உங்களது ஸ்டார்ட் அப்பிற்கு ஆதரவளித்து வலுப்படுத்தக் கூடிய இன்குபேட்டர்களின் பட்டியல்!

1

தொழில்முனைவு என்பது எளிதான செயல் அல்ல. உங்கள் வளர்ச்சி அதிகரிக்கையில் சவால்களும் அதிகரிக்கும். விழிப்புணர்வு, வணிகத்தின் நிலைத்தன்மை, சட்டரீதியான மற்றும் அமலாக்கம் தொடர்பான விதிமுறைகள் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

இந்த சவால்களுக்கிடையே வழிகாட்டலும் உதவியுமின்றி உங்களது தொழில்முனைவு முயற்சியைத் துவங்குவது கடினமாகும். எனவே எவ்வாறு துவங்கி செயல்படுவது? தொழில்முனைவோர் தங்களது திட்டங்களுக்கு வடிவம் கொடுத்து செயல்படுத்தத் தேவையான திறன்களையும் தகவல்களையும் எங்கிருந்து பெறுவார்கள்? இந்த பிரச்சனைக்கான தீர்வு இன்குபேட்டர்களிடம் உள்ளது.

நீங்கள் சமீபத்தில் வணிகத்தை துவங்கியவராக இருக்கலாம். அல்லது துவங்க திட்டமிட்டிருக்கலாம். ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்கத் தேவையான ஆதரவும் உந்துதலும் வழங்கக்கூடிய ஒரு சிறந்த தளமாக இன்குபேட்டர்கள் செயல்படுவார்கள். எனினும் பெயர் மட்டுமே வேறுபட்டுள்ளது. அடைகாக்கும் அறையில் ஒரு சிறு விதையை முளைக்கச் செய்வது போன்றே இன்குபேட்டர்களும் ஸ்டார்ட் அப்பின் திட்டம் என்கிற விதையானது மெல்ல உருபெற்று வளர்ந்து ஒரு நிறுவனமாக துவங்கப்பட உதவுகின்றனர்.

மற்றொருபுறம் விரைவுப்படுத்துபவர்கள் துவக்க நிலையில் இருக்கும் ஸ்டார்ட் அப்கள் அடுத்தகட்டமாக முதிர்ச்சியடையும் பணியை விரைவுப்படுத்துவார்கள். ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்களது திட்டங்களுக்கு வடிவம் கொடுக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால் இன்குபேட்டர்களுடனான உறவு நீண்டகால உறவாக இருக்கும். அதே சமயம் விரைவுப்படுத்துபவர்கள் குறைவான நேரத்தில் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்கள்.

இந்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் இந்தியா ஆஸ்பிரேஷன் நிதி உள்ளது. இதன்படி ஆண்டொன்றிற்கு 2,500 கோடி ரூபாய் செலவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது. நான்காண்டுகளுக்கான மொத்த கார்பஸ் தொகை 10,000 கோடி ரூபாய். இந்த மூலதனத் தொகையானது பல்வேறு கல்வி நிறுவனங்களின் மேலாண்மையின் கீழ் ஸ்டார்ட் அப்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த நிறுவனங்களில் உள்ள இன்குபேட்டர்களே இந்தியாவின் அடுத்த தலைமுறை யூனிகார்ன்களுக்கான ஆரம்ப பாடசாலையாக அமைகிறது.

இன்குபேஷனுக்கு ஆதரவான மிகப்பெரிய அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் இதோ:

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில் மேம்பாட்டு கழகம் (NSTEDB)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் அமைக்கபட்ட இந்த கழகம் விரிவான திட்டங்கள் மற்றும் நிபுணத்துவம் வாயிலாக புதுமைகளையும் தொழிநுட்பத்தையும் ஊக்குவிக்கும் நிறுவனமாகும். இந்தக் கழகம் ஆதரவளிக்கும் பல்வேறு பிரிவுகள்:

தொழில்நுட்ப வர்த்தக இன்குபேட்டர்கள் (TBIs) : புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பரவலாக அதிகரிக்க உதவும் இன்குபேஷனை வழங்குகிறது டிபிஐ. இவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் மனித வளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நிதியுதவி பெறுகிறது.

TBI-க்கள் வணிகம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களுக்குள்ள அறிவுத்திறனைக் கொண்டு பல்வேறு ஸ்டார்ட் அப்கள் ஆரம்ப நிலையிலேயே முடங்கிவிடாமல் தொடர்ந்து செயல்பட ஊக்குவித்து ஸ்டார்ட் அப்கள் நீடித்திருக்கும் விகிதத்தை அதிகரிக்கின்றனர். அலுவலக அறை, இணைய வசதி, கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அலுவலக வசதிகளை வழங்குவதுடன் வணிக வளர்ச்சிக்கான மார்க்கெட்டிங், நிதி மாதிரிகள், சட்ட அம்சங்கள், அறிவுசார் சொத்துரிமைகள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் என வர்த்தக செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்து ஸ்டார்ட் அப்களை தயார்படுத்துகிறது.

ஐஐடி மண்டி, என்ஐடி வாராங்கல், எம்ஏஎன்ஐடி போபால், என்ஐடி ரூர்கெலா, எம்என்ஐடி ஜெய்பூர், ஐஐஎம் ரோத்தக், என்ஐடி கேலிகட், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி ரோபார், ஐஐஎஸ்ஈஆர் போபால், ஐஐஎம் கோழிக்கோடு, என்ஐடி ஜலந்தர், ஐஐஎம் உதய்பூர், ஐஐஎஸ்ஈஆர் மொஹாலி, ஐஐடி பாட்னா, ஐஐஎஸ்ஈஆர் திருவனந்தபுரம், ஐஐஎம் ராய்பூர், என்ஐடி திருச்சிராப்பள்ளி, பிட்ஸ் பிலானி போன்ற கல்வி நிறுவனங்கள் டிபிஐ-க்களை ஊக்குவிக்கின்றன.

புதுமைகளின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பிற்கான தேசிய முயற்சி நிதி (National Initiative for Developing and Harnessing Innovation - NIDHI) : NIDHI புதுமை மற்றும் தொழில்முனைவு பிரிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசாங்கம் ஆகியவற்றால் திட்டமிடப்பட்டு தொகுக்கப்பட்ட திட்டமாகும். இது அறிவு சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்தி யோசனைகளையும் புதுமைகளையும் வழங்கவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

நியூஜென் புதுமை மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் : நியூஜென் ஐஈடிசி அஹமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இன்குபேஷன் மையங்களாகும். இவர்கள் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவர். இந்த மையம் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது. புதுமையை ஊக்குவித்து தொழில்முனைவு வாயிலாக வருவாயும் வேலைவாய்ப்பும் உருவாக்கவேண்டும் என்பதே இவர்களது முக்கிய நோக்கமாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில் வளர்ச்சி திட்டம் (STED) : தொழில் ரீதியாக பின்தங்கிய பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 200 மைக்ரோ மாதிரிகளை இந்தியா முழுவதும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. காரைக்குடி, கோழிக்கோடு, அகர்தலா, மொரதாபாத், பித்தோரகர், ஹசாரிபாக் போன்றவை எஸ்டிஈடி செயல்படும் சில பகுதிகளாகும்.

புதுமை - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோர் வளர்ச்சி (i-STED) : i-STED தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைகள் தொடர்பான சவால்களைக் கண்டறிந்து தீர்வுகளை உருவாக்குகிறது. குறிப்பிட்ட துறையில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு கண்டு உள்ளடக்கிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துகிறது. அத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகள் வாயிலான தீர்வுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆற்றல், தண்ணீர், மலிவு விலை சுகாதாரம், மலிவு விலை குடியிருப்பு, கழிவு மேலாண்மை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட துறையில் காணப்படும் சவால்களில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பெறப்படும் தீர்வுகள் பொருளாதார ஆதாயம் மற்றும் வருவாய் ஈட்டல் போன்றவற்றை மேம்படுத்துகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் i-STED-ஐ செயல்படுத்தும் நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

• தி சொசைட்டி ஃபார் டெக்னாலஜி அண்ட் ஆக்‌ஷன் ஃபார் ரூரல் அட்வான்ஸ்மெனெட் (TARA), புதுடெல்லி

• ஃபவுண்டேஷன் ஃபார் MSME க்ளஸ்டர்ஸ், புதுடெல்லி

• இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDI), அஹமதாபாத், குஜராத்

• மந்தன் எஜுகேஷனல் ப்ரோக்ராம் சொசைட்டி, அஹமதாபாத்

• கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை (RDF), ஆனந்த், குஜராத்

• இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மெண்ட், ஆனந்த், (IRMA) குஜராத்

• க்ரிஷி க்ராம் விகாஸ் கேந்திரா (KGVK), ரான்சி, ஜார்கண்ட்

• கேரளா ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (KFRI), திருச்சூர், கேரளா

