குரங்கணி மலை தீ விபத்தை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜெகதீசன்!

0

இரண்டு நாட்களாக தேனி தீ விபத்து அனைவரையும் உலுக்கி எடுத்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயணைப்பினர் என பலர் பங்கேற்க; ஜெகதீசன் என்னும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

தேனி குரங்கணி மலைக்கு டிரெக்கிங் சென்ற இளைஞர்கள் கூட்டம் காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டு விபத்துக்கு உள்ளாகினர். அங்கு விபத்தில் சிக்கியவர்களை மீட்க அந்த அங்கு இருந்து தப்பித்த நிவேதிதா 108 அரசு ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார்.

பட உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா
பட உதவி: டைம்ஸ் ஆப் இந்தியா

அப்பொழுது தேனி காவல் துறை வளாகத்தில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விரைவு நடவடிக்கை எடுக்கவும், அரசின் கவனத்தையும் இவ்விபத்தின் மேல் திருப்பவும் முயற்சி எடுத்தவர்.

“எனது நான்கு வருட ஆம்புலன்ஸ் சேவையில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை. அதை பார்த்த பின் மாவட்ட ஆட்சியரிடம் பேசி நிலைமையை விளக்கினேன்,”

என்கிறார் ஜெகதீசன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில். மலையடிவாரத்தில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் மேல் நோக்கி நடந்து சென்று, தீ விபத்தில் சிக்கியவர்களை கண்டெடுத்தார். 

மேலும் ஜெகதீசன் அந்த நிலைமையின் ஆழத்தை அறிந்து தன் கைபேசியில் வீடியோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவி இந்த விபத்தின் பேராபத்தை அதிகாரிகளுக்கு புரிய வைத்து விரவு நடவடிக்கை எடுக்க உதவியுள்ளது.

“நான் அங்கு சென்றபோது பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமான குரல்களில் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்ல என்னை கேட்டுக் கொண்டனர். சிலர் தண்ணீர் கேட்டு கதறினார்... "

மேலும் சிலர் இவரிடத்தில் தங்கள் குடும்பத்தினர்களின் எண்ணை கொடுத்து தங்கள் நிலைமையை அவர்களுக்கு விளக்கச் சொல்லியுள்ளனர். இந்த மீட்புப் பணியில் ஜெகதீஷ் நேரம் காலம் பாக்காமல் அயராது உழைத்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமணியில் சேர்த்தார். கண் முழித்து பல மணி நேரம் வேலை செய்தது இவருக்கு சற்று சவாலாகவே இருந்துள்ளது.

இந்த காட்டுத் தீயில் தப்பித்த 24 வயதான ஐடி ஊழியர் விஜயலட்சுமி, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து தீ 100 அடிக்கு தள்ளி இருந்த போதே அதை கவனித்தோம், அதுவரை காட்டில் தீ ஏற்பட்டதை நாங்கள் அறியவில்லை என்றார் மீடியாக்களிடம்.

காலை 11 மணி முதலே அம்மலை பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது 4 - 5 கி.மீ. தொலைவில் டிரெக்கிங் செய்து கொண்டிருந்தவர்கள் எச்சரிக்கை பெறவில்லை. மேலும் போதிய பாதுகாப்பு இல்லாமல் இந்த இளைஞர்கள் டிரெக்கிங் செய்ததே இவர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்தது. 

Related Stories

Stories by YS TEAM TAMIL