ஃபேஷன் ஜுவல்லரியில் பாரம்பரிய டிசைன் நகைகள்: Jewlot ஆன்லைன் தளம் தொடங்கிய சென்னை இளைஞர்கள்!

7
”பாரம்பரிய மற்றும் புதுமையான வடிவமைப்பு, அருமையான கைவினை கலை, தரம், சமீபத்திய நிபுணத்துவத்துவம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு சிறந்த பேஷனபிள் ஜுவல்லரியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கமாகும்.”

இ-காமர்ஸ் சந்தை வெற்றியுடன் செயல்பட்டு வருவதாலும் 50 வருட பாரம்பரியத்துடன் கூடிய கைவினைத் திறன் கொண்டவர்கள் என்பதாலும் ஒரு இளமையான சுறுசுறுப்பான குழுவினர் Jewlot என்கிற ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். Jewlot.com என்கிற இந்தத் தளத்தில் தற்போது பெண்களுக்கான 3000க்கும் மேற்பட்ட டிசைன்களைக் கொண்ட இமிடேஷன் ஜுவல்லரிகள் உள்ளன. சமீபத்திய டிசைன்களை அவ்வப்போது அப்டேட் செய்கின்றனர். அவர்களது ஜுவல்லரிகள் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

துவக்கம்

Jewlot நிறுவனத்தின் இணை நிறுவனர்களான பரத் ராம் மற்றும் கணேஷ் பிரசாத், 50 ஆண்டுகளாக இமிடேஷன் நகைகள் தயாரிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொழில்முனைவின் மீதுள்ள ஆர்வத்தில், பாரம்பரியத்தையும் இணைத்த Jewlot நிறுவனர்கள் இந்தத் துறையில் ஒரு முத்திரையை பதிக்கவேண்டும் என்கிற உறுதியுடன் செயல்படுகின்றனர். பொழுதுபோக்கிற்கும் ஆர்வத்திற்கும் மெல்லிய இழையிலான வித்தியாசமே உள்ளது. இந்தக் குழு இந்தத் துறையை அதீத ஆர்வத்தினால் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி தரமான சேவையை வழங்குவதற்காக 2016-ம் ஆண்டு மே மாதம் இந்தத் தளம் துவங்கப்பட்டது. பலரது ரசனையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் நகைகளில் பல்வேறு டிசைன்கள் உருவாக்கப்பட்டு தயாரிப்புகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெவ்வேறு தருணங்களுக்கான பிரத்யேகமான தயாரிப்புகள் கலை, வடிவமைப்பு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்படுகிறது.

நோக்கம்

”நேர்மை, சிறந்த தரம், வணிக நெறிமுறைகள் ஆகியவற்றை எங்களது வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் இணைத்துள்ளோம். நற்பெயரை உருவாக்கவேண்டும் என்பதும் இமிடேஷன் ஜுவல்லரி துறையில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்கிறார் பரத் ராம்.

துறை மீதான ஆர்வம், மதிப்பை உருவாக்குவது, உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவை ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதலாக அமைந்தது. இதுவே இவர்களது கனவாகவும் இருந்தது. Jewlot வெறுமனே ஒரு முயற்சி அல்ல. ஸ்டைலில் ஏதாவது புதுமையை புகுத்தவேண்டும் என்கிற எங்களது கனவாகும் என்கிறனர் இந்த இளம் நிறுவனர்கள்.

”நாங்கள் எங்களது ப்ராண்டை உருவாக்க விரும்பினோம். எங்களது தலைமைப்பண்பில் சிறப்புற்று எங்களால் சாதிக்க முடிந்ததை இந்த உலகிற்கு காட்டும் வகையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்தோம்,” என்றனர்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடு

மேம்பட்ட சேவைகள் அளிப்பதன் மூலம் இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் பொருளாதார சூழலை கருத்தில்கொண்டு பட்ஜெட் ஸ்டோர்களையும் அமைத்துள்ளனர்.

ஆபரணத் தயாரிப்புக் கலையில் பின்புலம் இருப்பதால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ஆபரணத்தையும் மிக்க கவனத்துடனும் நுணுக்கமான கைத்திறனுடனும் உருவாக்குகிறோம். எங்களுக்கு கிட்டத்தட்ட 100 ஆஃப்லைன் ஸ்டோர்கள் உள்ளன. 'கல்யாணி கவரிங்’ என்ற பிரபல இமிடேஷன் நகைக்கடைகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் Jewelot-ன் நிறுவனர்கள் என்பதால் துறைப் பற்றிய புரிதலும் அனுபவமும் இயற்கையாக இவர்களிடம் உள்ளது. 

பல்வேறு வகை ஆபரணங்களை இணைத்து தனித்திறன்கொண்ட ஆபரண உலகை உருவாக்கவேண்டும் என்பதை மனதில் கொண்டே Jewlot-ன் அனைத்து ஆபரணங்களும் வடிவமைக்கப்படுகிறது. வருங்காலத்தில் வணிகத்தை விரிவுபடுத்த ஆன்லைன் தளத்தில் செயல்படவேண்டும் என்பதை உணர்ந்து 2016-ல், Jewlot.com தொடங்கினோம். பின்னர் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஃப்லைனிலும் அறிமுகப்படுத்தினோம். பிப்ரவரி மாதம் 250க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஆர்டர்களுடன் ஆஃப்லைன் ஆர்டர்கள் வாயிலாக 60,000 ரூபாய் கூடுதல் வருவாய் ஒரே மாதத்தில் உருவானது.

குழு விவரம்

தொழில்முனைவில் ஆர்வம் இருப்போர் தங்களுக்கு பிடித்த விஷயத்தை தொழிலாக மாற்றுவார்கள். Jewlot-ன் சிஇஒ ஆக இருக்கும் பரத் ராமின் வாழ்க்கைப்பாதையிலும் அவ்வாறே ஏற்பட்டது. ஆபரண உலகில் ஏதாவது புதுமையை புகுத்தவேண்டும் என்கிற ஆர்வத்துடன் களமிறங்கினார். சிறந்த குழுவும் குழு நிர்வாகமும் இருப்பின் வணிக உலகில் பல சாதனைகள் படைக்கமுடியும் என்பதை அவரது அனுபவம் மற்றும் இ-காமர்ஸ் வணிகத்தில் இருந்த ஆர்வம் ஆகியவை எடுத்துரைத்துள்ளது.

இப்படிப்பட்ட ஒரு தொழிலை உருவாக்க திட்டமிட்டவர் கணேஷ் பிரசாத், நிர்வாக இயக்குனராக உள்ளார்.  தயாரிப்புகளின் இருப்பை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். வணிகத்தைப் பொருத்தவரை அவர் வலுவான அறிவு படைத்தவர். தரமான பொருட்கள் குறைந்த விலையில் அளிக்கப்படுவதை உறுதிசெய்கிறார். ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஐந்து நபர்களைக்கொண்ட குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

நிதி, சவால் மற்றும் வருங்கால திட்டம்

சுய நிதியில் நிறுவனம் தொடங்கிய இவர்கள், சேமிப்பிலிருந்தும் குடும்பத்தின் உதவியுடனும் Jewlot நிறுவினர். நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி நகர்த்த முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெறுவதே எதிர்கால திட்டமாகும். இதன்மூலம் Jewlot-ன் சொந்த உற்பத்தி நிறுவனத்தை துவங்கி எங்கள் ட்ரெண்டை பரப்புவதே திட்டமாகும், என்கின்றனர்.

வளர்ச்சியடைய நிதியை உயர்த்துவதும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அம்சங்களை ஆய்வு செய்வதுமே மிகப்பெரிய சவாலாக இருந்தது. புதிய வழியில் மார்க்கெடிங் செய்ய முடிவு எடுத்து, ஆபரண கண்காட்சி ஒன்றை நடத்துகின்றனர். 

”எங்களது கனவு வெளிச்சத்திற்கு அப்பாலுள்ள அழகு என்கிற பொருளைக் கொண்ட ’Beauty Beyond Light’ என்று முயற்சி மூலமாக நிறைவேறியது. இது இருட்டில் நடைபெறும் உலகின் முதல் ஆபரணக் கண்காட்சியாகும். பார்வையற்றோர் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மற்ற புலன்களை பயன்படுத்தி மக்கள் நகைகளை தொட்டு உணரவைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்,” என்றார் பரத். 

விழிப்புணர்வை ஏற்படுத்த வலைப்பதிவாளர்களையும், சமூக ஆர்வலர்களையும்  பல பிரபலங்களையும் கண்காட்சிக்கு அழைத்து அவர்கள் மூலம் இவர்கள் ப்ராண்டை பிரபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் நகைகள் மட்டுமின்றி, கற்கள் பதித்த பர்சுகள், ஹேண்ட்பாக் போன்றவைகளையும் இத்தளத்தில் விற்பனை செய்கின்றனர். 

தொழில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், தங்களின் தனித்துவத்தை புகுத்தி, தொழில்முனைவராக களத்தில் இறங்கி, தங்களுக்கென பாதையை வகுத்து அதை நோக்கி பயணிக்கு இந்த இளம் நிறுவனர்களுக்கு வாழ்த்துக்கள்.