• பீர்மேட் டெவலப்மெண்ட் சொசைட்டி, கேரளா

• ஸ்வதேஷி சயின்ஸ் மூவ்மெண்ட் (SSM) கேரளா

• இகோசான் சர்வீஸஸ் ஃபவுண்டேஷன், பூனே, மஹாராஷ்டிரா

• ஆர்கே சன்ஸ்தான், சவாய் மதோபூர், ராஜஸ்தான்

• தமிழ்நாடு வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி (TANUVAS), சென்னை

• தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையம் (CTED), அமேதி, உத்தரப்பிரதேசம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா (STEP) : பணி தேடுவோர் பணி வழங்குவோராக மாற உதவுவதே இதன் நோக்கமாகும். திட்டங்களை பகிர்ந்துகொள்ளுதல், அனுபவம், அறிவு, வசதிகள், அதிவிரைவு தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவற்றின் வாயிலாக ஸ்டெப் கல்வி நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளையும் ஒன்றிணைக்கிறது.

தற்சமயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் STEP அமைக்கப்பட்டுள்ளது:

• இண்டர்நேஷனல் அட்வான்ஸ்ட் ரிசர்ச் செண்டர், ஹைதராபாத்

• நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன், ராஜ்கோட்

• ஹிமாச்சல் பிரதேஷ் யூனிவர்சிட்டி, சிம்லா

• பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ரான்ச்சி

• பாகல்கோட் இன்ஜினியரிங் காலேஜ், பாகல்கோட்

• ஸ்ரீ ஜெயசாமராஜேந்திர காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், மைசூரு

• நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, சூரத்கல், கர்நாடகா

• மௌலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, போபால்

• திருச்சிராப்பள்ளி ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ், திருச்சிராப்பள்ளி

• பூனா பல்கலைக்கழகம், பூனா

• குருநாயக் பொறியியல் கல்லூரி, லூதியானா

• தப்பர் பல்கலைக்கழகம், பாட்டியாலா

• ஜெஎஸ்எஸ் அகாடமி ஆஃப் டெக்னிக்கல் எஜுகேஷன், நொய்டா

• பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயமுத்தூர்

• ஐஐடி, ரூர்க்கி

• ஹர்கோர்ட் பட்லர் டெக்னாலஜிக்கல் இன்ஸ்டிட்யூட், கான்பூர்

• ஐஐடி, கராக்பூர்

ஸ்டார்ட் அப் மையங்கள் : இந்த இன்குபேஷன் மையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்பட்டதாகும். மூன்றாண்டுகளுக்கு ஆண்டுதோறும் 50 லட்ச ரூபாய் நிதி வழங்கி மாணவர்கள் ஸ்டார்ட் அப்பில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.

• என்ஐடி அகர்தலா

• என்ஐடி பாட்னா

• ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம்

• என்ஐடி சில்சர்

• என்ஐடி கோவா

• என்ஐடி அருணாச்சலப்பிரதேசம்

• பிடிபிஎம்- ஐஐஐடிடிஎம் ஜபால்பூர்

• ஐஐடி புவனேஷ்வர்

• விஎன்ஐடி நாக்பூர்

• எம்என்என்ஐடி அலஹாபாத்

• என்ஐடி டெல்லி

• ஆர்ஜிஐஐஎம் ஷில்லாங்

• ஏபிவி ஐஐஐடிஎம் க்வாலியர்

அடல் இன்னோவேஷன் மிஷன் Atal Innovation Mission (AIM)

நிதி ஆயோக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சியான அடல் இன்னோவேஷன் மிஷன், அடல் இன்குபேஷன் மையங்களை நாடு முழுவதும் அமைத்து கிட்டத்தட்ட 500 ஆய்வகங்கள் அமைத்து ஐந்தாண்டுகள் பராமரிக்க பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. AIM  முயற்சியின் சுயவேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்பாடு (SETU) திட்டமானது புதுமை மற்றும் தொழில்முனைவு சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய முயற்சியாகும். உலகத்தரம் வாய்ந்த இன்குபேஷன் மையங்கள், ஸ்டார்ட் அப் வணிகங்கள், பிற சுய வேலை வாய்ப்பு நடவடிக்கைகள் குறிப்பாக தொழில்நுட்பம் சாரந்த பிரிவுகள் போன்றவற்றை ஊக்குவிக்கும் தளமாக விளங்குவதே இதன் நோக்கமாகும்.

அடல் இன்னோவேஷன் மிஷன் இரண்டு முக்கிய செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது. ஒன்று சுய வேலை வாய்ப்பு வாயிலாக தொழில்முனைவை ஊக்குவிக்கிறது. இரண்டாவதாக திறன்கள் உரிய விதத்தில் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கிறது. புதுமைகளை படைப்போர் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக ஆதரவளித்து வழிகாட்டப்படுகிறது. புதுமையான திட்டங்கள் உருவாகத் தேவையான தளத்தையும் வழங்குகிறது.

