முகேஷ் அம்பானியின் மகள் திருமண அழைப்பிதழின் மதிப்பு 3 லட்சமா..?

0

பிரபலங்களின் திருமணம் என்றாலே ஆடம்பரங்களும், பிரமாண்டங்களும் நிறைந்திருக்கும். அந்த நிகழ்வை எதிர்நோக்கி மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும் இந்தியாவின் பிரபல பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் என்றால் ஆடம்பரத்திற்கும், எதிர்பார்ப்புக்கும் அளவே இருக்காது. அந்த வகையில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணத்திற்கான அழைப்பிதிழ் வீடியோ  இணையதளத்தில் பரவலாகி வைரல் ஆகியுள்ளது. 

வரும் டிசம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமணப் பத்திரிக்கை மிக பிரமண்டமாக அமைந்துள்ளது. அட்டையில் இரண்டு பக்கங்கள் போல் இல்லாமல், அழகாக வடிவமைக்கப்பட்ட சேமிப்பு பெட்டியில் அழைப்பிதழோடு பரிசுகளும் வைக்கப்பட்டுள்ளதே இதன் ஹைலைட். 

ஒரு அழைப்பிதழின் விலை 3 லட்சம் என்கின்றனர்.

பெட்டியின் முன் பக்கம் மணமக்களின் முதலெழுத்துக்கள் பதிக்கப்பட்டு இரண்டு அடுக்குகளாக கொண்டுள்ளது. முதல் அடுக்கில் திருமண அழைப்பிதழ் டைரி அமைந்துள்ளது, அதில் ஒரு பக்கம் கடவுளின் புனித மந்திரங்கள், அடுத்தப்பக்கம் மணமகள் மற்றும் மணமகன் பாட்டிகளின் பிரத்தியேக குறிப்பு, அடுத்து திருமணத்தின் பல்வேறு விழாக்களின் விளக்கம் மற்றும் தேதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்கமாகும்.

அழைப்பிதழின் அடுத்தப்பகுதி விருந்தினருக்கான பரிசுகள், இரண்டாவது அடுக்கை திறந்தால் காயத்ரி மந்திரம் ஒலிக்கிறது அதில் 4 சிறிய நகைப்பெட்டிகள் உள்ளது. அதில் விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளின் சிறிய சிலைகள் மற்றும் ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு அணிகலன் பரிசு உள்ளது.

கல்யாண பத்திரிக்கையின் பிரம்மாண்டத்தைக் கண்ட மக்கள் கல்யாண அழைப்பிதழ் இப்படி இருந்தால் திருமண விழா எப்படி ஜொலிக்கப்போகிறது என ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த தம்பதியர்களின் சங்கீத் விழாவில் ஹாலிவுட் பாடகர் பியான்ஸ் பாட இருப்பதாகவும் அறிவித்திருந்தனர். 

டிசம்பர் 8 மற்றும் 9 உதைப்பூரில் கல்யாணத்திற்கு முன்பு இரண்டு வரவேற்பு நிகழ்ச்சியும், டிசம்பர் 12 மும்பையில் பல பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் திருமணம் நடக்கவிருக்கிறது.

தகவல் உதவி: இந்தியா டுடே | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL