தொடர் பணி நீக்கத்தால் விரக்தி அடைந்த சென்னை, பெங்களுரு ஐடி ஊழியர்கள் தொடங்கிய யூனியன்! 

0

தொடர் பணி நீக்கம் மற்றும் பணியின் நிலைத்தன்மை குறித்து அச்சம் ஊழியர்களிடம் குறிப்பாக ஐடி ஊழியர்கள் நிலவிவருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களில் ஐடி ஊழியர்கள் யூனியன் தொடங்கியுள்ளனர். இது சென்னையில் சில மாதங்களுக்கு முன் பல்லாயிர ஐடி ஊழியர்களை பெரிய நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்தபோது தொடங்கிய எண்ணம், சுமார் 100 ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ‘Forum for IT Employees, Tamil Nadu’ அதாவது தமிழ்நாடு ஐடி ஊழியர்கள் குழுமம் என்ற பெயரில் தொடங்கினார்கள். பரிமளா என்ற தொழிநுட்ப ஊழியர் தலைமையில் இது தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களில் சுமார் 4 லட்சம் பேர் பணியாற்றியும் குறைந்த அளவிலானவர்களே இந்த யூனியனில் இணைந்துள்ளனர். தங்களின் நிறுவனத்துக்கு பயந்தே பலரும் யூனியனில் சேர தயங்குகின்றனர். என்டிடிவி செய்திகளின் படி, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலங்களில் இருந்தே அதிக ஐடி சேவைகள் அதிகம் உள்ளது.

நிறுவனங்கள் ஊழியர்களை காண்ட்ராக்ட் அடிப்படையில் எடுப்பது அதிகரிக்கும் வேளையில் இது போன்ற யூனியன்களின் தேவையும் அதிகரித்துள்ளது. அவர்கள் முழு நேரமாக பணி செய்தும், அவர்களுக்கான தகுந்த ஊதியம் கொடுக்கப்படவில்லை. அதிக நேரம் பணிபுரிந்து உரிய சம்பளம் கிடைப்பதில்லை என்பது தொடர் புகாராக உள்ளது. 

இந்த வேளையில், பெங்களுருவில் உள்ள ஐடி ஊழியர்களும் ஒன்று சேர்ந்து தற்போது யூனியன் அமைக்க முடிவெடுத்துள்ளனர். அண்மையில் கோரமங்களாவில் உள்ள மைதானத்தில் 200 பேர் ஒன்று சேர்ந்து அமைப்பை தொடங்கினர். இது குறித்து நியூஸ் மினிட் தளத்திற்குபேட்டி கொடுத்த யூனியனில் பொது செயலாளர் வினீத்,

“தற்போதுள்ள சூழ்நிலையில், ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால், தனியாக நிறுவனத்தை எதிர்த்து போராடவேண்டி உள்ளது. யூனியன் என்று இருந்தால் அவர்கள் தனிப்பட்ட ஊழியரின் பிரச்சனைகளை நிறுவன மேனேஜ்மெண்டுடன் பேசி, சண்டையிட்டு தேவையான நியாயத்தை பெற்று தரமுடியும். எங்களின் கோரிக்கைகளை அரசுக்கும் தெரிவிக்க முடியும்,” என்றார்.

ஐடி ஊழியர்களின் பிரச்சனை ஊடகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால், நிறுவனங்களால் இதை எதிர்க்கமுடியாது என்பதால் மேலும் பல ஐடி ஊழியர்கள் இதில் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.