பிரச்சனை சமயத்தில் பெண்களுக்கு உதவும் ஆப் உருவாக்கியுள்ள டெல்லி மாணவர்கள்!

0

மாணவர்கள் குழு ஒன்று ஒரு மொபைல் ஆப் தயாரித்துள்ளது. இது பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பிரச்சனை சமயத்தில் தங்கள் மொபைலை அசைத்தாலோ அல்லது கீழே போட்டாலே உடனடியாக அவசர உதவி கேட்டு கால் தானாக செய்துவிடும்.

ஹர்ஷ் மற்றும் அவரின் குழு, ஜேபி தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்தவர்கள். இவர்கள் ‘பன்ச்சி’ ‘Panchhi’, என்ற ஆப்பை டெல்லி பாரதி வித்யாபீட் கல்லூரி நடத்திய ஹேக்கத்தான் நிகழ்ச்சிக்காக வடிவமைத்தனர். 

24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதி நடைப்பெற்றது. இதில் 25 குழுக்கள் பல்வேறு கல்லூரி, மற்றும் பல்கலைகழகங்களில் இருந்து கலந்துகொண்டது. அரசின் ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்மார்ட் கிராம திட்டங்களின் வழியே, இந்த ஹேக்கத்தான் போட்டி, ‘ஸ்மார்ட் ஹாபிடாட்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. 

200 மாணவர் குழுக்கள் இப்போட்டிக்கு விண்ணப்பித்தனர். அதில் 25 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த போட்டியில் கலந்து கொண்டனர். 

அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, “இந்திரா காந்தி தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த தான்யா என்ற ஹேக்கர் மற்றும் அவரின் குழு, பெண்களுக்காக ஒரு ஆப்-பை உருவாக்கி இருந்தனர். இது உணவுவகைகள் கெட்டுப்போனால் அதைப்பற்றி மெசேஜ் அனுப்பும் செயலி ஆகும். 

உணவு வீணாக்கலை தவிர்க்க இந்த ஆப்பை செய்ததாக தான்யா கூறியுள்ளார். 

பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால உதவி ஆப்கள் பல ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்-ல் உள்ளது. அவை பெண்கள் பிரச்சனை சமயத்தில் தங்களுக்கு தேவைப்படும் உதவியை நாட உதவும் ஆப்கள் ஆகும். அந்த வகையில், டெல்லி மாணவர்கள் தயாரித்துள்ள ஆப், போனை அசைத்தால் அல்லது கீழே போட்டால் பிரச்சனை குறித்து புரிந்து கொண்டு தாமாகவே அவசர உதவியை நாடும் என்பது சிறப்பு. 

கட்டுரை: Think Change India