தது. ஆண்டு அடிப்படையில் இது 2020 ல் 5.40 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான வர்த்தக புரிதல் உத்தியில் இருந்து ஆய்வு சார்ந்த உத்திக்கு மாற்றம் மற்றும் சமூக ஊடக பயனாளிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்வது இந்த பிரிவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சமூக ஊடக ஆய்வு பிரிவில், சிம்பிளிபை360, கெர்மின்8, புளுஓஷன், எப்.ஆர்ரோல், என்மெடிரிக், இன்பைனட் ஆனலிசிஸ், கனெக்ட் சோஷியல் உள்ளிட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இணையதளம்: Konnect Insights

ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சவுத்ரி | தமிழில்: சைபர்சிம்மன்