அடல் இன்குபேஷன் மையங்கள் பொது / தனியார் / பொது மற்றும் தனியார் கூட்டணி வாயிலாக நிறுவப்படுகிறது. இவை கல்வி நிறுவனங்கள் (உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் R&D நிறுவனங்கள்) அல்லது கல்வி நிறுவனம் அல்லாத அமைப்புகளில் (நிறுவனங்கள், கார்ப்பரேட்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், தொழில்துறை பூங்காக்கள், தனிநபர் அல்லது தனிநபர்கள் அடங்கிய குழு) நிறுவப்படுகிறது.

AIM ஏற்கெனவே நிறுவப்பட்ட இன்குபேஷன் மையங்களின் வளர்ச்சிக்காக இரண்டாண்டுகளில் பத்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 2017-ம் ஆண்டு நிதி ஆயோக் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஐந்து கூடுதல் இன்குபேட்டர்களை தேர்ந்தெடுத்தது. அவை சி-கேம்ப், என்ஐடி டிஆர்ஈசி ஸ்டெப், அம்ரிதா டிபிஐ, என்எஸ்ஆர்சீஈஎல், ஐஐஎம் பெங்களூரு ஆகியவற்றில் இருக்கும் பயோ இன்குபேட்டர்கள் மற்றும் 91ஸ்ப்ரிங்போர்ட் ஆகியவை ஆகும்.

உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC)

இந்த கவுன்சில் அதன் பல்வேறு திட்டங்களின் கீழ் பல பயோடெக் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஊக்குவிக்கிறது. BIRAC-கினால் ஊக்குவிக்கப்பட்ட நிறுவனங்கள் நாட்டின் சில குறிப்பிட்ட பகுதியில் உள்ள இன்குபேஷன் மையங்களை வலுப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட் அப்களை அணுகும் வகையில் மாவட்ட வாரியான இன்குபேஷன் மையங்களை SETU திட்டத்தின்கீழ் அமைக்க அரசு முயற்சியான நிதி ஆயோக் பரிந்துரை செய்கிறது.

ஆய்வு பூங்காக்கள் : BIRAC-ன் கீழ் பல்வேறு ஆய்வு பூங்காக்கள் உயிரியல் பிரிவில் காணப்படும் பல்வேறு மேம்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு பூங்காவிற்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் ஐஐடி குவாஹத்தி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர், ஐஐடி கராக்பூர், ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி காந்திநகர் போன்ற இடங்களில் உள்ளன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் தொழில்நுட்ப இன்குபேஷன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் (TIDE) வாயிலாக தொழில்நுட்பப் பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் இன்குபேஷன் உதவியைப் பெறலாம். இதன் மொத்த தொகையாக 155 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 125 லட்ச ரூபாய் இன்குபேஷனுக்கு ஆதரவளிக்கவும் மீதமுள்ள தொகை கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும். ஒருங்கிணைப்புகளையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்கும் விசி-க்களும் முதலீட்டாளர்களும் டைட் மையங்களை அணுகுகின்றனர். 

டைட் மையங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

• சொசைட்டி ஃபார் இன்னோவேஷன் அண்ட் தொழில்முனைவு (SINE), ஐஐடி பம்பாய்

• அம்ரிதா டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் (Amrita-TBI), பெங்களூரு

• டெக்னாலஜி இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் செண்டர் (TIIC), அடல் பிஹாரி வாஜ்பாய் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி & மேனேஜ்மெண்ட் (ABV-IIITM), குவாலியர்

• ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி ட்ரான்ஸ்ஃபர் (FITT), ஐஐடி டெல்லி

• தொழில்முனைவு மேம்பாட்டு செல் (EDC), பனஸ்தலி வித்யாபீட்

• ஐஐடிஜிஎன் இன்குபேஷன் செண்டர் (IIC), IIT காந்திநகர்

• டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், பிட்ஸ் பிலானி

• ஐஐடிஜி-டெக்னாலஜி இன்குபேஷன் செண்டர் (IITC-TIC), ஐஐடி குவாஹத்தி

• சொசைட்டி ஃபார் டெக்னாலஜி இன்குபேஷன் & டெவலப்மெண்ட் ஆஃப் எண்டர்பிரைசஸ் (STIDE), செண்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் ராஜஸ்தான்

• எஸ்ஐடிபிஐ இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் செண்டர் (SIIC), ஐஐடி கான்பூர்

