பெண்கள் பாதுகாப்பு பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப புதுமைகள்

0

பெண்களின் பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடியும் இது குறித்து விரிவாக விவாதித்துள்ளார். இந்த பிரச்சனைக்குத் தொழில்நுட்பத்தால் ஒரு சரியான தீர்வை அளிக்கமுடியும். மேம்படுத்தப்பட்ட அதே சமயம் நிலையான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பு இல்லை. எனினும் பல புதுமைகள் இந்தப் பகுதியில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. தொழில்நுட்பத்தின் வரையறையைப் பொருத்தும் அந்தத் தருணத்தில் இருக்கும் விழிப்புணர்வைப் பொருத்தும் இந்தப் புதுமைகள் பயணத்தின்போது, வீட்டிலிருக்கும்போது, இரவு நேரத்தில் போன்ற சில முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. சில புதுமைகளுக்கு நிதியுதவி கிடைக்கிறது சிலவற்றிற்கு கிடைப்பதில்லை. ஆனால் இவை அனைத்தும் பெண்களின் பாதுகாப்புப் பிரிவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டில் பாதுகாப்பு என்பது ஆடம்பரத்தைக் காட்டிலும் மனித உரிமை சார்ந்ததாகும்.

VithU : V Gumrah Initiative

VithU ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது அவசர கால தொடர்பு மற்றும் அறிவிப்பிற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும். இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் 2 மில்லியனுக்கு அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் பிரபலங்கள் ஆகியோரைக் கொண்டு இந்தச் செயலி குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. இது ஒரு தனித்துவமான செயலி. ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இடம் குறித்த தகவல்களையும் கடைசியாக பார்த்த தகவல்களையும் வழங்கும். அத்துடன் இடம் குறித்த தகவல்களை அடுத்தவருக்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பகிர்ந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்கான பரிசாக XPrize

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இது XPrize Foundation-ஆக விரிவடைந்து தொழில்நுட்பப் புதுமையுடன்கூடிய கண்ணோட்டத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பார்க்கிறது. ஒரு ஹெல்ப்லைன் நிறுவனத்திற்கு அபாய தகவலை உடனடியாக அனுப்பக்கூடிய ஒரு செயலியையோ அல்லது ஸ்மார்ட்ஃபோன் அம்சத்தையோ உருவாக்கக்கூடிய குழுவிற்கு தொழில்நுட்பம் சார்ந்த சவாலை இவர்கள் விடுத்துள்ளனர். இது ஒரு லைஃப்லைன் தீர்வாகவும் புதிய பாதுகாப்பு தரநிலையாகவும் வழங்கப்படும். இந்தப் புதுமையின் விலை ஒரு வருடத்திற்கு 40 டாலர்களுக்குள் இருக்கவேண்டும். அத்துடன் அவரச சூழலின்போது இடம் குறித்த துல்லியமான எச்சரிக்கையை அளிக்கவேண்டும். மெசேஜ் அமைப்புமுறையின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பதிலாக சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதே இதன் நோக்கமாகும்.

சுரக்ஷா செயலி

இந்தச் செயலி கர்நாடக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளியைப் பிடிக்க காவலர்களின் கட்டுப்பாடுடன்கூடிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை காணப்படும் பகுதியில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

”இந்தச் செயலியை ஸ்மார்ட்ஃபோன்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடனும் ரோந்து வாகனங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளதால் பிரச்சனையில் இருக்கும் பெண்கள் காவல் துறையின் உதவியைப் பெற இந்தச் செயலி உதவுகிறது,”

என்று செயலியின் பலன்கள் குறித்து ஒரு காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார். பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அதிகாரமளிப்பதற்காகவும் நகரில் 200-க்கும் அதிகமான ரோந்து கார்களை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. பிரச்சனையில் இருப்பவர்கள் இந்தச் செயலி வாயிலாக தாக்குபவரின் முன்னால் ஃபோனை பிடித்துக்கொண்டால் கேமிரா 10 விநாடிகள் வீடியோ பதிவு செய்யும். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த வீடியோவுடன் எச்சரிக்கையையும் அனுப்பும்.

சேஃப்லெட்

ஸ்டைலாகவும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் சேஃப்டி ப்ரேஸ்லெட். இது அமெரிக்காவில் பிரபலானதாகும். ஒரு பாதுகாப்பற்ற பகுதிக்கோ அல்லது இரவு நேரத்தில் புதிய பகுதிகளுக்கோ செல்ல நேரிட்டால் பெண்கள் இதை அணிந்துகொள்லலாம். இந்தத் தொழில்நுட்பம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட உதவும். இதை தினசரி அணியவேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால் தேவையேற்படும்போது அணிந்துகொள்ளலாம். இது ஃபேஷன் அணிகலன் அல்ல. ஒரு தற்காப்பு சாதனமாகும்.

Leaf (SAFER)

இது ஒரு புதுமையான இந்திய கண்டுபிடிப்பாகும். பல இந்திய முதலீட்டாளர்கள் நிதி வழங்கியுள்ளனர். நவீன இந்தியப் பெண்களின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டைல் மற்றும் பாதுகாப்பு கலந்த பல வகையான ஜுவல்லரி அணிகலன்கள் உள்ளன. பட்டனை அழுத்தினால் நேரடியாக அறிவிப்பு வழங்கப்பட்டுவிடும். 40 கிராமிற்கும் குறைவான எடை கொண்டது. ஒரு முறை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி 7 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை சற்றே அதிகம். எனினும் பாதிக்கப்பட்டவரின் ஜுவல்லரியில் அறிவிப்பு அம்சம் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தாக்குபவர்களுக்கு தெரியாது என்பதால் தாக்குதல்கள் தவிர்க்கப்படும்.

ஆங்கில கட்டுரையாளர் : சஞ்சித் கெரா