குடுத்துட்டு இருக்க வேணாம், இருந்துட்டு வாங்கிட்டு போலாம்..!

முடிந்தால் சாப்டுட்டு கூட போகலாம். தெளிவா புரிய மேலும் படிக்கவும். 

1

ரூ.2 கொடுத்து கழிவறையை பயன்படுத்த சொல்லும் 'தி டாய்லெட் கார்டன்'

'தி டாய்லெட் கார்டன்'. இது ஒரு கஃபே. இவர்கள் நோக்கம் சுகாதாரம் மேம்படவேண்டும் என்பதே. காசு கொடுத்து கழிவறையை பயன்படுத்தும் பழக்கத்தை இவர்கள் தலைகீழாக மாற்றி நாங்கள் பணம் தருகிறோம் நீங்கள் கழிவறையை உபயோகப்படுத்துங்கள் எனக் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு தைவான் நாட்டில், கழிவறையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பல கஃபேக்கள் உள்ளன. ஆனால் அகமதாபாத்தில் சுகாதாரம் குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு கஃபே உருவாகி உள்ளது.

சபர்மதி ஆஷ்ரம் அருகிலேயே நீங்கள் ’தி டாய்லெட் கார்டனை’ காண இயலும். இயற்கை எழில் சூழ உங்களை வரவேற்க காத்துநிற்கும். அதனுள் எண்ணற்ற கழிவறை உபகரணங்கள் நீங்கள் அமர தயாராக இருக்கும். ஆனால் அமர்ந்து சுவையாக ஒரு கோப்பை காஃபி அல்லது தேனீர் நீங்கள் அருந்தலாம்.

"ஏழ்மை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்கு ஒரு தடை அல்ல" என்பன போன்ற வாசங்கங்கள் அங்கு உங்களை வரவேற்கும். ஒரு நூற்றாண்டிற்கு முன்பு மஹாத்மா காந்தி அவர்கள் கூறிய கருத்துக்களை மட்டுமல்ல, சுகாதாரத்தை இந்தியாவின் முதன்மை தேவையாக மாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

மந்திரிகளுக்கும் மக்களுக்கும் சரிசம அளவிலான சுத்தமும் சுகாதாரமும் இருத்தல் அவசியம் என கூறிய காந்தி, 

சுகாதாரம் இந்தியாவின் விடுதலையை காட்டிலும் முக்கியமானது என வலியுறுத்தினார். மேலும், கழிவறைகள் நாம் குடியிருக்கும் வீடு போல சுத்தமாக இருப்பது அவசியம் எனக் கூறினார்.

இந்த கஃபேக்கான விதை விதைக்கப்பட்டது 70ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விடுதலையின் போது. ஈஸ்வர்பாய் படேல் அப்போது அவரது வயது வெறும் 10. அவரது ஆசிரியர் கோபால் தாதா வகுப்பில் வெட்ட வெளிகளில் மலம் கழித்தல் குறித்தும், மலத்தை மனிதர்கள் அகற்றுவது குறித்தும், அந்த ஜாதி மக்கள், மற்றவர்களால் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது குறித்தும் பேசியபோது திகிலுற்று அமர்ந்திருந்தார்.

1950-களில் ஈஸ்வர்பாய் படேல் கல்லூரி முடித்த பின்பு, அவரது மனம் கூறியதை நிறைவேற்ற நினைத்தார். பல்லாயிரக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க அயராது பாடுபட்டார். வெகு விரைவாக அவரது முயற்சிகளை பாராட்டும் விதமாக அனைவராலும் "மிஸ்டர் டாய்லெட்" என அழைக்கப்பட்டார். மேலும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டி கீழ் ஜாதி என ஒதுக்கப்பட்டிருந்த மக்களையும் காப்பாற்றினார். அவர்கள் கோவிலுக்குள் செல்ல வழி அமைத்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு பயணித்தார். நமது அமைப்பில் உள்ள ஓட்டைகளை புரிந்துகொண்டார். மேலும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்பினார். டிசம்பர் 26, 2010 ஆண்டு 77 வயதில் காலமானார். அவரது வரலாறு சுத்தத்தையும் சுகாதாரத்தையும் முன்னெடுத்து வைக்கும்.

