தொழில்முனைவோர் சங்கமிக்கும் 'Startup Weekend CEG' மீண்டும் இந்த ஆண்டு உங்களுக்காக... 

1

ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் சிஇஜி தற்போது மீண்டும் இந்த ஆண்டு நடைப்பெற உள்ளது. Enantra குழு, இந்த விழாவிற்கு தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்முனைவில் ஆர்வம் உள்ளோரை வரவேற்க காத்திருக்கிறது. கூகிளுடன் இணைந்து நடைப்பெறும் இவ்விழா இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைப்பெற தயாராக உள்ளது. 

அண்ணா பல்கலைகழகத்தின் சிஇஜி நடத்தும் ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் 24-ம் தேதி இம்மாதம் தொடங்கி 26-ம் தேதி வரை நடைப்பெறும். வளர்ந்து வரும் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி, ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொடர்புகளை பெறுக்கிக் கொண்டு, தங்களின் ஐடியா’க்களை காட்சிப்படுத்தும் வகையில் இவ்விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உலகெங்கிலும் நடைப்பெறும் ஸ்டார்ட்- அப் வீக் எண்ட் விழா சுமார் 1000 நிகழ்ச்சிகள், 150 நாடுகளிலும் நடத்தி வருகிறது. சிஇஜி’யில் நடைப்பெறும் இவ்விழாவில் சுமார் 10 வழிக்காட்டிகள், சிறப்பு பேச்சாளர்கள், வெற்றி தொழில்முனைவர்கள் மற்றும் துறை வல்லுனர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஸ்டார்ட்-அப் வீக் எண்ட் சந்திப்பில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களின் புதிய ஐடியா, முயற்சி, நிறுவனம், குழு, தயாரிப்பு ஆகியவை பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். 

ஸ்டார்ட்-அப் வீக் என்ட் நிகழ்ச்சிகள்:

• 24-ம் தேதி, வெள்ளிக்கிழமை: பங்கேற்பாளர்கள் தங்கள் ஐடியாவை பிட்ச் செய்து மற்றவர்களை தங்களுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கலாம். குழுவாக இணைந்து ஐடியாவின் அடிப்படையில் செயல்பட தொடங்குவார்கள்.

• 25, 26-ம் தேதி, சனிக்கிழமை மற்றும் ஞாயிறு: விவாதங்கள், கருத்துக்கள், ஐடியாவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். ஒவ்வொரு ஐடியா குழுவும் இணைந்து மாதிரி தயாரிப்பை உருவாக்குவார்கள். வாடிக்கையாளர்கள், செயல்படுத்தும் முறைகள் குறித்து பணி செய்வார்கள். 

• ஞாயிறு: மாலை குழுக்கள் கருத்துக்களின் அடிப்படையில், வல்லுனரின் வழிக்காட்டுதலின் படி தங்கள் தயாரிப்பை/சேவையை காட்சிப்படுத்துவார்கள். 

யார் இதில் பங்குபெறலாம்?

தொழில்முனைவில் ஆர்வமுள்ள ஒரு தொழிலை கட்டமைக்க விரும்பும் எவரும் இதில் கலந்து கொள்ளலாம். கல்வித்தகுதி, பின்னணி என்று விதிமுறைகள் ஏதும் இல்லை. 

தொழில்நுட்பம், சேவை, தயாரிப்புகள் என்று பல துறைகளில் இருந்து தொழில்முனைவோர் கலந்து கொள்வார்கள். 

சென்னை ஸ்டார்ட்-அப் வீக்எண்ட்?

• அழுத்தமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இளம் தொழில்முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு. ஏஞ்சல் முதலீட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்புகளும் உண்டு. 

• ஒரே வார இறுதியில், ஐடியாவை யோசித்து, உருவாக்கி அதை செயல்படுத்த ஒரு வாய்ப்பு.  ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் தரும் ஊக்கம் உங்களின் கனவுகளை நிஜமாக்க வழி செய்யும். 

• ஒத்த கருத்துடைய பலரை சந்திக்கும் வாய்ப்பு. உள்ளூர் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் தலைவர்களை சந்தித்து ஆலோசனைகள் பெறமுடியும். 

• உலகம் முழுதும் உள்ள ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் முன்னாள் உறுப்பினர்களுடன் கருத்து பரிமாறிக்கொள்ள வாய்ப்பு. 

ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் சென்னையில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றால், மொபைல் மற்றும் வெப் ஆப் உருவாக்க 300 டாலர் மதிப்பிலான கூகிள் க்ளவுட் தளத்திற்கான பரிசு பெற வாய்ப்பு உள்ளது. இலவசமாக .co டொமைன் பெறவும் முடியும். நீங்கள் எதிர்ப்பார்க்கும் இணை நிறுவனர்களை பெற உதவும் நிகழ்வு இது. 

ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் சென்னையில் கலந்து கொள்ள ரெஜிஸ்டர் செய்யுங்கள். டிக்கெட் விற்பனை தொடங்கியது. மாணவர்களுக்கு 50% தள்ளுபடி உள்ளது. 

பதிவு செய்ய: Enantra

For any queries, mail us at sw@enantra.org or reach us at +91 98433 32244, 91 97911 14903