89 வகைகளில் புடவை கட்டலாம்... புடவை கட்டுதலை டிஜிட்டலாக்கி இந்திய நிறுவனம்! 

0

இந்தியாவில் ஒவ்வொரு பெண்களும் அவர்கள் மதம் மற்றும் கலாச்சாரம் அடிப்படையில் பல விதமாக புடைவைகளை கட்டுவர். இருப்பினும் ஒரே மாதரியான புடவை அணியும் பாணி இங்கு பரவலாக பரவி பாரம்பரியத்தை அளிக்கிறது. இப்பொழுது ’தி சாரி சீரீஸ்’ என அனைத்து வகையான புடைவை அணியும் பாணியை ஆவனப்படுத்தத் துவங்கியுள்ளனர்.

மல்லிகா வர்மா கஷ்யப் 2007-ல் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியா வந்த அவர் 2013-ல் பார்டர் & ஃபால் என்னும் டிஜிட்டல் வெளியீடு மற்றும் நிறுவனத்தை துவங்கினார். இது இந்தியாவின் வடிவமைப்பை அடையாளம் காட்டும் நோக்கில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஓர் திட்டம்தான் ’தி சாரி சீரீஸ்’.

“புடவை கட்டுவதில் சாம்பியன் ஆக வேண்டும் என பலர் முயலுகின்றனர்; சந்தல் போலாங்கர் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் புடவை அணிதல் கலை பற்றி ஓர் விளக்க கையேடு எழுதினார்: அதேபோல் 2010-ல் ரிட்டா கபூர் சிஷ்டியும் அதே போன்ற புத்தகத்தை எழுதினார். இவ்விரண்டு புத்தகங்களும் பழங்காலத்தில் இருந்து துவங்கி 100 வகையான பாணிகளை காட்டுகிறது...”

எங்களது இந்தத் திட்டம் பல ஆராய்ச்சிகளை செய்து இன்றும் பழங்கால பாணிகள் பழக்கத்தில் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது என்கிறார் மல்லிகா வர்மா கஷ்யப்.

இந்த சாரி சீரீஸ் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது: இதில் முதல் பாகம் 80 வகையான புடவை கட்டும் குறும்படம். இந்தியாவின் கலாச்சாரப்படி 15 மாநிலங்களின் புடவை கட்டும் பாணியை தனி தனியாக இரண்டு நிமிட குறும்படங்களாக கொடுத்துள்ளனர்.

இரண்டாவது பாகம், புடவையின் கடந்தகாலம், எதிர்காலம் மற்றும் தற்போதைய பாணியை காட்டும் படமாகும். இதை மூன்று தனித்தனி படமாக பூஜா கவுல் மற்றும் பான் டியூக் இயக்கியுள்ளனர்.

“இது எதையும் புதுப்பிக்கும் நோக்கில் எடுத்ததல்ல, ஆவனப்படுத்த செய்த முயற்சி தான். புடவை மறந்து போன ஒரு பாணி அல்ல, இன்றும் லட்சகணக்கான பெண்கள் தினந்தோறும் அணிந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இங்கு பலர் புடவை என்றால் புடவை, ரவிக்கை, பாவாடை அல்லது பெரியவர்கள் அணிவது என்று அல்லது காட்டுவதற்கு சிரமம் என்று எண்ணுகின்றனர் ஆனால் இது எதுவும் உண்மை இல்லை....”

புடவை கட்டுவதில் பல வகை உண்டு, ரவிக்கை அல்லது பாவாடை இல்லாமலும் புடவை கட்டலாம். எவரும் தங்கள் விருப்பதிற்கு ஏற்றவாறு எந்த வகையிலும் புடவையை அணியலாம் என்கிறார் கஷ்யப். தி சாரி சீரீஸ் பின்வரும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் துவங்கப்பட்டது: 

இன்றைய இந்தியாவில் பாரம்பரிய நோக்கத்தில் மட்டும் அணியும் ஆடையை பற்றிய மறுபார்வையை பார்க்கலாமா? இன்றைய பெண்களுக்கு புடவை எப்படி இருக்கிறது?

பார்டர் & ஃபால் இந்த ஆவணத்தை தயாரிக்க பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறந்த அணியை கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் ஆலோசகராக, டான்பானில் இருக்கும் ரிடா கபூர் மற்றும் அவரது குழுவினர்கள் இந்த திட்டத்தை வெளியிட தங்கள் நிபுணத்துவத்தை வழங்கியுள்ளனர்.

அக்டோபர் 2017-ல் இந்த “தி சாரி சீரீஸை வெளியிட்டது பார்டர் & ஃபால். தற்போது அவர்களது நோக்கம் தாங்கள் இயக்கிய அந்த 3 படங்களை வெளியிடுவதில் திரும்பியுள்ளது. பெங்களூர், சிகாகோ, டெல்லி, கராச்சி, மும்பை, நியூ யார்க் சிட்டி மற்றும் சிங்கப்பூரில் நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த சீரீஸ் இதுவரை கூகிள் கலை & கலாச்சாரம் மற்றும் நியூ யார்க்கில் நவீன கலை அருங்காட்சியகம் அங்கிகாரம் படுத்தியுள்ளது. இந்த இலாப நோக்கமற்ற செயல்திறன் குட் எர்த், ரா மாங்கோ, வெர்வ், கிக்ஸ்டார்டர் மற்றும் பலவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: வல்லபா ராவ் / தமிழில்: மஹ்மூதா நெளஷின்

இணயதளம்: “தி சாரி சீரீஸ்”