வாட்ஸ் அப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆகிறார் அபிஜித் போஸ்!

Ezetap என்ற பேமண்ட் தளத்தின் இணை நிறுவனரான அபிஜித், வாட்ஸ்-அப் இந்தியாவின் தலைமை பொறுப்பேற்க உள்ளார்.

0

வாட்ஸ் அப் இந்தியாவின் தலைவர் ஆகியுள்ளார், Ezetap நிறுவனத்தின் இணை நிறுவனரும் சி.இ.ஓவுமாக இருந்த அபிஜித் போஸ். கலிஃபோர்னியாவுக்கு வெளியே முதல் முறை வாட்ஸ் அப்’பிற்கு இந்தியாவில் பிரத்யேகமாக ஒரு அலுவகலம் அமைக்கப்பட இருக்கிறது. குர்கவுனில் அமைக்கப்படும் இந்த அலுவலகத்தை வழிநடத்தப் போகிறார் அபிஜித் போஸ். 

போஸும், அவருடைய குழுவும், பெரு வணிகங்களும் சிறு வணிகங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய நிறைய வசதிகளை வாட்ஸ் அப்’பில் உருவாக்குவதில் கவனம் செலுத்தப் போகிறார்கள். சமீபத்தில் தான், 

சிறு வணிகர்களுக்கு ’வாட்ஸ் அப் பிசினஸ்’ எனும் செயலியையும், பெரு வணிகர்களுக்கு என ’வாட்ஸ் அப் பிசினஸ் ஏபிஐ’ எனும் செயலியையும் வாட்ஸப் அறிமுகப்படுத்தியது. இன்று, இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கு மேலானவர்கள்  இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள். 

இந்தியாவில் வாட்ஸ் அப் பெரிய ஈடுபாட்டோடு இருக்கிறது. மக்கள் பிறரை தொடர்பு கொள்ள, பிறரோடு இணையவும், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் நிறைய தயாரிப்புகளை கட்டமைப்பது உற்சாகமளிக்கிறது. 

அபிஜித் போஸ் ( Image courtesy: entrackr.com) 
அபிஜித் போஸ் ( Image courtesy: entrackr.com) 
”ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக, இந்தியா முழுவதுமுள்ள வணிகர்களுக்கு உதவும் வகையில் அர்த்தமுள்ள பார்ட்னர்ஷிப்கள் வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என அபிஜித்திற்கு தெரியும்,” என்கிறார் வாட்ஸப்பின் சிஇஒ மாட் இடெமா.
“வாட்ஸ் அப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார உள்ளடக்கத்துக்கும் (inclusion) முக்கியமானதொரு உறுப்பாக இருக்கும். குடும்பங்கள் மட்டுமல்ல, வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களோடும் கூட வாட்ஸ் அப் வழியே தான் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் வழியே நிறைய நன்மைகளை கோடிக்கணக்கான இந்தியர்கள் பெற்றுக் கொள்ள வாட்ஸ் அப் உதவும்,” என்கிறார் போஸ். 

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Ezetap, மின் பண பகிர்மானங்கள் செய்யும் ஒரு நிறுவனம். முதல் அடுக்கு வணிகர்களின் ஆதரவோடு நடத்தப்பட்ட நிறுவனம் அது. 2018 ஆம் ஆண்டு, இந்தியாவின் டிஜிட்டல் பகிர்மானங்களில் உண்டாக்கிய தாக்கத்திற்காக ‘டாப் 50 டிஸ்ரப்டர்’ பட்டியலில் இடம் பெற்றிருந்தது ஈஸிடாப்.  அதன் இணை நிறுவனரான அபிஜித் போஸ், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் கார்னல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். 

2019-ன் தொடக்கத்தில் வாட்ஸ் அப்பில் பொறுப்பேற்கப் போகிறார் போஸ். 

Related Stories

Stories by YS TEAM TAMIL