அமிதாப், அம்பானி குடும்பத்தாரின் 'ஜோதிட-கட்டிடக்கலை நிபுணர்' யார் தெரியுமா?

0

குடும்ப ஜோதிடர் என்று கேள்வி பட்டிருக்கிறோம், அது என்ன ஒரு குடும்பத்தின் 'ஜோதிட-கட்டிடக்கலை நிபுணர்' என கேட்கத் தோன்றுகிறதா? ஜோதிட மணி, ஜோதிட ரத்தினம் போன்று இதுவும் ஏதோ ஒரு பட்டம் என எண்ணிவிட வேண்டாம். கட்டிடகலை நிபுணத்துவமும், ஜோதிட நிபுணத்துவமும் இணைந்த ஒரு துறை தான் ஜோதிட-கட்டிடக்கலை. ஜோதிடத் தொழிலில் இது ஒரு சிறப்புத்துறை என்று சொல்வதே சரியான விளக்கமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு ஜோதிட கலைஞர்தான் நீதா சின்ஹா. தற்போது, அமிதாப் பச்சன், அம்பானி குடும்பத்தினரின் ஆலோசகராக இவர் இருக்கிறார். நீதா சின்ஹாவைப் பற்றிய மேலதிக விபரங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

20 வருடங்களுக்கு முன்னர் நீதா சின்ஹாவுக்கு ஜோதிடத்தில் பூரண நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. ஒருநாள், வேதஜோதிடரும், புகழ்பெற்ற ஹோமியோபதி நிபுணருமான கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் சீடரான எல்.என்.குசுமாவை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனது ஜாதகத்தை குசுமா துல்லியமாக கணித்துக் கூறியவிதம் நீதா சின்ஹாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அத்தருணம் அவர் மனதில் வேதஜோதிடத்தை கற்றறிய வேண்டும் என்ற ஆவலை ஆழமாக விதைத்தது.

ஆவலை விட்டுவிலகாமல் அதன்படி வேத ஜோதிடம் கற்றறிந்தார். சுமார் 30,000 வீடுகளை தன் படிப்புக்காக ஆய்வு செய்தார். அதன் மூலம் வாஸ்து சாஸ்திரத்தில் தேர்ந்தார். ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வாஸ்துவை பின்பற்றி பல வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு வீட்டில் வசிப்பவருக்கும் ஒரே மாதிரியான பலன் கிடைப்பதில்லை என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் நீதா "ஒவ்வொரு வெற்றிடத்துக்கும் ஒரு ஜோதிட கட்டமைப்பு இருக்கிறது. அதற்கேற்றவாறு அது மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார்.

இத்தகைய பல்வேறு அறியப்படாத நுணுக்கங்கள் சார்ந்த மறைவியலை தனது தொழில்முறையாக தேர்ந்தெடுத்த நீதா சின்ஹா, தன்னை ஜோதிடக்-கட்டிடக்கலை நிபுணர் (ஆஸ்ட்ரோ-ஆர்கிடெக்ட்) என அழைத்துக் கொள்கிறார். ஜோதிடக்கலை, கட்டிடகலையின் கலவையே ஜோதிட-கட்டிடகலை எனும் துறை. இவரின் பணி, தனது வாடிக்கையாளர் காட்டும் இடத்தினை ஆராய்ந்து அதன் நேர்மறை, எதிர்மறை வீச்சு என்னவென்று எடுத்துரைப்பதே ஆகும்.

ஃபெங்சூயி, வாஸ்து போன்ற ஜோதிட முறைகளைப் போல் கட்டிட-ஜோதிட கலையில் குறிப்பிட்ட சட்டதிட்டங்கள் ஏதும் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்துக்கும் அதில் வசிக்கும் நபருக்கும் இடையேயான தொடர்பு சார்ந்ததே இந்தக் கலை.

நீதா சின்ஹா, ஜோதிட-கட்டிட நிபுணர்
நீதா சின்ஹா, ஜோதிட-கட்டிட நிபுணர்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஜோதிடம் இருக்கிறது:

இது குறித்து அவர் மேலும் விவரிக்கும்போது, "ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஜாதகம் இருக்கிறது. அதாவது ஒரு வீட்டில் 3 எதிர்மறை விளைவு தரும் இடங்களும், 9 நேர்மறை தரும் இடங்களும் இருக்கும். முதலில் எனது வாடிக்கையாளர் காட்டும் இடத்தின் கட்டமைப்பு வரைபடத்தை விரிவாக ஆராய்வேன். அதன் பிறகு நேர்மறை விளைவுகளைத் தரும் இடங்களை அதிகரித்து, எதிர்மறை விளைவுகளைத் தரும் இடங்களை குறைப்பேன்" என்கிறார்.