• டிஏ-ஐஐசிடி தொழில்முனைவு மற்றும் இன்குபேஷன் மையம் (DCEI), DA-IICT

• அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா (STEP), ஐஐடி கராக்பூர்

• ஐஐஐடிஏ இன்ஃபோ கம்யூனிகேஷன் இன்குபேஷன் செண்டர் (IIIC), IIIT அலஹாபாத்

• கிராமப்புற தொழில்நுட்ப மற்றும் வணிக இன்குபேட்டர்கள் (RTBI), ஐஐடி மெட்ராஸ்

• ஐஐஐடிபி இன்னோவேஷன் செண்டர், ஐஐஐடி பெங்களூரு

• செண்டர் ஃபார் இன்னோவெஷன் அண்ட் பிசினஸ் இன்குபேஷன் (CIBI), ஐஐடி ரோபர்

• புதுமை மற்றும் தொழில்முனைவு மையன் (CIE), ஐஐஐடி ஹைதராபாத்

• கேஐஐடி டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் (KIIT-TBI), கேஐஐடி, புவனேஷ்வர்

• புதுமை இன்குபேஷன் மற்றும் தொழில்முனைவு மையம் (CIIE), ஐஐஎம் அஹமதாபாத்

• டெக்னாலஜி பிசினச் இன்குபேட்டர் – NITC (TBI-NITC), என்ஐடி காலிகட்

• நாடதூர் எஸ் ராகவன் தொழில்முனைவு கற்றல் மையம் (NSRCEL), ஐஐஎம் பெங்களூரு

• என்ஐடிகே அறிவியல் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்கா (NITK-STEP), என்ஐடிகே சூரத்கல்

• ஆர்ஓஎல்டிஏ புதுமை மற்றும் இன்குபேஷன் மையம், MANIT போபால்

• சொசைட்டி ஃபார் இன்னோவேஷன் & டெவலப்மெண்ட் (SID), IISc பெங்களூரு

• தொழில்நுட்ப இன்குபேஷன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (TIDE-UoH), ஹைதராபாத் பலகலைக்கழகம்

• ஐஐடி ரூர்க்கி

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (MSME)

MSME சீட் மூலதன நிதியாக ஒரு இன்குபேட்டருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குகிறது. தற்போதைய டிபிஐ-க்களின் இன்குபேட்டர்களுக்கு 30 லட்ச ரூபாயும் புதிய டிபிஐ-க்கள் அமைக்க இருக்கும் நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாயும் வழங்குகிறது. MSME-யின் அனுமதி பெற்ற இன்குபேட்டர்களின் பட்டியலில் சுமார் 207 ஹோஸ்ட் நிறுவனங்கள் உள்ளன.

மாநில அரசாங்கம்

ஸ்டார்ட் அப் யாத்ரா என்பது தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை (DIPP) அறிமுகப்படுத்திய மாநில அளவிலான தொழில்முனைவு திட்டமாகும். ஆந்திரப்பிரதேசம், கோவா, கேரளா, ராஜஸ்தான், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, குஜராத், உத்திரப்பிரதேசம், ஹரியானா, அசாம், மேற்கு வங்காளம் என இதுவரை 14 மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.

இன்குபேட்டர்கள் நாட்டில் ஸ்டார்ட் அப்பின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்களாக உள்ளனர். இவர்கள் எளிதாக கிடைக்கப்பெறாத நிபுணத்துவத்தை ஸ்டார்ட் அப்களுக்கு வழங்குகின்றனர். அரசு நிதியுடன் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுடான இணைப்பு வாயிலாகவும் இந்த இன்குபேட்டர்கள் பயனடைகின்றனர்.

வருங்காலத்தில் இந்தியா வணிக முறைகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. இந்த இயக்கத்தில் ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சயடையச் செய்யவும் லாபகரமான நிறுவனங்களாக மாற்றவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்படும் இன்குபேட்டர்கள் அவசியம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இளம் தொழில்முனைவோரை ஒருங்கிணைப்பதே வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இன்குபேட்டர்களின் உதவியுடன் ஸ்டார்ட் அப்கள் தீர்வுகளை வழங்கி அதிவேகமாக வளர்ச்சியடைகின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் தீவிர முன்னெடுப்பு மற்றும் பங்களிப்பினால் நாட்டின் தொழில்முனைவோரின் கூட்டமைப்பு தங்களுக்குத் தேவையான இன்குபேஷனையும் ஆதரவையும் பெற்று வருங்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். 

ஆங்கில கட்டுரையாளர் : ரெஜினா ரம்யதா ராவ்