உஷார்...! உங்களின் வாட்ஸ் அப் சேட், போட்டோ, வீடியோக்கள் டெலிட் ஆகும் ஆபத்து காத்திருக்கிறது...

0

வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு ஒரு திகைக்க வைக்கும் தகவல்; அவர்களின் வாட்ஸ் அப் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் இதர சேமிப்புகள் டெலிட் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒன்று, இவ்வாறு டெலிட் ஆகாமல் காத்துக்கொள்ள எளிய வழி இருக்கிறது. நீங்களாக பேக்கப் செய்தால் போதுமானது.

இந்தத் தகவல் பற்றி மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், முதலில் கொஞ்சம் பின்னணி தகவல்கள். முன்னணி மேச்ஜிங் சேவையான வாட்ஸ் அப்பை செய்திகள் துவங்கி, புகைப்படம், வீடியோ, கோப்புகள் என எண்ணற்றவற்றை பகிர்ந்து கொள்ள பயன்படுத்துகிறோம்.

தகவல்களை பகிரவும், உரையாடவும் வாட்ஸ் அப்பில் பல வசதிகளும், அம்சங்களும் இருக்கின்றன. இவைத்தவிர வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்கள் பயனாளிகளின் கணக்கில் சேமிக்கப்படும். வாட்ஸ் அப் சேவையில் இதற்கு இடவசதி இல்லை என்பதால், இவை அனைத்தும் கூகுள் டிரைவ் கிளவுட் சேவையில் சேமிக்கப்படும்.

இது தொடர்பாக, வாட்ஸ் அப் மற்றும் கூகுள் இடையே உடன்பாடு இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவெனில் இந்த சேமிப்பு பயனாளியின் கூகுள் டிரைவ் சேமிப்பு கணக்கில் வரும் என்பதால் அதற்கு வரம்பு உள்ளது.

இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப் மற்றும் கூகுள் இடையே புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி வாட்ஸ் அப்பின் சேமிப்பு கூகுள் டிரைவ் கணக்கில் வராது. இதன் பொருள், வாட்ஸ் அப் சேம்ப்பிற்கு எந்த வரம்பும் கிடையாது. பயனாளிகள் நோக்கில் இது நல்ல விஷயம். ஆனால், இதில் உள்ள ஒரே சிக்கல் என்னவெனில், இந்த நடைமுறை அமலுக்கு வரும் நவம்பர் 12 முதல், கூகுள் நிறுவனம், ஒராண்டாக பேக்கப் செய்யப்படாத தகவல்களை டெலிட் செய்துவிடும் தான்.

எனவே வாட்ஸ் அப் பயனாளிகள் நவம்பர் 12 ம், தேதிக்கு பிறகும் தங்கள் தகவல்களை பேக்கப் எடுக்காமல் இருந்தால், அவை டெலிட் செய்யப்படும். இதனால் புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை இழக்க வேண்டி வர்லாம்.

இதை தவிர்க்க, வாட்ஸ் அப் தகவல்களை பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஆண்ட்ராய்டு போன்களுக்கான ஏற்பாடு. ஐபோன்களை பொருத்தவரை எல்லாம் ஐகிளவுட் சேவையில் சேமிக்கப்படுகிறது. பேக்கப் செய்வதன் மூலம் போனை மாற்றினாலும், சேவையை எந்த சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

வாட்ஸ் அப் தகவல்களை எப்படி பேக்கப் செய்வது எனும் சந்தேகம் இருந்தால், வாட்ஸ் அப் வலைப்பதிவில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. (https://faq.whatsapp.com/en/android/28000019/?category=5245251 )

பேக்கப் செய்யத்துவங்கும் முன் வைஃ-பை வசதியை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தரவிறக்கத்திற்கு கணிசமாக டேட்டாவும் செலவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.