அவரது வாடிக்கையாளர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்கள். இருந்தாலும் பிரபலங்களே அடையாளமாக முன்நிறுத்தப்படுகிறார்கள். அந்தவகையில், அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், கரண் ஜோஹர், ஷாருக் கான், அம்பானி குடும்பத்தினர், பிர்லா குடும்பத்தினர், பிரபல கல்வி நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் என இவரது வாடிக்கையாளர்கள் பட்டியலுக்கு நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது.

இத்தகைய நட்சத்திர அந்தஸ்து குறித்து நீதா கூறும்போது, "எனக்கு இதில் பெருமையே. இருந்தாலும், இத்தகைய நட்சத்திர அந்தஸ்து இருப்பதால் பலரும் நான்
மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே ஆனவள் என தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. சாமான்யர்களையும் வரவேற்கிறேன். அவர்களுக்கு
உதவவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இந்த தொழிலின் மிகப் பெரிய சவாலே இதன் நம்பகத்தன்மையை பலரும் பல்வேறு கேள்விகளால் துளைத்து எடுப்பதே. அறிவியல் போல் செயல்முறை விளக்கங்களை கண்கூடாக காட்ட முடியாததாலேயே இது அறிவியல் என கருதப்படுவதில்லை. ஆனால், இத்தகைய சவால்கள் என்னை தடுத்து நிறுத்துவதில்லை எனக் கூறுகிறார் நீதா.

மேலும் நீதா கூறும்போது, "ஒரு ஜோதிட கலைஞராக நான் எனது வாடிக்கையாளரின் நேர்மறை சக்தியையும் இந்த பிரபஞ்சத்தின் சக்தியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். கிரகச்சாரங்களின் கட்டமைப்பின் அடிப்படையில் எனது கணிப்பு உருவாக்கப்படுகிறது. இது ஓர் புனிதயியல் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய கணிப்புக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாலேயே குறைந்த அளவிளான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை செய்ய முடிகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் நான் மட்டுமே ஜோதிட-கட்டிட நிபுணர். சமீப காலமாக என் மகள் அன்சு பொப்ளி இக்கலையை கற்றுக் கொண்டு வருகிறார்"
என்றார் பெருமிதத்தோடு.

15 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் நீதா. "பிரபல நடனக் கலைஞர் ஷாய்மக் தாவர் என்னை பெரும் பணக்கார குடும்பத்துக்குஒன்றுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு சொந்தமாக நகைக்கடை இருந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் லுகேமியாவில் பாதிக்கப்பட்டிருந்தார். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே அவருக்கு இருந்த ஒரே ஒரு வாய்ப்பு. ஆறு மாத காலம் மட்டுமே மருத்துவர்கள் அவர் உயிருக்கு உத்தரவாதம் அளித்திருந்தனர். அந்த தருணத்தில் அவர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். அந்தப் பெண்ணை நான் சென்று சந்தித்தபோது அவரது நிலைமை என்னை கலங்கச் செய்தது. அவரது கண்களில் ஏதோ எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுக்காக வாழ வேண்டும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே அது.

நான் அவரது வீட்டின் கட்டமைப்பை முழுமையாக படித்தேன். அந்த வீட்டில் ஆரோக்கிய ஸ்தானத்தில் பெரும் சிக்கல் இருப்பதை கண்டறிந்தேன். அதை சரி செய்தேன். அடுத்த 15 நாட்களில் ஒரு நல்ல செய்தி வந்தது. அவருக்கு ஏற்ற திசுக்கள் கொண்ட எலும்பு மஜ்ஜைகள் கிடைத்துள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கூறினர். அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மருத்துவர்கள் அவரது உயிருக்கு மேலும் 15 ஆண்டுகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்". 

இவ்வாறு தனது தொழில் வெற்றியை நினைவு கூர்ந்ததோடு புது வீடோ, அலுவலகத்துக்கான கட்டிடமோ, இடமோ வாங்கவுள்ளவர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையை அவர் கூறுகிறார். புதிய திட்டங்களை முன்னெடுக்கும் முன்னதாக என்னுடன் ஆலோசியுங்கள். எனது ஜோதிட கட்டிட கலை தனிச்சிறப்பானது என்கிறார்.

நீதா சின்ஹாவை www.neetasinha.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.