உங்கள் தூக்கத்திற்கு ஏற்ற தனித்துவமான மெத்தையை வழங்கும் 'Wakefit'

1

நல்ல தூக்கம் பெற நல்ல மெத்தை அவசியம். சந்தையில் கிடைக்கும் சாதாரண மெத்தையை பயன்படுத்தாமல். நமக்கேற்ற மெத்தையை வடிவமைத்தால் அதில் வரும் தூக்கமே தனி.

பலர் இங்கே தூக்கம் கெட்டு வேலை செய்ய; அங்கித் கார்கிற்கு தூக்கமே தொழிலாய் மாறியது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அவர்கள் கேட்குமாறு மெத்தைகளை வடிவமைத்து தருகிறது அங்கித் கார்கின் நிறுவனம் ’Wakefit’. தொழில் தொடங்கி இரண்டு வருடத்தில் 30,000 வாடிக்கையாளர்களுக்கு மெத்தை வடிவமைத்து கொடுத்துள்ளனர்.

அங்கித் கார்க் (29), ஐ.ஐ.டி-யில் B.Tech இரசாயன பொறியியல் முடித்தவர். படித்து முடித்தவுடன் ’Bayer’ என்னும் பெரிய இரசாயன நிறுவனத்தில் வேலை செய்தார். நல்ல நிறுவனம் கை நிறைய சம்பளம் இருந்தப் போதிலும் தனி ஒரு நிறுவனம் அமைக்க வேண்டுமென்ற ஆசை அங்கித் இடம் இருந்தது.

Wakefit குழு
Wakefit குழு

அதன் பின் ஆராயச்சியில் நேரம் செலவிட்டு, ஆட்டோமொபைல் தொழில் “molded foam” தயாரித்து சந்தைக்கு கொண்டு வந்தார். ஆனால் துரதிர்ஷ்ட்ட வசமாக உலகளாவிய “டவ் கெமிக்கல்ஸ்” இதே போன்ற தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியது. அவர்களுடன் போட்டியிடுவது அங்கித்திற்கு சாத்தியமற்றது. அதனால் தன் தொழிற்சாலையில் உள்ள பொருளை அனைத்தையும் விற்று தன் கடனை அடைக்க வேறு வேலையில் சேர்ந்தார்.

வேலையில் சேர்ந்து தன் கடனை முடித்து நல்ல சம்பாத்தியம் இருந்தாலும் தொழில் தொடங்கும் எண்ணம் அங்கித்திடம் தொடர்ந்து இருந்து வந்தது. பின் மக்களின் தேவையை புரிந்து அவர்களுக்கு தேவையான பொருளை தயாரிக்க முடிவு செய்தார்.

“Foam மற்றும் இராசயனமே என்னுடைய பலமாக இருந்தது. அதனால் என் வேலையை விட்டு, மெத்தை தயாரிப்பில் ஏதேனும் வாய்ப்புள்ளதா என்று தேடினேன். அதன் பின்னே மெத்தை தயாரிப்பில் எந்த ஒரு புதுமையும் இது வரை வரவில்லை என்று தெரிந்தது,” என்று நினைவுக்கொல்கிறார் அங்கித்.

மற்ற மெத்தை தயாரிப்பாளர்கள் போலவே “Wakefit” பல மெத்தையை தயாரித்து விற்க தொடங்கினர். ஆனால் அங்கித் ஒரு செயலில் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார், அங்கித்தும் அவரது குழவும் வாடிகையாளர்கள் மெத்தை பயன்படுத்திய பிறகு 6 மாதத்துக்குள் பல முறை அவர்களை சந்தித்து மெத்தையை பற்றி கருத்துக்கள் பெற்றனர். அங்கித்தே இதுவரை 100 வாடிக்கையாளர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து கறையை நீக்குவதில் சிரமம், பாக்கிங்கில் திருப்தி இல்லை போன்ற பல குறைகளை சேகரித்து தன் மெத்தையில் பல முன்னேற்றங்களை அங்கித் கொண்டு வந்தார்.

Memory foam மற்றும் foam மெத்தையையே மக்கள் அதிகம் விரும்பிகிறார்கள் என அறிந்த Wakefit மற்ற பொருள்களை தள்ளி வைத்து விட்டு இதில் அதிக கவனம் செலுத்தினர்.

முதன்மையாக, நடுத்தர வர்கத்தினரை தங்கள் இலக்காக வைத்து மெத்தைகளை தயாரித்தனர். wakefit புதுமையான மெத்தைகளின் சில எலும்பியல் memory foam மெத்தை, இரட்டை பக்க மெத்தை; அதாவது ஒரு பக்கம் மென்மையாகவும் மறு பக்கம் உறுதியாகவும் இருக்கும். தேவைக்கேற்ப திருப்பி பயன்படுத்தலாம்.

இதைத் தவிர, மெத்தை உரையை நீக்கி துவைத்து மீண்டும் மாட்டிக்கொள்ள ஜிப் வசதியுடன் மெத்தை உள்ளது. இது மெத்தை பல வருடம் சுத்தமாக புதியது போல இருக்க உதவும்.

இறுதியாக, தற்பொழுது இந்தியாவில் அதிக தேவையாக இருப்பது தனிப்பட்ட விருப்பமான அளவுகள். அதனால் wakefit நிரந்தர அளவை முடிவு செய்யாமல் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மெத்தையின் அளவை செய்கின்றனர். மேலும் தண்ணீர் உட்புகாத மெத்தை போன்ற பல வகையான மெத்தை உள்ளது.

wakefit பிறகு ஆன்லைனில் தங்கள் தொழிலை தொடர முடிவு செய்தனர். இதன் மூலம் வாடிகையாளர்களுக்கு குறைந்த விலையில் மெத்தை வழங்க முடியும். காரணம் ஆன்லைன் சேவையில் இடைத்தரகர்கள் எவரும் இல்லை.

மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்

wakefit நிறுவனம் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிகையாலளர்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 40,000க்கும் மேற்பட்ட மெத்தைகளை இந்தியா முழவதும் உள்ள பல இடங்களில் விற்றுள்ளது. இதில் அந்தமான் நிகோபாரும் அடங்கும்.

“கடந்த 14 மாதமாக தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 10-20 சதவிதம் வளர்ச்சி அடைகிறோம்,” என்கிறார் அங்கித்.

ஆரம்பத்தில் நண்பர்கள் குடும்பத்தார் பண உதவி மூலம் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போழுது wakefit நல்ல லாபம் அடைகிறது, அதுவே மீண்டும் தொழிலில் பயன்படுத்த போதுமானதாக இருக்கிறது. இன்னும் வளர்ச்சி அடைய அங்கித் வெளி பங்குதாரர்களையும் அழைக்கிறார். 

ஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா