செல்போன் செயலி உலகை ஆட்சி செய்யப் போகும் ‘பாட் ஸ்டோர்ஸ்’

0

உலகமே செல்போன் மூலம் இயங்கிக் கொண்டிருக்கிறது, தற்போதைய நிலையில் பெரும்பாலான தொழில்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் முக்கிய அம்சமாக செல்போன் செயலிகள் உள்ளன. ஸ்டார்ட் அப்கள் மட்டுமல்ல நன்கு வளர்ந்த நிறுவனங்களும் கூட செல்போன் செயலியில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. அதில் பெரும்பாலானோர் செல்போனை முதலில் தேர்வு செய்கின்றனர், மேலும் சிலர் செயலியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

டீம்சாட் நிறுவனம், வியாபார பேச்சுவார்த்தைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களில் குழுக்கள் தங்களது நிறுவனங்களிடம் சிறப்பான முறையில் தொடர்பு கொள்ள உதவுகிறது. யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2015ல், டீம்சாட்டின், பொறியியல் பிரிவு துணைத் தலைவர், குனால்பட்கே மெசேஜிங் எப்படி புதிய பரிணாமத்தை செல்பேசிகளுக்கு அளித்துள்ளது என்று பேசினார். அந்தக் கலந்துரையாடலின் சில முக்கிய அம்சங்கள் உங்களுக்காக.

மெசேஜிங் செயலிகளே ஸ்டோர்களை ஆள்கின்றன

“பெரிய புத்திசாலித்தனம் தேவை இல்லை என்றாலும் மெசேஜிங் செயலிகளே ப்ளேஸ்டோரில் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்) மிகவும் பிரபலமானவையாக உள்ளன. ப்ளேஸ்டோரில் உள்ள டாப் 10 செயலிகளில் 6 செயலிகள் மெசேஜிங் செயலிகளாகவோ அல்லது மெசேஜிங்கை ஒரு பாகமாகக் கொண்டவையாகவோ இருக்கின்றன” என்கிறார் குனால்.

பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடத் தேவைக்காக மெசேஜிங் செயலிகளையே நாடுகின்றனர், சராசரியான நேரத்தை அதிலேயே செலவிடவும் செய்கின்றனர். கருத்துப் பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று பார்த்தால் அதன் காரணியே மாறியுள்ளது. உலகம் படிப்படியாக மாறி வருகிறது முதலில் மெயின்ஃப்ரேம்களில் இருந்து மினிகம்ப்யூட்டர்களுக்கு வளர்ச்சியடைந்த நாம் கம்ப்யூட்டர்களில் இருந்து லேப்டாக்ளுக்கும் தற்போது ஸ்மார்ட்போன்கள் அளவும் வளர்ந்துள்ளோம். பயனாளர்களின் தரவும் மாறியுள்ளது, நவீன பயனாளர்கள் மட்டுமே இருந்த நிலை மாறி தொழில்நுட்பம் அறிந்தவர்கள் மற்றும் தொழில்நுட்பம் அறியாதவர்களின் கலவையாகவே அது உள்ளது.

முன்மாதிரி வடிவம் மாற்றம்

நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களின் நுழைவை கட்டுப்படுத்துவதில் கிளர்ச்சி செய்கின்றன. நாமும் இப்போது கட்டுப்படுத்தும் முறையிலும் மாறிக் கொண்டிருக்கிறோம், ஆபரேட்டிங் சிஸ்டமில் இருந்து தேடல் என்ஜின்களுக்கு மாறியதை அடுத்து தற்போது செயலி ஸ்டோர்களுக்கு மாறியுள்ளோம். இது மற்ற சவால்களுக்கும் வித்திட்டுள்ளது, அதில் முக்கியமானது ‘அளவுமீறிய செயலி சுமை’. மக்கள் தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளைத் தவிர மற்ற தேவையற்ற பல செயலிகளை தங்களுடைய செல்போனில் வைத்திருக்க விரும்ப மாட்டார்கள்.

இதை தவிர்க்க, பல்வேறு பிரபலமான மெசேஜிங் செயலிகள் தற்போது ‘செயலிக்குள் செயலி’ முறையை கண்டுபிடுத்துள்ளன. இவை பயனாளர்களுக்கு மேலும் சிறந்த தீர்வைத் தரும். கக்ஹோடாக், வீ சாட் மற்றம் லைன் இவை அனைத்தும் இந்த தத்துவத்தின் சிறந்த உதாரணங்கள். அவர்கள் அடிப்படை மெசேஜிங்கோடு நின்று விடாமல் பணம் வழங்கல், வர்த்தகம், கேப் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றையும் செய்கின்றன.

பாட் ஸ்டோரின் புதிய செயலி ஸ்டோர்?

டீம்சாட், ‘பாட் ஸ்டோர்’ தான் எதிர்காலம் என்று நம்புகிறது. ஏனெனில் இதன் மூலம் பயனாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்களில் செயலிகளை தரவிறக்கம் மற்றும் பதிவு செய்து வைத்துக் கொள்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அதற்குப் பதிலாக சில குறிப்பிட்ட பாட்களை சார்ந்திருக்க வேண்டும் அதாவது ‘உலகச் செய்திகள் பாட்’, ‘வானிலை பாட்’, ‘ஈஎம்ஐ பாட்’, இன்னும் பல., அவர்கள் தேவைக்கு ஏற்றபடி. டெவலப்பர்களின் தற்போதைய தேவைக்கு அவர்கள் ‘பாட் எஸ்டீகே’க்களை இந்தப் பயன்பாட்டுக்காக வழங்கியுள்ளனர்.

உலக அளவில் தற்போது 2 ஆயிரம் நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன. சாதாரண மெசேஜிங்கை இந்த கெட்டிக்காரத்தனமான மெசேஜிங் மாற்றியமைக்கும் என்று டீம்சாட் நம்புகிறது, இதில் நிறைந்துள்ள பல்வேறு நல்ல அம்சங்களே இதற்குக் காரணம். இந்தத் தளத்தின் மூலம் அவர்கள் கலக்கத்தை குறைத்து, மெசேஜிங்கை நிறுவனங்களுக்கான ஒன்றாக இடைவெளியின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கம். சிலிகான் வேலியைத் தலைமையிடமாகக் கொண்ட, டீம்சாட்டின் முதன்மை நிறுவனம் வெபரோ. அவர்களின் மற்ற தயாரிப்புகளில் ஒன்றான கப்ஷப், ஒரு கிளவுட் அடிப்படையிலான ஏபிஐ. இது நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்களை குறுந்தகவல்கள், வாய்ஸ் மற்றும் டேட்டா சேனல்கள் மூலம் அனுப்பும்.

மெசேஜிங் தளங்கள் எதிர்காலத்தில் வெப் சேவை, என்டர்பிரைஸ் சேவை மற்றும் ஐஓடி சாதனம் உள்ளிட்டவற்றை அடக்கிய பொதுநடைமுறைக்கு வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இணையதள முகவரி: TeamChat