இந்தியாவில் தொழில்நுட்ப புதுமையை ஊக்குவிக்க ஃபேஸ்புக் அறிவித்துள்ள ஆக்சிலரேட்டர் திட்டம்!

இந்திய இன்னோவேஷன் ஹப் மற்றும் ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள், டெவலப்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுகிறது ஃபேஸ்புக்!

0

ஃபேஸ்புக் T-hub உடன் இணைந்து ’இந்திய இன்னோவேஷன் ஹப்’ என்கிற தொழில்நுட்பம் சார்ந்த துரிதப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது VR சார்ந்த 10 ஸ்டார்ட் அப்கள் தங்களது வணிகங்களை புதுமையான விதங்களில் வளர்த்தெடுக்க உதவுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகப்படுத்த ஃபேஸ்புக்கின் முயற்சியில் ஒரு பகுதியாக இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள், டெவலப்பர்கள் மற்றும் மாணவர்கள் VR போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு ப்ராடக்டுகளை உருவாக்க தொடர் துரிதப்படுத்தும் திட்டங்களை வழங்கிவருகிறது.

ஃபேஸ்புக் இந்தியா மற்றும் தென் ஆசியா ப்ளாட்ஃபார்ம் பார்ட்னர்ஷிப் தலைவரான சத்யஜித் சிங் 
ஃபேஸ்புக் இந்தியா மற்றும் தென் ஆசியா ப்ளாட்ஃபார்ம் பார்ட்னர்ஷிப் தலைவரான சத்யஜித் சிங் 

ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் (GES) ஃபேஸ்புக் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆறு மாத கால ஆக்சிலரேட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பிற்கும் பயிற்சி, வழிகாட்டுதல், பயிற்சி பட்டறைகள், ஆய்வு, ஃபேஸ்புக்கின் VR இன்னோவேஷன் லேப் போன்றவற்றை அணுக வாய்ப்பளிக்கப்படும்.

ஃபேஸ்புக் இந்தியா மற்றும் தென் ஆசியா ப்ளாட்ஃபார்ம் பார்ட்னர்ஷிப் தலைவரான சத்யஜித் சிங் கூறுகையில், 

“இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதில் ஃபேஸ்புக்கில் பணியாற்றும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சியடையவும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறு சிறந்த திட்டங்கள் விரைவாக வளர்ச்சியடைய உதவும் என்பதை எங்களது அனுபவத்திலிருந்து அறிவோம்.”

இன்னோவேஷன் ஹப் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிடைக்கும். முதல் துரிதமான திட்டம் 2018-ம் ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் ஸ்டார்ட் அப் வில்லேஜ் கலெக்டிவ் உடன் இணைந்து ஃபேஸ்புக் ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த தலைமுறை ப்ராடக்ட் ஐடியாவை VR கொண்டு உருவாக்க உலகம் முழுவதும் இருந்து மில்லியன் கணக்கான பொறியியல் மாணவர்களிலிருந்து பத்து மாணவர் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த குழு 20 வார ப்ரோக்ராமில் பங்கேற்பார்கள். இதில் தங்களது திட்டங்களை மேம்படுத்திக்கொண்டு, குறைந்த மற்றும் அதிக நம்பக முன்மாதிரிகளை உருவாக்கிக்கொண்டு இறுதியாக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றல் அளிக்கப்படும்.

ஸ்டார்ட் அப் வில்லேஜ் கலெக்டிவ் தலைவர் சஞ்சய் விஜயகுமார் கூறுகையில், 

“இந்தியா தொழில்நுட்ப அதிகாரத்துடன் விளங்க நமது பொறியாளர்களின் திறமைகளில் மாற்றம் அவசியமாகிறது. நடைமுறை சாராத வகுப்பறை ப்ராஜெக்டுகளிலிருந்து நடைமுறை சார்ந்த துறை ப்ராடக்ட்ஸ்களை உருவாக்குவதற்கான மாற்றம் தேவை. ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் திட்டத்திற்காக ஃபேஸ்புக்குடன் இணைவதால் நமது பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ரியல் ப்ராடக்ட்ஸை எவ்வாறு உருவாக்குவது என்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகில் நேர்மறை மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது என்றும் தெரிந்துகொள்ள உதவும்.”

Boost மற்றும் SheMeansBusiness வாயிலாக 12,000 பெண் தொழில்முனைவோர் உட்பட 60,000-க்கும் அதிகமான சிறு வணிகங்கள் இதுவரை இந்தியாவில் ஃபேஸ்புக்கால் பயிற்சி பெற்றுள்ளனர். ஃபேஸ்புக்கின் நெட்வொர்க் மற்றும் அதன் தொடர்பு காரணமாக உலகெங்கிலுமிருந்து 250 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவிலுள்ள வணிகங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியா ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக மாறியிருப்பதை Workplace என்கிற புதிய முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

T-hub-ன் சிஇஓ ஜெய் கிருஷ்ணன் கூறுகையில், 

“VR போன்ற வருங்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஸ்டார்ட் அப்கள் ஆராய்வதற்கு அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டும் ஃபேஸ்புக்கின் முயற்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா