1 லட்ச ரூபாய் மாத ஊதியத்துடன் இண்டெர்ன்ஷிப் போட்டியில் வென்றுள்ள எம்.காம் மாணவி!

0

நேஹா ஹசாபே எம்.காம் கல்லூரி மாணவி, Wooplr நடத்திய போட்டியில் இம்மாத 'இண்டெர்ன் சிஇஒ’ ஆக வெற்றி பெற்றுள்ளார்.

பெங்களுருவைச் சேர்ந்த நேஹா, தற்போது புனேவில் உள்ள பிரிஹன் மகராஷ்டிரா கல்லூரியில் எம்.காம் பயின்று வருகிறார்.  #CEOForAMonth போட்டி பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கியது. அதில் 'Don’t Get a Job, Be a CEO’ என்ற தலைப்பில் போட்டி நடைப்பெற்றது. 

போட்டியில், புத்தாக்க முயற்சிகளை போற்றும் வகையில், ’தலைவர்’ ஆக வெற்றிக்கான வழி குறித்து மாணவர்கள் ஐடியாக்களை தரவேண்டும். நேஹா, 24 மாணவர்களுடன் நகர வெற்றியாளராக தேர்வானார். ஸ்ரீநகர் முதல் காஞ்சிபுரம் வரை பல ஊர்களில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மார்ச் 11-ம் தேதி நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் நேஹா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் Wooplr நிறுவனத்தின் சிஇஒ ஆக ஒரு மாதம் அர்ஜுன் சச்சாரியா உடன் நேரடியாக பணிபுரிவார். அவருக்கு அதற்கு மாத ஸ்டைபண்டாக ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இது பற்றி Wooplr சிஇஒ இண்டியா.காம் இடம் கூறுகையில்,

“தங்கள் ஐடியாக்களைக் கொண்டு சாதிக்க நினைக்கும் இளம் தொழில்முனைவோரை கண்டறிவதே இப்போட்டியின் நோக்கமாகும்,” என்றார்.

நேஹா ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியால் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளார். சிஇஓ சந்திக்கும் சவால்களை அறிய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது பற்றி அவர் தெரிவிக்கையில்,

”அங்கே எனக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை. #CEOForAMonth சேலஞ்சு எனக்கு ஒரு நல்ல ஆரம்பத்தை அளித்துள்ளது. Wooplr-ல் பணிபுரிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு வேலை செய்ய காத்திருக்கின்றேன்,” என்கிறார்.

கட்டுரை: Think change India