'ஈட்பிரெஷ்' தொடங்கிய சென்னை 'ஓவன்பிரெஷ்' குழு- உணவு சந்தையில் புதுவகை முயற்சி ! 

0

வெவ்வேறு வகையிலான உணவு சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்-களில் நாம் உழைத்து சலித்து போனாலும், தொழில் செய்வதில் அவை அளிக்கும் சவுகரியத்தை ஒருவரால் எளிதில் புறக்கணிக்க முடியாது. ப்ரன்ச் வேளை மற்றும் மதிய உணவு வேளையில் எல்லாரும் எதிர்பார்க்கும் உணவு வகைகளையே, பல உணவு சார்ந்த தொழில் நுட்ப ஸ்டார்ட்அப்-கள் வழங்குகின்றன.

உணவை டெலிவரி செய்தல், இணைய வழி உணவகம் மற்றும் புதுமையான விநியோக வழிமுறை முதலிய சேவைகளைக் கொண்டு பிரெஷ்மெனு, ஸ்விக்கி, ஜோமடோ, ஹோலாசெப் / இன்னர்செப் போன்ற ஸ்டார்ட்அப்-கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை போலவே சென்னை தொழில் முனைவர் ஒருவர், உணவு விநியோக சேவை தடத்தை உருவாக்கி உள்ளார். ஆனால் இவரது தொழில்முனைவில் என்ன சுவாரஸ்யம் என்றால், இவர் ஏற்கனவே "ஓவன்பிரெஷ்" எனப்படும் பேக்கரி கடைகளை உருவாக்கி லாபம் கண்டுவருபவர்.

கடந்த வருடம் உணவு சார்ந்த தொழில்முனைவுகள் பொருளாதாரத்தில் சரிவை எதிர்கொண்டாலும், ஓவன்பிரெஷ், சென்னை மற்றும் பெங்களூரில் 50 கடைகளைக் கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 8000 வாடிக்கையாளர்களுக்கு குழு சேவை செய்து வந்தது.

ராஜீவ்,  அவரது 5ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்கள் குழுவுடன்
ராஜீவ்,  அவரது 5ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்கள் குழுவுடன்

உணவு விநியோக சேவையின் தேவை

ஆன்லைன் உணவு சேவையை இந்திய நுகர்வோர்கள் அவசர தேவையாக எதிர்பார்ப்பதை நாங்கள் கவனித்தோம்; இவர்களை வித்தியாசமான வழிகளைக் கொண்டு கையாள வேண்டும் என்பதை எங்கள் ஓவன்பிரெஷ்- இன் தொழில் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டோம், என்றார் 'ஈட்பிரெஷ்' -இன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜீவ் சுப்பிரமணியன்.

புல்-ஸ்டாக் அணுகுமுறையை (Full stack model) பின்பற்றி ஈட்பிரெஷ் செயல்பட்டு வந்ததால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறான செப் செய்த உணவுகள், சாலடுகள், இனிப்புகள் மற்றும் பானங்கள் வகைகளில் மாறுப்பட்ட மெனுவை ஈட்பிரெஷ் கொண்டிருந்தது. ஈட்பிரெஷ்-இல் பணிசெய்யும் சமையல்காரர்களுக்கென சொந்தமாக ஒரு சமையல் அறை இருக்கும். கொள்முதல் இருந்து டெலிவரி செய்யும் வரையிலான வழங்கல் பிணைப்பை குழு பார்த்துக் கொள்ளும்.

உணவு விநியோகப்படுத்தும் பல சேவை அமைப்புகள், ஒரு செயலியைக் கொண்டு, அதன் மூலம் வாடிக்கையாளர் ஆர்டர் பெற்று, உணவங்களில் இருந்து உணவை திரட்டி டெலிவரி செய்து வருகின்றன. ஆனால், முதலீட்டை விட 50 சதவீதம் அதிகமாக லாபம் கிடைக்கும் வழியான புல்-ஸ்டாக் அணுகுமுறையைப் பின்பற்றினால் தான், இந்த மாறியான உணவு சேவை தொழிலை நன்கு செயல்படுத்த முடியும்! இதை இலாபகரமான தொழில் உருவாக்கிய அனுபவத்தில் நான் கூறுகிறேன், என்றார் ராஜீவ்.

ஈட்பிரெஷ் சேவையை வெளியிட வேண்டும் என நாங்கள் எடுத்த முடிவு நியாமான ஒன்றாகும். இது எங்களுக்கு வலிமைகளையும் வாய்ப்புகளையும் வாரி தந்தது. இதனால் முழு நேர உணவு சேவை வழங்கும் ஸ்டார்ட்அப்-களுக்கு மத்தியில் எங்களால் வேகமான வளர்ச்சியை காண முடிந்தது, என்றார் ராஜீவ்.

ஈட்பிரெஷ்-இன் முழு ஸ்டாக் மாடல்

ஈட்பிரெஷ் உருவாக்குவதற்காக ராஜீவ், முன் ஓலா-வின் டெலிவரி சேவையில் பணிபுரிந்த வினே கரோடியா, உணவக தொழில்முனைவை இயக்கும் ஷரன் யுஆர், இவர்களுள் முதன் முதலில் உணவு விநியோகிப்பதில் இருக்கும் தேவையை எடுத்துரைத்த ஜிபி மோகன்ட்டி ஆகியோருடன் கூட்டுப் பங்காண்மை ஏற்படுத்திக் கொண்டார்.

ஈட்பிரெஷ்-இன் சாப்பாடு டப்பா
ஈட்பிரெஷ்-இன் சாப்பாடு டப்பா

சுவிட்ச் தட்டியவுடன் பல்பு எறிவதுபோல் உணவு விநியோகிக்கும் சேவையும் எளிதாக இருக்க வேண்டும் என ஈட்பிரெஷ் குழு நம்புகிறது. இவர்களது தயாரிப்பு அட்டவணை தினமும் மாற்றப்படுகிறது; பின் புதிய சரக்குகளும் ஒரு மணி நேரத்திற்குள் நிரப்பப்படுகிறது.

சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கவும், இணையதளத்தில் ஆர்டர் செய்யும் உணவு அளவை, 45 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யுமாறு ஒருங்கிணைந்து பணிபுரிவதாக இக்குழு கூறுகிறது.

இணையதளத்தில் ஆர்டர் செய்த நேரத்தில் இருந்து, ஆர்டர் செய்த உணவு தகவலை வாடிக்கையாளர் அருகிலுள்ள கிளைக்கு தெரிவித்தல், சமையல்காரர் உணவை தயார் செய்தல், டெலிவரி செய்ய ஆள் நியமித்தல் ஆகிய வேலைகளை வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பின்தொடர்ந்து கவனிக்க முடியும். மேலும் ஈட்பிரெஷ்-இடம் இணையம் வசதியுள்ள வெப்பநிலை உணரும் கருவியும், புவிசார் இடம் கண்டறியும் செயலிகளும் உண்டு. இதனால், உணவு சரியான நேரத்திற்கு வந்தடைவது மட்டுமல்லாமல், அதே வெப்பநிலையுடன் சமையல்காரர் வழங்க எண்ணிய சுவை மாறாத உணவையே வழங்குகிறார்கள் என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.

ஓவன்பிரெஷ் அனுபவம்- ஈட்பிரெஷ்-இன் ஆக்கம்!

உணவு வர்த்தக வணிகத்தில், மக்களின் எண்ணம் எல்லாம் "சாப்பிட வேண்டும், இப்போதே சாப்பிட வேண்டும்" என்ற ஒரே உள்நோக்கம் தான் இருக்கும் என்கிறார் ராஜீவ். எங்களிடம் வடிவமைப்பும் தொழில்நுட்பமும் நன்கு ஒருங்கிணைந்து இருப்பதால், எங்கள் குழுவால் வேகமான சேவை அளித்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க முடிகிறது.

வருடத்தின் முதல் காலாண்டின் இறுதிக்குள், ஈட்பிரெஷ் 10 முதலீட்டாளர்களிடம் ஒப்பந்தம் மூலம் 51,500,000 டாலர் நிதியை கவர்ந்துள்ளது. பிரெஷ்மெனு'ஸ் சீரீஸ் ஏ நிதி மற்றும் ஸ்விக்கி சீரீஸ் சி-இன் 35 மில்லியன் நிதி, பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈட்பிரெஷ் ஒரு வருடத்திற்கு 25 கோடிக்கு மேல் வருவாய் விகிதம் காண்பதாக கூறியுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்கு 30 சதவீதம் கூட்டு வருமான வளர்ச்சி விகிதத்துடன் ஆறு மாத கால கட்டத்தில் பத்து மடங்கு வியாபார முன்னேற்றமும் கண்டுள்ளனர். 

"கடந்த ஒரு சில மாதங்களிலே நாங்கள் பெங்களூரில் 11 ஈட்பிரெஷ் டெலிவரி கூடங்களைப் புதிதாக தொடங்கியுள்ளோம்" என்று கூறினார் ராஜீவ். 

ஆனால் ஒரு நாளுக்கு எத்தனை ஆர்டர்கள் மற்றும் சராசரியான டெலிவரி அளவை சந்திக்கின்றனர் என்பதை கூற மறுத்து விட்டனர். தங்கள் ஓவன்பிரெஷ் தொழில் மூலம் கிடைத்த ஆதரவைக் கொண்டு ஈட்பிரெஷ்-இன் எல்லா சவால்களையும் சமாளித்து, தற்போது நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறோம் என்று ராஜீவ் பகிர்ந்து கொண்டார்.

எதிர்கால திட்டங்கள் குறித்து பேசும்போதும், ஆர்வத்தோடு எங்களை அணுகி வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் மட்டுமே எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறோம்.

இந்தியாவில் உணவை பொறுத்த வரையில், பல மில்லியன் டாலருக்கான வாய்ப்பு இருக்கிறது. முழு ஸ்டாக் மாடல் பயன்பாட்டாலே, எங்களால் லாபம் காண முடிந்தது என்கிறார்கள்.

ஓவன்பிரெஷ் சிறப்பாக செயல்பட்டுகொண்டிருக்கும் சென்னை மற்றும் பெங்களூரில், மேலும் தற்போது நிறைய ஈட்பிரெஷ் டெலிவரி சேவைகள் அமைக்க உள்ளனர். அத்துடன் இன்னும் 12-24 மாதங்களுக்குள் இவர்கள் சேவையை மும்பை, ஹைதராபாத், டெல்லியிலும் அமைக்க உள்ளனர்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்