தற்போது இந்தியாவில் 600 மில்லியன் மக்கள் இன்றும் வெட்ட வெளிகளில் மலம் கழிக்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை. சமீபத்தில் நடந்த ஆய்வுகள் படி, 52.1% மக்கள் (கிராமங்களில் வாழும் மக்களில் பாதிக்கும் மேல்) இன்றும் திறந்த வெளிகளைத்தான் தங்களது கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய ஆரோக்கிய மற்றும் சுகாதார சிக்கலாகும்.

2019-திற்குள், இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டும் என்பது நமது பிரதமரின் விருப்பமாகும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டாகும். அரசு ஒரு புறம் அதன் கருத்துகளை கழிப்பிடங்கள் கட்டுவதன் மூலமும், திறந்த வெளி மலம் கழித்தலை ஒழிக்கவும், குப்பை மேலாண்மை பற்றியும் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்க, தன்னால் இயன்றதை இந்த கஃபேயும் செய்கின்றது.

வாரத்திற்கு இருமுறை இந்த கஃபே திறந்திருக்கும். ஆசிரமம் நடந்தும் நிகழ்ச்சிகளுக்கோ, அல்லது சபய் வித்யாலயா நடத்தும் நிகழ்வுகளுக்காகவோ பயன்படுத்தப்படும் என்கிறார் மதுசூதனன். அங்கு தன்னார்வலராக பணிபுரிகின்றார்.

திறந்த வெளியில் மலம் கழித்தலை எதிர்த்து இந்தியா போராடிக்கொண்டிருக்க, எண்ணங்களை தூண்டும் சில புகைப்படங்கள் உங்களுக்காக.

ஈஸ்வர்பாய் படேல், சபய் வித்யாலயா நிறுவனர் மற்றும் தி டாய்லெட் கார்டன் காரணகர்த்தா.
ஈஸ்வர்பாய் படேல், சபய் வித்யாலயா நிறுவனர் மற்றும் தி டாய்லெட் கார்டன் காரணகர்த்தா.
"யத்தின் பாண்டிய"  பிரபலமான பொறியாளர் உருவாக்கிய தி டாய்லெட் கார்டன்.
"யத்தின் பாண்டிய"  பிரபலமான பொறியாளர் உருவாக்கிய தி டாய்லெட் கார்டன்.
மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழிகள் உங்களை வரவேற்கும்.
மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழிகள் உங்களை வரவேற்கும்.
ஒரே நேரத்தில் இங்கு 25 முதல் 30 பேர் வரை அமர இயலும். அமர இவர்கள் வைத்திருக்கும் கழிவறை உபகரணங்கள் தான் இங்கு முக்கிய ஈர்ப்பு.
ஒரே நேரத்தில் இங்கு 25 முதல் 30 பேர் வரை அமர இயலும். அமர இவர்கள் வைத்திருக்கும் கழிவறை உபகரணங்கள் தான் இங்கு முக்கிய ஈர்ப்பு.
சுத்தம் சுகாதாரத்தை வலியுறுத்தும் வாசகங்கள்.
சுத்தம் சுகாதாரத்தை வலியுறுத்தும் வாசகங்கள்.
அவர்கள் வளாகத்தில் "பயோ காஸ்" ஆலை உள்ளது. அங்கு மனித கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
அவர்கள் வளாகத்தில் "பயோ காஸ்" ஆலை உள்ளது. அங்கு மனித கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
 பள்ளி நிறுவனரின் நினைவிடம்.
 பள்ளி நிறுவனரின் நினைவிடம்.
அங்கு பணிபுரியும் பணியாளர்கள்.
அங்கு பணிபுரியும் பணியாளர்கள்.
கழிவறையை வருபவர்கள் உபயோகித்து முடித்தவுடன் அவர்களுக்கு 2 ரூபாய் கொடுக்கப்படுகின்றது. சுகாதாரத்தை ஊக்குவித்ததற்காக.
கழிவறையை வருபவர்கள் உபயோகித்து முடித்தவுடன் அவர்களுக்கு 2 ரூபாய் கொடுக்கப்படுகின்றது. சுகாதாரத்தை ஊக்குவித்ததற்காக.
இங்கிருக்கும் மேஜைகளும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
இங்கிருக்கும் மேஜைகளும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
திறந்தவெளி அரங்கமும் இங்கு அமைந்துள்ளது.
திறந்தவெளி அரங்கமும் இங்கு அமைந்துள்ளது.
அங்கு நடக்கும் நிகழ்வுகள் சில.
அங்கு நடக்கும் நிகழ்வுகள் சில.

ஆங்கில கட்டுரையாளர் மற்றும் படங்கள்: ஷ்ருதி மோகன்