தனது சொந்த நிறுவனம் கையகப்படுத்தப்பட்டதால் எப்படி இருந்த திண்டுக்கல் சந்தோஷ் இப்படி ஆகிட்டாரே!     

1

தன் சொந்த ஊரான திண்டுக்கலில் இருந்து தொடங்கிய தனது நம்பமுடியாத வெற்றி பயணத்தை தொழில்முனைவர் சந்தோஷ் கர்ணானந்தா, சில நாட்களுக்கு முன் யுவர்ஸ்டோரியிடம் கூறினார். (திண்டுக்கல் தொடங்கி கூகுள், சென்னை வரை: தமிழரின் 'ஆங்கில'ப் பயணம்!)  தான் எப்படி போராடி ஆங்கிலம் கற்றுக் கொண்டார்? குடும்பம் மற்றும் சமூகத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை எதிர்த்து, எப்படி இன்ஜினியரிங்கை தேர்ந்தெடுத்து படித்தார்? எப்படி கூகுளில் சேர்ந்தார்? பின் இறுதியில், எப்படி சொந்தமாக சென்னையில், ஆங்கிலம், ஜிமேட், ஜிஆர்இ பயிற்சி தளங்களை நிறுவினார்? என்பதெல்லாம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

விடாமுயற்சி ஆனது தொழில் முனைவோருக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து சந்தோஷ் பேசினார். இவரது வெற்றிக்கும் விடாமுயற்சிதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வணிகத்தின் ஒரு பகுதியானது, வெளியிடப்படாத அதிக தொகைக்கு வாங்கப்பட உள்ளது.

சந்தோஷ், சென்னையில் 'மேராஇங்கிலீஷ்', மைஜிமேட், மைஜிஆர்இ முதலிய பயிற்சி தளங்களை நிறுவி, நிர்வகித்து வந்திருந்தார். கடந்த மே மாதத்தில், டெல்லியில் உள்ள இந்தியன் சென்டர் ஃபார் அகாடெமிக் ரேங்கிங்ஸ் & எக்ஸ்செல்லன்ஸ் ப்ரைவேட் லிமிடட் (ICARE) நிறுவனம், இவரது மைஜிமேட் மற்றும் மைஜிஆர்இ தளங்களை வாங்கி கொள்வதாக, சந்தோஷிடம் டீல் செய்து கொண்டுள்ளது. இந்த செய்தியை யுவர்ஸ்டோரியிடம் பூரிப்புடன் சந்தோஷ் தெரிவித்து கொண்டார்.

உலகளவில் அங்கீகாரம், மதிப்பீடு, தரவரிசை, ஆராய்ச்சி, மற்றும் ஆலோசனை சேவைகள் முதலிய பிரிவுகளில் உயர்கல்வியின் தரத்தை முன்னேற்றுவதில் முன்னோடியாக திகழும் ஒரு நிறுவனம், இந்த ஐகேர். இந்நிறுவனத்தின் பொதுக்குழு தலைவர், 'மோகன்தாஸ் பை' ஆவார். புகழ்பெற்ற பொருளாதார வல்லுனரான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஐ.ஐ.டி. மெட்ராஸின் முன்னாள் இயக்குனரும், ஏஐசிடிஇ (AICTE)இன் முன்னாள் தலைவருமான டாக்டர் ஆர்.நடராஜன் ஆகியவர்களும் ஐகேர் பொதுக்குழுவின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.

"மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மாதிரியான வாய்ப்புகள், தொழில் முனைவோர்களை நன்கு ஊக்கப்படுத்தும். நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய மைஜிமேட் மற்றும் மைஜிஆர்இ தளங்களை விற்பதை நினைத்தால், வருத்தமாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது, இதுதான் வாழ்க்கை. அதிலும் முக்கியமாக இதுதான் வணிகமும் கூட" என்றார் சந்தோஷ்.

2013 பிப்ரவரியில் சந்தோஷ், தன் மைஜிமேட் மற்றும் மைஜிஆர்இ தளங்களை சென்னையில் திடமாக உருவாக்கினார். "நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் நாங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், அடிப்படை செயல்பாடுகள் அனைத்தும் நிறைவேறியதாலும், மற்ற நகரங்களிலும் எங்கள் சேவையை தொடங்குவதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம். இந்தியளவில் பெயர்பெற்ற ஐகேர், என் மைஜிமேட் மற்றும் மைஜிஆர்இ தளங்களை வாங்கியிருப்பதால், இனி நாடளவில் என் தளங்கள் கலக்கப் போகிறது", என்று கூறினார் சந்தோஷ்.

ஐகேர் உடன் செய்த இந்த டீல் மூலமாக, சந்தோஷ் ஐகேர் நிறுவனத்தின் வியூக இயக்குனராகி உள்ளார்.  இவர் இவரது 'மேராஇங்கிலீஷ்' பயிற்சி அமைப்பையும் நிர்வகித்து கொண்டுதான் இருக்கிறார்.

மைஜிமேட் மற்றும் மைஜிஆர்இ தளங்களை வாங்கபோகும் டீல் குறித்து, ஐகேர் துணை தலைவர் கார்த்திக் ஸ்ரீதரிடம் கேட்டபோது,

 "யுவர்ஸ்டோரி மூலமாக எங்களுக்கு சந்தோஷ் கர்ணானந்தா பற்றி தெரிய வந்தது. சிறிய கிராமம்,  சுமாரான பின்னணியில் இருந்த வந்த சந்தோஷ், இளைய வயதில் இத்தனை சாதனை செய்தது, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெவ்வேறு ஸ்டார்ட்அப்ஸை வெற்றிகரமாக அமைத்த அனுபவங்களைக் கொண்டு, நல்ல திட்டங்கள் மூலம் எங்கள் வணிகத்தை அவரால் விரிவடைய செய்ய முடியும்."

இந்தியாவில் ஜிஆர்இ மற்றும் ஜிமேட் தேர்வுகளுக்கு, எப்பொழுதும் ஒரு உயர்ந்த மதிப்பு இருந்து வருகிறது. 2015இல் 30,000 பேர் ஜிமேட் தேர்வையும், 1,20,000 பேர் ஜிஆர்இ தேர்வையும் எழுதியுள்ளனர். அத்துடன், இந்த தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் மார்கெட்டும் நன்றாக சூடு பிடித்து வருகிறது. அதனால், எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளைக் கொண்டு, இந்தியாவின் பல கல்வி நிலையங்களிடம் எங்களுக்கிருக்கும் இணைப்பு மூலமாக, தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் துறையில் நன்கு செயல்படுவதற்கு, இது தகுந்த சமயமாகும். எங்கள் வாடிக்கையாளர்களின் சேவைகளையும், எங்கள் தொழிலையும் விரிவடையச் செய்வதற்கு நாங்கள் மேற்கொண்ட ஒரு வியூகம்தான், இந்த முடிவு" என்று கார்த்திக் கூறினார்.

நெகிழ்வித்த தருணங்கள்

முந்தைய காலத்தில் தொழில் வளர்ச்சியடைய நான் செய்த பணிகளை நினைவுகூர்ந்து பார்க்கும்போது, தற்போது நடக்கும் இந்த நிகழ்வுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

"ஆரம்ப காலத்திலெல்லாம், நான் கல்லூரிகளின் வாசலுக்கு வெளியே நின்று, மாணவர்களுக்கு பிரசுரங்கள் (Flyers) அளித்ததுண்டு. தனி ஒருவனாக நானே வேலைகளை செய்து வந்தேன். நானே எனக்கு மார்க்கெட்டிங் ஆளாகவும், நானே எனக்கு பணியாளராகவும் இருந்தேன். உண்மையில் ஒரு தொழிலின் சுத்தமான இயல்பை ஸ்டார்ட்அப்பில் மட்டும் தான் பெற முடியம்."

என்று சந்தோஷ் பகிர்ந்து கொண்டார். முன்கூறியது போல, மாணவர்களுக்கு நான் கொடுக்கும் சேவைகள் குறித்து கூறுவதற்காக நான் கல்லூரிகளுக்கு செல்வதுண்டு. ஒரு முறை அப்படி செல்லும்போது, பல்கலைகழகத்தின் பாதுகாப்பு ஊழியர் என்னை உள்ளே விடவில்லை. "அதற்கு அடுத்த மாதமே, ஐகேர் வியூக இயக்குனரான பின், நான் அதே பல்கலைகழகத்திற்கு ஒரு அழைக்கப்பட்ட விருந்தாளியாக சென்றேன்" என்று சந்தோஷ் பெருமையுடன் கூறினார்.

ஒரே மாதத்தில் என்ன ஒரு மாற்றம் அல்லவா?        

கட்டுரையாளர்: தீப்தி நாயர்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்