சமூக தொழில்முனைவு நிறுவனங்கள் 25 லட்ச ரூபாய் விதைநிதி பெற வாய்ப்பு: iPitch-க்கு இன்றே விண்ணப்பியுங்கள்!

0

இந்தியாவில் தற்பொழுது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது அபூர்வம் ஆயிற்று. படிப்பை முடித்த உடன் வேலை தேடாமல் பலர் சுய தொழிலில் ஈடுபடுகின்றனர். நல்ல தொழில் யோசனை மற்றும் திறன் இருந்தும் கூட பலரால் தொழில் தொடங்க முடியவில்லை. சமூகத்திற்கு ஏற்ற புதிய சிந்தனைகள் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது Villgro அமைப்பு.

Villgro இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய சமூக நிறுவன நிகழ்வான iPitch என்னும் நிகழ்வை வருடா வருடம் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வு மற்ற வணிக போட்டிபோல் இல்லை, இது இந்தியாவின் மாறுபட்ட சமூக நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு வேட்டை ஆகும்.

iPitch என்றால் என்ன?

iPitch ஒரு போட்டி அல்ல, இது இந்தியாவின் சமூக தொழில்முனைவு நிறுவனத்துக்கான தேடல். இந்தியாவின் தலைச்சிறந்த சமூக தொழில்முனைவு வழிகாட்டி நிறுவனமான வில்க்ரோ 2001-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 120 சமூக தொழில்முனைவு நிறுவனங்களுக்கு சுமார் 1270 மில்லியன் ரூபாய் முதலீடுகள் பெற வழிகாட்டியுள்ளது. இதன் மூலம் 4000 வேலைவாய்ப்புகளையும், 1.5 கோடி மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

iPitch-ல் இந்தியாவின் சமூக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்குபெறலாம். 

இதில் தேர்வு செய்யப்படும் ஆறு நிறுவங்களுக்கு 25 லட்சம் முதலீடு வழங்கப்படும். மேலும் இதில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கு Menterra மற்றும் அர்தா வென்ச்சர் சேலன்ஜ் சமூக நிதி அமைப்பிடம் இருந்து 5 கோடி முதலீடு பெற வாய்ப்புள்ளது. முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து மானியம் அல்லது இலவச சலுகைகளை பெற வாய்ப்புள்ளது. பல முதலீட்டாளர்கள், பெரும் நிருவனர்களை சந்திக்க முடியும்.

நவம்பர் 22 முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 22 ஆகும். 

* வென்ச்சர் செண்டர்- என்சிஎல் பூனா, ஐஐஎம் கொல்கத்தா, ஐஐடி கான்பூர், ஸ்டார்ட்-அப் ஒயாசிஸ் ஜெய்பூர் மற்றும் கேஐஐடி புவனேஷ்வர் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வழிகாட்டுதல் மற்றும் இன்குபேஷன் ஆதரவை பெற இந்த பிட்ச் வாய்ப்பு அளிக்கும். 

* iPitch நிகழ்வில் பங்குபெற, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வாழ்வாதாரங்கள் மற்றும் ஆற்றல் அடிப்படையாக கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமாக இருக்க வேண்டும்.

* ஸ்டார்ட்-அப் நிலையை தாண்டிய உங்கள் நிறுவனம் குறைந்த வருமானம் ஈட்டும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற நகரங்களில் வேலை வாய்ப்பை விரிவுபடுத்த நினைத்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் இருக்கும் தொழில் சிக்கல்களை நீக்கவும், பல முதலீட்டாளர்களை சந்திக்கவும் iPitch-ற்கு இங்கே விண்ணப்பியுங்கள்.