சுயசக்தி விருதுகள் வெற்றியாளர்கள் அறிவிப்பு!

வீட்டிலிருந்தபடியே, தடைகள் பல கடந்து தொழிலில் முன்னேறிய பெண்களை அடையாளப்படுத்திய நிகழ்வு...

3

பெண்கள் காலூன்றாத துறைகள் மிக அரிது என்பதிலிருந்து இடம் தடையில்லை என்று வீட்டிலிருந்தபடியே அவர்களின் திறமைகளை பயன்படுத்தி சாதனை படைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.  அதற்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. தீர்வாக வந்தது சுயசக்தி விருதுகள்.

பல பெண்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது சென்னையில் நடைப்பெற்ற ’சுயசக்தி விருதுகள்’ நிகழ்ச்சி. புதிய தொழில் ஐடியா, சமூக தாக்கம், தொழிலில் கண்ட சவால்கள், வளர்ச்சி வாய்ப்புகள், குடும்பத்தில் தாக்கம், வருவாய் மற்றும் லாபம், நேர்காணல் ஆகிய விஷயங்களின் அடிப்படையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

சுயசக்தி விருது வென்ற பெண்கள்
சுயசக்தி விருது வென்ற பெண்கள்

 நிகழ்சியின் சிறப்பு விருந்தினராக கவியரசு வைரமுத்து உரையாற்றினார். அவர்,

"வளரும் இந்தியா இளைஞர்கள் மற்றும் பெண்கள் கையில் உள்ளது. இவர்களின் ஆற்றல், அறிவு, பெருமை, உழைப்பு, கல்வி ஆகியவை கூடுகிற போது வல்லரசு என்ற முதல் தடத்தை பதிக்கும். இது அறிவின் யுகம், கல்வியின் யுகம். ஒற்றைச் சிறகு பறக்கிற சமுதாயத்தில் வெற்றியை எட்டிப்ப்பிடிக்க முடியாது,"

என்று தனது முத்திரை பேச்சில் அனைவரையும்  கவர்ந்தார். மேலும் நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் கூறுகையில் 

"உலகத்தில் சிறந்த மேன்மையான மூலதனம் நேரம் மட்டுமே. மானம், உயிர், நேரம் இவற்றை இழந்தால் திரும்ப பெற முடியாது. நேரத்தை நல்லபடியாக மூலதனம் செய்யும்  பெண்கள் வெற்றி பெறுகிறார்கள்"  என்றார்.

விருதுகள்

விவசாயம், அழகியல், கலை, கல்வி, உணவு, ஹெல்த்கேர், ஹோம் ரீடைல், மீடியா என்டெர்டைன்மென்ட், விளையாட்டு மற்றும் ஆரோக்கியம், சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளிகள் மற்றும்  தனித்துவமான முயற்சிகள் என பன்னிரண்டு  வகையான துறைகளில், ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

நடுவர்கள் குழுவுடன் திரு.ஹேமச்சந்திரன் மற்றும் திரு.சி,கே.குமரவேல்
நடுவர்கள் குழுவுடன் திரு.ஹேமச்சந்திரன் மற்றும் திரு.சி,கே.குமரவேல்

மேலும் சில துறைகளில் இன்ஸ்பிரேஷன் விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் நடிகர் ஆரியின்  பேச்சு அனைவரின் கவனத்தயும் ஈர்த்ததாக அமைந்தது. கடந்த நான்காண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆரி நம் உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதன் அவசியத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். 

“நாம் பயன்படுத்தும் எண்ணை பிராண்டை மாற்றுவது, சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவது, கல் உப்பு பயன்படுத்துதல், மைதாவை சேர்க்காமலிருத்தல், தானியங்களை உபயோகித்தல், முடிந்த வரை நாட்டு மாட்டின் பால் உபயோகித்தல் என நாம் அன்றாடம் மிக எளிய அளவில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்,” என்றார். 
மூத்த குடிமகளுக்கான விருது பெற்றவர்கள்
மூத்த குடிமகளுக்கான விருது பெற்றவர்கள்

விருதுடன் முதலீடு ஊக்குவிப்பு

விருது பெற்றவர்களிலிருந்து பதினெட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதலீடு மற்றும் அவர்களின் வணிகத்தை முன்னெடுத்து செல்ல வழிகாட்டுதல் ஆகியவையும் அளிக்கப்பட்டது. சத்தியபாமா பல்கலைகழகத்தின் இன்குபேஷன் மையம் பத்து பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், நேடிவ்லீட் பவுண்டேஷன் மூன்று பேருக்கு வழிகாட்டுதலும், க்ளோபல் அட்ஜஸ்மென்டஸ் ரோஹினி மணியன் இரண்டு பேருக்கு மூலதனம் மற்றும் வழிகாட்டுதல், அழகியல் துறையில் மூன்று பேருக்கு நாச்சுரல்ஸ் மூலதனம் மற்றும் வழிக்காட்டுதல் என விருதை தாண்டி அடுத்த கட்ட நகர்வுக்கும் உத்வேகமாக இந்த விழா அமைந்தது.

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் நிறைய போரட்டங்களும் நிரம்பியே உள்ளன. அதுவும் சாதாரணக் குடும்பத்திலிருந்து பெண்கள் தொழில் முனைவது என்பது எத்தகைய போராட்டங்கள் நிறைந்திருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றிகரமாக வீட்டை வழி நடத்தும் பெண்களுக்கு தக்க ஊக்குவிப்பு அமைந்தால், அவர்களின் கனவை நனவாக்கும் தருணங்களை அவர்கள் எளிதில் எட்டிப் பிடித்துவிடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சுயசக்தி விருதுகள் பின்னணி

வீட்டில் இருந்து கொண்டு அமைதியாக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பெண்களை பாராட்டி, அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும் வகையிலும், ‘ப்ராண்ட் அவதார்’ எனும் நிறுவனம் ’சுயசக்தி விருதுகள்’ என்ற மிகப்பெரிய சமூக நிகழ்வை ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. ’ஹோம்ப்ரூனர்’-களாக பல துறைகளில் இருக்கும் பெண்களை கவுரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும். ப்ராண்ட் அவதாருடன் ‘நேடிவ்லீட் பவுண்டேஷன்’ என்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருக்கும் அமைப்பும் இந்நிகழ்வில் கைக்கோர்த்துள்ளது.

நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா, சுயசக்தி விருதுகளின் டைட்டில் ஸ்பான்சராக இருந்தனர். கோ-ஸ்பான்சராக சத்யபாமா பல்கலைகழகம் மற்றும் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனமும், அசோசியேட் ஸ்பான்சராக சக்தி மசாலா, லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் தைரோகேர் நிறுவனம் இணைந்தது. இந்நிகழ்ச்சியின் டிஜிட்டல் பார்ட்னர் யுவர்ஸ்டோரி தமிழ். 

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Related Stories

Stories by Sandhya Raju