3 கதைகள், 3 நாடுகள் ஆனால் ஒரே சவால் – சுகாதாரத் துறையின் கதாநாயகிகள்...

0

இது GE ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை!

உண்மை: பெண்கள், சுகாதாரத் துறையில் 3 டிரில்லியன் டாலர்களுக்கு பங்களிப்பு செய்கிறார்கள், ஆனால் அதர்கேற்ற அங்கீகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை.

உண்மை: ஒரு ஆய்வின்படி பெண்களே அதிகமாக நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெண்கள் அதிகாரத்தில் இருந்தால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றவாறு சுகாதாரத் துறையில் நல்ல முடிவுகளை எடுப்பபார்கள்.

உலகம் முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுகாதாரத் துறையில் 75% பெண்களே இருக்கின்றனர் ஆனால் அதில் வெறும் 35% பெண்கள் மட்டுமே அதிகாரத்திலும் மேல் தட்டு வேலைகளிலும் இருக்கின்றனர். பல பெண்களின் பங்களிப்பு வெளியில் தெரியாமல் காற்றோடு கரைந்து போகின்றது.

சென்னையைச் சேர்ந்த டாக்டர். ஷர்மிலா ஆனந்த், தான் மருத்துவம் படித்துக் கொண்டு இருக்கும்பொழுதே, தன் 23 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். அதன் பின் தன் குழந்தையை இந்தியாவிலே விட்டு, அவர் அமெரிக்காவிற்கு எம்.பி.ஏ படிக்கச் சென்றார். அவர் சந்தித்த இந்த சவாலே தற்பொழுது தான் வெற்றிகரமாய் நடத்தி வரும் சமூக நிறுவனத்தை தொடங்க உந்துதலாக இருந்தது. டாக்டர். சர்மிளா நடத்தும் சமூக நிறுவனத்தில் இளம் பெண்களுக்கு எக்ஸ்ரே தொழில்நுட்பங்கள் கற்று தரப் படுகிறது

“இந்த சமூகம், பெண்கள் எப்போழுதும் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறது,” என்கிறார் மெர்சி ஓவௌர், 

கென்யாவிலுள்ள லவலாவின் சமூகத் தலைவர். எல்லா வாராமும், தன் குடும்பத்தை விட்டு 2 மணிநேரம் பயணம் செய்து தன் சமூகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்கிறார் மெர்சி ஒவௌர்.

கடைசியாக, தென் சுலாவேசி, இந்தோனேசியாவை சேர்ந்த ரோஹனி, தனது கிராமத்தில் உள்ள கர்பிணி பெண்களை சமூக நல மையத்தில் சேர்க்கவும் நன்கு பார்த்து கொள்ளவும் ஆம்புலன்ஸ் சேவையை செய்கிறார். சந்தையிலோ அல்லது பக்கத்தில் உள்ள மலைகளிலோ எங்கு கர்பிணி பெண்களை பார்த்தாலும் நின்று அவர்களை நலம் விசாரித்து தேவை என்றால் சமூக நல மையத்திற்கு அழைத்துச் செல்வார்.

இந்த மூன்று பெண்களும் வெவ்வேறு பின்னனியில் இருந்து வந்தவர்கள், வேறு மொழி பேசுபவர்கள். ஆனால் இவர்கள் போகும் பாதையோ ஒன்று; பல சாவல்களையும் எதிர்ப்பார்புகளையும் மீறி சுகாதாரத் துறையில் தனக்கென்று ஒரு வழியை வகுத்துக் கொண்டவர்கள்.

GE ஹெல்த்கேர் அமைப்பு, அதிகாரத்தில் அதிகமான பெண்களை அமர்த்த முயற்சிகள் மேற்கொள்கிறது. 70-வது உலக சுகாதார சபையில், GE ஹெல்த் மற்றும் உலகளாவிய பெண்கள் சுகாதார அமைப்பு; சுகாதாரத் துறையில் பல்வேறு பிரிவில் மற்றும் பல நாடுகளில் இருந்தும் 13 “சுகாதார துறையின் கதாநாயகிகளை” பட்டியலிட்டது. முதலில் சுகாதாரத் துறையின் கதாநாயகிகளுக்கான விருது அப்பெண்மணிகளுக்கு வழங்கி கௌரவித்தது. இதில் டாக்டர். ஷர்மிலா ஆனந்த், மெர்சி ஓவௌர் மற்றும் ரோஹனியும் அடங்குவர்.

“இந்த பெண்கள் அனைவரும் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்த ஓயாமல் உழைக்கின்றனர். உலகளாவிய சுகாதாரத் துறையை வருங்கால சந்ததியனருக்கு ஏற்றவாறு மாற்ற உழைக்கும் இப்பெண்களை, நாங்கள் அங்கீகரித்து அவர்கள் மேலும் வளர உதவுவோம்,” 

என்கிறார் டெர்ரி பிரெஸ்ஹேன்ஹாம், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, GE ஹெல்த்கேர்.

“ஆய்வின் படி, பல பெண் தொழிலாளர்கலுக்கு குறைவான சம்பளம் கிடைக்கிறது மற்றும் தேவையான அங்கீகாரம் கிடைப்பதில்லை. உலகளாவிய சுகாதாரத் துறையில், பெண்களே முன் நின்று ஆரோக்கியமான சமுதாயத்தை உறுதிப்படுத்த கடுமையான சுகாதார சவால்களை மேற்கொள்கின்றனர். இருந்தாலும் அவர்கள் முடிவு எடுக்கும் மேம்பட்ட இடத்தில் இல்லை,”
“சுகாதார துறையின் கதாநாயகிகள்" என்கிற ஆவணப்படம்.
“சுகாதார துறையின் கதாநாயகிகள்" என்கிற ஆவணப்படம்.

என்று உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் இணை நிறுவனர் ரூபா தத் கூறியுள்ளார். GE-இன் முக்கிய குறிக்கோள் அதிக சாவலை சந்திக்கும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது மற்றும் பெண்களின் மேம்பாட்டில் ஈடுபடுவதே ஆகும். 

தமிழில்: மஹ்மூதா நௌஷின்