பேராசிரியர் பணியைத் துறந்து விவசாயி ஆகி காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் வல்லாரி சந்திராகர்!

1

சத்தீஸ்கரைச் சேர்ந்த 27 வயதான ஒரு பெண், நல்ல வருமானத்துடன்கூடிய பொறியாளர் பணியைத் துறந்து விவசாயத்தை தேர்ந்தெடுத்தார். வல்லாரி சந்திராகர் கணிணி அறிவியல் பிரிவில் எம் டெக் முடித்தார். துணை பேராசிரியராக கல்லூரியில் பணி கிடைத்தது. எனினும் அவர் அந்தப் பணியைத் துறந்துவிட்டு 27 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்தை துவங்கினார். தற்போது இவரது நிலத்தில் விளையும் காய்கறிகள் துபாய், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்நிலையில் உள்ளது.

வல்லாரி பக்பாஹர மாவட்டத்திலுள்ள தனது கிராமத்திற்குத் திரும்புவதற்காக ராய்பூரில் தனக்குக் கிடைத்த பணி வாய்ப்பை ஒதுக்கினார். இவர் விவசாயத்தைக் காட்டிலும் வேறு எந்த பணியும் முக்கியமில்லை என்று நம்புகிறார். விவசாயப் பணிகளுக்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் என்றாலும் இதன் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எங்கும் கிடைக்காது என்பதே இவரது கருத்து. சந்தையில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக விவசாயப் பணி முன்பைக் காட்டிலும் எளிதாகியுள்ளது என்கிறார்.

விவசாயத்தை நோக்கிய வல்லாரியின் பயணம் 2016-ம் ஆண்டு துவங்கியது. விவசாயம் சார்ந்த தொழில்நுட்பத்திற்கான சந்தையை உருவாக்கினார். தைனிக் பாஸ்கர் செய்திததியின்படி அவர் கூறிவதாவது,

என்னுடைய பணியைத் துறந்து விவசாயத்தைத் துவங்கியபோது கிராமவாசிகள் பலர் என்னை படித்த முட்டாள் என்றே அழைத்தனர். எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக யாரும் விவசாயத்தில் ஈடுபடவில்லை. இதனால் ஆரம்பத்தில் விவசாயிகள், சந்தை, விற்பனையாளர்களை போன்றவற்றை கையாள்வதில் சிரமங்களை சந்தித்தேன்.

ராய்பூர் வானிலை ஆய்வு மையத்தில் பொறியாளராக பணியாற்றும் அவரது தந்தை பண்ணை வீடு அமைப்பதற்காகவே நிலத்தை வாங்கினார். வல்லாரி விவசாயம் செய்வதற்காக அந்த நிலத்தை பயன்படுத்திக்கொண்டார். இந்தப் பணியில் ஈடுபடுவதற்காக துர்கா கல்லூரியில் துணை பேராசிரியர் பணியை விட்டு விலகினார்.

வல்லாரியின் நிலத்தில் விளையும் காய்கறிகள் இந்தியா முழுவதும் இண்டோர், நாக்பூர், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய், பாகற்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை தனது நிலத்தில் பயிரிடுகிறார் வல்லாரி. இந்த முறை துபாய் மற்றும் இஸ்ரேல் நாடுகளிலிருந்து தக்காளி மற்றும் பாகற்காய் ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இன்னும் 60-75 நாட்களில் இவை அறுவடைக்கு தயாராகிவிடும்.

வல்லாரி விவசாயத்தில் புதிய நுட்பங்களை பயின்றார். விவசாயிகளுடன் சிறப்பாக தொடர்பில் இருக்க உள்ளூர் மொழியை கற்றுக்கொண்டார். நிலத்தில் பணிபுரியும் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த புதிய நுட்பங்கள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தினார்.

வல்லாரி வழங்கும் காய்கறிகளின் தரம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அவரது நிலத்தின் விளைச்சலுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. அவர் தனது பணியை மாலை 5 மணிக்கு முடித்துக்கொள்கிறார். அதன் பிறகு கிராமத்திற்குச் சென்று 40 மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் கணிணி அறிவியல் வகுப்புகள் எடுக்கிறார்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL