முதியோர்களின் வாழ்வில் இளங்காற்றை வீசும் ட்ரிபேகா கேர்!

மூத்த குடி மக்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத் தேவைகளுக்கான முன் முயற்சியையும் முதலீட்டையும் வடிவமைப்பதில் ட்ரிபேகா கேர் உதவி புரிந்து வருகிறது.

0

உலகில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. எனவே மூத்த குடி மக்களின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முதியோர் இல்லப் பராமரிப்பைப் பொறுத்தவரை மிகவும் பின் தங்கியே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமான தனியார் இல்லங்களே முதியோர்க்கு புகலிடம் அளித்து வருகின்றன. அவையும் தரந்தாழ்ந்த சேவையை அளிப்பனவாகத் தட்டுத் தடுமாறி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் முதியோர் இல்லங்களின் தரம் மேம்படுத்த வேண்டிய நிலையில் தான் உள்ளது. இந்தச் சூழலில் தான் பிரதீப் சென், எலினா தத்தா, சிபாஜி ஷா, ரிதேந்திரா ராய் ஆகியோருடன் தாமோஜித் தத்தா "ட்ரிபேகா கேர்" (Tribeca Care) இல்லத்தை கொல்கத்தாவில் 2013 ஆம் நிறுவியுள்ளார்.

மருத்துவ உதவி இல்லச் சேவை, மீட்பு நிவாரணம், மருத்தவர்களின் வருகை, ஏழு நாட்களும் 24 மணி நேரத்திற்கும் அவசர கால அக்கறை, மருத்துவ சாதனங்கள் போன்றவை முதியோர் இல்லங்களில் முற்றிலும் இல்லாத சூழலில் முதியோர் இல்லம் என்பதற்கு முன்னுதாரண அமைப்பாக விளங்குகிறது ட்ரிபேகா கேர்.

ட்ரிபேகா கேரின் தலைமை அதிகாரி தாமோஜித் தத்தா கூறுகிறார், "பத்து கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் உள்ள மூத்த குடிமக்கள் குறைந்த அளவிலான ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு பெற்றும் பெறாமலும் உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ உள் கட்டமைப்பு, பயிற்சி, தொழில் நுட்பம், நிபுணத்துவம் ஆகியவற்றின் தேவை மிகப் பிரமாண்டமாக உள்ளது. இத் தேவைகளுக்கான முன் முயற்சியையும் முதலீட்டையும் வடிவமைப்பதில் ட்ரிபேகா கேர் உதவி புரிந்து வருகிறது.

தாமோஜித் தத்தா
தாமோஜித் தத்தா

42 வயதான தாமோஜிட், முதலீட்டு வங்கி, நிதிப்பரவல், மருத்துவ வசதி ஆகிய துறைகளில் பதினாறு வருட அனுபவம் பெற்றுள்ளார். ட்ரிபேகா கேர் அமைப்பின் இணை நிறுவனராக பொறுப்பேற்பதற்கு முன், டாய்ட்சே வங்கியில் மூத்த வங்கியாளராக இருந்தார். அதற்கு முன்பு இந்தியாவில் சிட்டிபேங்க் & க்ளாஸ்கோமித்கின் இல் பணி புரிந்தார். தாமோஜித் தனது நிர்வாக மேலாண்மைக் கல்வியை அகமதாபாத் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியிலும், லண்டன் பிசினஸ் பள்ளியிலும் முடித்தார்.

நிதியாதாரம்

தனது ஆரம்பக்கட்ட முதலீட்டை முழுவதும் உள்முகமாகவே திரட்டிக் கொண்டது ட்ரிபேகா கேர். இருந்தாலும் இதனை தேசிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்திற்காக தொழில் முதலீட்டாளர்களுடனும், தொலைநோக்கு அடிப்படையில் கூட்டு முதலீட்டாளர்களுடனும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியுள்ளது.

அதுபற்றி தாமோஜித் கூறுகையில்,

"வளர்ச்சி முதலீட்டை, முக்கிய பொறுப்பிற்கு திறனாளர்களை அமர்த்தவும், புதிய சந்தையில் நுழையவும், ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், சிறந்த உள் கட்டமைப்பை உருவாக்கவும், முதியோர் இல்லங்களுக்குச் சென்று சேவை அளிப்பதிலும் பயன்படுத்த இருக்கிறோம்".

தொழில் முன்னோட்டம்

முதியோர் இல்ல உள் கட்டமைப்பிற்கு முதலீடு செய்வதில் துவங்கி முன்னிலை ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது வரை இத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் எண்ணற்றதாக மலிந்து கிடக்கின்றன. இத்துறையில் மிகப்பெரிய சவாலாக இருப்பது, முதியோரைப் பராமரிக்கும் விதம், அதற்குரிய பயிற்சியைப் பெறாத ஊழியர்கள் தான் இங்கு இருந்து வருகின்றனர்.

இத்துறைக்கான தொழில் சந்தை ஆய்வின்படி, அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் முதியோர் இல்லத் தொழிலில் பல ஆண்டுகளாக 400 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து வந்துள்ளது. அதே நேரம் இந்தியாவில் மூன்று பில்லியன் முதலீட்டில் ஆண்டிற்கு இருபது சதவீத வளர்ச்சியில் வளர்ச்சிக்கான கட்டத்திலேயே இன்னும் இருந்து வருகிறது. இந்தியாவில் தனியார் துறை நிறுவனங்கள் முதியோர் இல்லத் தொழிலுக்கு சரியான வடிவம் கொடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தாமோஜித் சொல்கிறார்,

"மனித ஆயுள் உயர்ந்து வருவதாலும், முதியோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதாலும் (தற்போது முதியோர் எண்ணிக்கை 110 மில்லியன் இது 2050 ஆம் ஆண்டில் 300 மில்லியனாக இருக்கும்) இந்த ‘சில்வர் சுனாமியை’ எதிர்கொள்ள நாம் சமூக அளவில் இன்னமும் தயாராகத நிலையில் இருக்கிறோம்.

சேவை நிர்வாகம்

ட்ரிபேகா கேர், இங்கு முதியோர்களுக்கான மருத்துவ உதவி, மருத்துவர்களை நோயாளிகளின் இல்லங்களுக்கு அனுப்புதல், உடல் நல மருத்துவ உடல் பயிற்சி சிகிச்சை, பேச்சு சிகிச்சை, இல்லத் தாதி சேவை, டிமென்ஷியா சிகிச்சை, தொடர் நல ஆய்வு, மருத்துவ சாதனங்கள் வாடகைக்கு வழங்குதல், , இல்லங்களுக்குச் சென்று இலவச மருந்து அளித்தல், மருத்துவம் அல்லாத பிற சேவைகள் அளித்தல் தனிக்கவன கண்காணிப்பு, தனி உதவியாளர்கள் அளித்தல், பயற்சி பெற்ற உதவியாளர்கள் மூலமாக நட்புறவு அளித்தல், உடனிருந்து வசித்தல், நிதி மற்றும் சொத்து மேலாண்மைப் பராமரிப்பு அளித்தல், அவசர கால கவனிப்பு, 24/7 அவசர உதவித் தொடர்பு, முதியோர் எச்சரிக்கை சேவை, மருத்துவமனையுடன் கூடிய அவசர வாகன சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

தாமோஜியின் கூற்றுப்படி பல்வேறு சேவைக்கான தேவைகள் மிகவும் அதிகமான அளவில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மருத்துவமற்ற பிற உதவிகளை அளிப்பதில் ட்ரிபேகா கேர் தனித்துவத்துவமான பெயருடன் விளங்கி வருகிறது.

"மாறுபட்ட தயாரிப்புகளாலும், சேவைகளாலும் அளவற்ற இடைவெளியை நிரப்பி வருகிறது ட்ரிபேகா கேர். குறிப்பிடத்தக்க அளவிலான தீர்வுகளை உருவாக்குவதற்காக நிலம், வீடு வாங்கி விற்கும் தொழிலிலும், சரக்குச் சேவை, பயிற்சி அளித்தல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறையில் ட்ரிபேகா கேர் கணிசமான முதலீடு செய்துள்ளது’’ என்கிறார் தாமோஜித்.

ட்ரிபேகா ஒரு முன்மாதிரி

உறுப்பினர் சேவைத் திட்டம் அல்லது பணம் கட்டித் தங்கி சேவை பெற்றுச் செல்லுதல் ஆகிய அடிப்படையிலும் தனது சேவையை அளித்து வருகிறது ட்ரிபேகா கேர். வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் கட்டண சாத்தியங்களின் அடிப்படையிலும் வெவ்வேறு விதமான திட்டங்கள் துவக்க நிலையில் உள்ளன.

இது பற்றி தாமோஜித் கூறுகையில், "மாதம் ரூபாய் 250 குறைவான கட்டணத்தில் இருந்து எமது சேவை துவங்குகிறது. வீட்டில் வந்து சேவை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற செலவினமிக்க சேவைத் திட்டங்களும் எம்மிடம் உண்டு .

விரிவாக்க வாய்ப்பு

ட்ரிபேகா கேர் துவங்கிய 18 மாதங்களிலேயே கிழக்கிந்தியாவில் குறிப்பிடத் தக்க அளவு பிரபலம் பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 10 பெருநகரங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் பணப் பரிவர்த்தனையில் 500 கோடி ரூபாயை இலக்காக நிர்ணயித்துள்ளது நிர்வாகம்.

முதியோர் மருத்துவ பாதுகாப்பு இல்லத் துறையானது மிகவும் பரந்த ஒன்று. இது 98% இன்னமும் முறைப்படுத்தப்படாததாகவே இருந்து வருகிறது. இத்துறையில் அமைப்பு ரீதியாகச் செயல்படுபவர்கள் நான்கு பெரிய நிறுவனங்கள் தாம். அவை ட்ரிபேகா கேர், போர்டீ மெடிக்கல், மெட்வெல் மற்றும் இண்டியா ஹோம் ஹெல்த் கேர்.

இணையதள முகவரி: Tribeca Care