ஈரோட்டில் நாளை நடைபெறும் விவசாய தொழில்நுட்ப மாநாடு!

0

TiE கோயம்புத்தூர் நடத்தும் 'அக்ரிடெக் மாநாடு 2016' ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

இந்தியாவில் விவசாயத்துறை

விவசாயமும் அதனுடன் தொடர்புடைய துறைகளும், இந்தியாவின் கிராமப்புறங்களில் மிகப்பெருமளவில் முக்கிய வாழ்வாதாராமாக உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் விவசாயம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை வகித்து வருகிறது. பேணத்தக்க விவசாயம், உணவு பாதுகாப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் மண் பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் ஆகியன முழுமையான கிராமப்புற வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. நீலப்புரட்சி, மஞ்சள் புரட்சி, வெண்மை புரட்சி மற்றும் பசுமைப் புரட்சி போன்றவற்றிற்கு இந்திய விவசாயமும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளும் காரணமாக அமைந்துள்ளன.

தற்போது, இந்தியாவின் 51% மனித உழைப்பு, விவசாயம் மற்றும் அது தொடர்பான மீன் வளர்ப்பு, வனவியல் உள்ளிட்ட துறைகளில் செலவழிக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் அதிகபட்ச கால அளவுகளிலும், இந்தியா ஒரு விவசாய சமூகமாகவே தொடரும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் நமது நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் மக்கள்தொகையும் அதனுடன் அதிகரித்து வரும் வருமானமும் தானிய மற்றும் தானியமல்லாத பயிர்களின் தேவையை அதிகரிக்கவே செய்யும். எனவே, இந்திய விவசாயம் இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருடத்திற்கு 4 சதவீதம் என்ற வீததில் வளர்ச்சி விகிதத்தை தக்கவைக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்திய அரசின் முயற்சிகள் 

சமீப காலங்களாக, இந்திய விவசாயத்தை வணிகமயப்படுத்த விவசாய அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 4 சதவீத வளர்ச்சி இலக்கை அடைய தேவையான உத்திகள் வகுக்கப்பட்டு, அது தொடர்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சாத்தியமான பகுதிகள், மண்டலவாரியாக வேறுபடும் உத்திகள், பயிர்களை பிரித்தல், துல்லியமான விவசாயம் மற்றும் இயற்கை வளங்களை கையாள அறிவியற்பூர்வமான மேலாண்மை போன்றவற்றிற்கு இந்த திட்டங்கள் தீவிர கவனத்தை செலுத்துகின்றன. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்ற பெயரில் மத்திய விவசாயத்துறையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புது முயற்சி, விவசாயத்துறைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் நோக்கத்தை கொண்டது. தற்காலத்தில், போதுமான அளவு உற்பத்தி மற்றும் உணவு வினியோகம் என்பது உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. வேகமாக மாறி வரும் உலகம் மற்றும் உலகமய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் போட்டி ஆகிய சூழல்கள், நிலுவையிலிருக்கும் வளங்களை, உலகில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகபட்ச அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இது, உள் நாட்டு உணவுத் தேவைகளை சமாளிக்கவும், வெளி நாடுகளுக்கு தேவையான உணவை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான பங்களிப்பை நல்கவும் உதவும்.

விவசாயம் குறித்த உலகளாவிய பார்வை/விவசாயத்தை இயந்திரமயமாக்கல் :

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் ஜப்பான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் உயர்தர விவசாயக் கருவிகளுக்கான சந்தையில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஃபெடர் உனகோமா அறிக்கையின்படி, இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டில் 6,20,000 ட்ராக்டர்கள் விற்பனை செய்து, உலகின் மிகப்பெரிய சந்தையினை கொண்டுள்ளது. இதன் மூலம், இந்தியா விவசாய கருவிகளின் மிகச் சிறந்த சந்தையாக இருந்து வருகிறது என்பது புலனாகிறது.

உணவு உற்பத்தியில் தன்னிறைவை பெறும் வகையிலும், விவசாய வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சியின் வழியில், TiE (டை) கோயம்பத்தூர், 'அகிரிடெக் இந்தியா 2016' (AgrtTech 2016) என்ற விவசாய மாநாட்டை செப்டம்பர் 3 ஆம் தேதி நடத்த திட்டமுள்ளது. இதன் ஒரு பகுதியாக 27 ஆகஸ்ட் 2016 அன்று ஈரோட்டில் விவசாய கண்காட்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வானது, ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களுக்கு மதிப்புக் கூட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அகிரிடெக் இந்தியா 2016 வளர்ந்து வரும் விவசாயிகளுக்கும், மொத்த விற்பனையாளர்களுக்கும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும் மேலும் இந்த துறையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்கள் என அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக இருக்கும்.

ஈரோட்டை தேர்வு செய்தது ஏன் ?

இந்த மாவட்டத்தில் விவசாயம் மிக முக்கிய வருமான மூலமாக இருந்து வருகிறது. நெல், வாழை, காட்டன், மஞ்சள், தேங்காய் மற்றும் கரும்பு ஆகிய சில முக்கிய விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் இங்கு உற்பத்திச் செய்யப்படுகின்றன. தமிழ் நாட்டில் 43% அளவிலான மஞ்சளை உற்பத்தி செய்வதன் மூலம், இம்மாநிலத்திலேயே அதிகளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாக ஈரோடு இருந்து வருகிறது. இதனாலேயே ஈரோடு மஞ்சள் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது போன்றே ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம்; வாழை, தேங்காய் மற்றும் வெள்ளைப்பட்டு ஆகிய விவசாய விளைபொருட்கள் உற்பத்தியில் இந்த மாவட்டத்தை தமிழக அளவில் முன்னணியில் வைக்கிறது. ஈரோட்டின் பவானி மற்றும் சென்னிமலை ஆகிய பகுதிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி ஆடை உற்பத்திக்கு பெயர்பெற்றவை. பவானி ஜமுக்காளம் புவியியல் சார் குறியீடாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தியூர் மற்றும் மோடச்சூர் ஆகிய பகுதிகள் கால்நடை வளர்ப்புக்கு புகழ்பெற்ற பகுதிகளாக உள்ளன.

நிகழ்வின் பார்ட்னர்கள் :

இடப் பார்ட்னர் : கொங்கு பொறியியல் கல்லூரி,ஈரோடு

நிகழ்ச்சி பார்ட்னர் : தமிழ் நாடு விவசாய பல்கலைகழகம் – கோயம்பத்தூர், நவீன வேளாண்மை

தமிழ் யுவர் ஸ்டோரி இதன் ஆன்லைன் பார்ட்னராக உள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம் ?

விவசாயிகள், விவசாய பொருட்களின் டீலர்கள், சில்லறை வியாபாரிகள், தொழில் முனைவோர், விவசாய மாணவர்கள், இயற்கை உணவு உற்பத்தியாளர்கள், பண்ணைத்துறை சார்ந்த மக்கள், உரத் தயாரிப்பாளர்கள், விதை உற்பத்திக்கான சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனங்கள்.

டை கோயம்பத்தூரை 

TiE நெட்வொர்க்கின் 56 வது கிளையாக டை கோயம்பத்தூர் உள்ளது. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது கிளையாக உள்ளது. இது, பல சிறந்த தொழில் வல்லுனர்களால் துவக்கப்பட்டது. கோயம்புத்தூர் மண்டலத்தில் உள்ள தொழில்முனைவோருக்கு உதவுவதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் உலக அளவிலான தொழில் வல்லுனர்களாக மாற்றுதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் இணைய முகவரி Tie Coimbatore