திடீரென பிட்காய்ன் விலை உயரக் காரணம் என்ன?

0

இந்த மாதம் பிட்காய்னின் விலை 40 சதவீதம் உயர்ந்ததற்கு இதோ இவைதான் காரணங்கள்... 

தற்போது அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த cryptocurrency. நம்மில் பலரே இதில் நம் பணத்தை ஏன் முதலீடு செய்யவில்லை என நம்மை நாமே திட்டிக் கொள்கிறோம். இந்நிலையில் இப்பொழுது பிட்காய்ன் விலை $14,624 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பிட்காய்னின் மிகப்பெரிய விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ThroughBit நிறுவனத்தின் நிறுவனர் அபிஷேக் கோபால், இந்த உயர்வுக்கு பிட்காய்ன் முக்கிய நிதி பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பதே காரணம் என்கிறார்.

வருங்காலம்

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பண்டக எதிர்கால வர்த்தக ஆணையம் (CFTC) இரண்டு பரிமாற்றங்களை பிட்காய்ன் ஒப்பந்தம் மூலம் அனுமதித்தது. இதனை தொடர்ந்து CME குழு, மற்றும் CBOE உலகளாவிய மார்க்கெட் ஆகியவை பிட்காய்ன் பரிமாற்றங்களை ஏற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. நியூயார்க்கை சார்ந்த NASDAQ–ம் பிட்காய்னை ஏற்க உள்ளது.

• மின்னல் நெறிமுறை

இதன் மூலம் பண போக்குவரத்து மின்னல் வேகத்தில் விரைவாக நடக்கிறது. இந்த நெட்வொர்க்கில் பங்கு கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இது சுலபமான வழியாகும். இந்த ஒப்பந்தம் செயல்திறனை எளிதாக்கவும், சரிபார்க்க மற்றும் செயல்படுத்தவும் எளிமையாக இருக்கும்.

ஊடக அறிக்கை படி, blockchain-ல் இருந்து மற்றொரு நெட்வொர்க்கில் பிட்காய்ன் பரிவர்த்தனை நடந்தால் இன்னும் எளிமையாகவும் விரைவாகவும் இருக்கும். மின்னல் நெறிமுறை மூலம் வாங்குவோர் மற்றும் விற்பவர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாற்றத்தை செய்ய முடியும் பின்னர் அந்த செயல்பாட்டை பொது நெட்வொர்க்கில் ஒளிபரப்பலாம்.

• புதன்கிழமை அன்று, blockchain தயாரிப்பாளர்களான ACINQ, Blockstream, மற்றும் Lightning Labs. மின்னல் நெறிமுறையின் முதல் பகுதியை வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

பிட்காய்ன் இதழ், இந்த மூன்று நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட மின்னல் செயலாக்கங்களை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளது: ACINQ எக்ளர் முறையை தயாரித்துள்ளது, Blockstream சி-லைட்னிங்கை உருவாக்கியுள்ளது மற்றும் Lightning Labs IND நெறிமுறையை தயாரித்துள்ளது.

பிட்காய்ன் இதழ் உடன் பேசிய Lightning Labs தலைமை நிர்வாக அதிகாரி எலிசபெத் ஸ்டார்க் கூறியது,

“மின்னல் நெறிமுறை (Lightening Network) வெற்றிக்கு இடையில் இருக்கும் இயங்குதன்மை முக்கியக் காரணமாகும். இதை வடிவமைப்பதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை செய்துள்ளோம். இதனால் நாங்கள் மற்றும் பிற உருவாக்குனர்கள் ஒருவருக்கொருவர் பேசும் செயலாக்கங்களை எழுத முடியும். பயனாளர்கள் எந்த முறையை பயன்படுத்தினாலும் ஒரு மின்னல் நெட்வொர்க்கில் மட்டுமே இணைந்திருப்பர்.”

சரி, மின்னல் நெட்வொர்க் எதிர்கால பிட்காய்ன் பரிமாற்றங்களுக்கு எப்படி உதவும்?

உடனடி பரிமாற்றம்: லைட்னிங் நெட்வொர்க் வலைத்தளத்தின்படி, மின்னல் வேகமான இந்த நெறிமுறை Blockchain உத்தரவாத முறை பற்றி கவலைப்படாமல் வேகமாக பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துகிறது. பத்து நிமிடம் ஆக எடுக்கப்படும் ஒரு பிட்காய்ன் பரிமாற்றம் மின்னல் நெறிமுறையில் மில்லி விநாடிக்குள் நடைபெறுகிறது.

அளவிடல்: மின்னல் நெட்வொர்க், மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு சாத்தியம் என கூறுகிறது.

குறைந்த செலவு: லைட்னிங் நெட்வொர்க் குறைந்த கட்டணத்தை அளிக்கிறது மேலும் இது பிட்காய்ன் நுண்ணுயிரிகளின் வெளிப்படையான பயன்பாடு வழக்கங்களை அனுமதிக்கிறது.

கிராஸ் Blockchains: மின்னல் நெட்வொர்க் பிட்காய்ன் Blockchain-க்கு வெளியில் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது. இது பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கும்.

இன்னும் நமக்கு பிடித்தமான கடைகளில் பிட்காய்னை ஏற்று கொள்வதற்கு இன்னும் பல நெறிமுறைகளை செய்ய வேண்டும் என CoinDesk தெரிவித்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா