கூகுள் கௌரவப்படுத்திய இந்திய பெண் ருக்மாபாய் யார்?

0

ஒவ்வொரு சிறந்தநாளில் சாதனையாளர்களுக்காக கூகுள் தன் பக்கத்தில் ஒரு டூடுலை சமர்ப்பிக்கும். அந்த வகையில் நேற்று இந்திய பெண்மணி ருக்மாபாய் ரவுத்தின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு டூடுலை சமர்ப்பித்துள்ளது.

ஆனால் யார் இந்த ருக்மாபாய் ரவுத்? இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். ஆண் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அதில் இருந்து மீண்டு வர முயற்சித்த புரட்சிப்பெண் இவர். இவரின் வாழ்க்கை மற்றும் வேலை பற்றிய ஆறு தகவல்களை பார்ப்போம்:

1. குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர் இவர்

ஜனார்தன் பாண்டுரங் மற்றும் ஜெயந்திபாய் என்பவர்களுக்கு மும்பையில் பிறந்தார் இவர். இவருக்கு 11 வயது இருக்கும் பொழுதே, அவரை கட்டாயப்படுத்தி 19 வயதான தாதாஜி பிகாஜி என்பவருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தனர். விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தாலும் தனது படிப்பை மட்டும் அவர் கைவிடவில்லை.

2. அவர் கணவனுடன் வாழ மறுத்துவிட்டார்

ருக்மாபாய் தன் தாயை இழந்தப்போது அவரது தாயின் மொத்த சொத்தும் ருக்மாபாய்க்கு வந்து சேர்ந்தது. அவருக்கு கிடைத்த சொத்தை பார்த்து அவரது கணவர் ருக்மா உடன் இணைய முயன்றார். இருப்பினும் தனக்கு அறியாத வயதில் திருமணம் நடந்து விட்டது அதனால் இந்த திருமணம் செல்லாது என கூறி தன் தந்தையுடனே வாழ்ந்தார் இவர். அங்கேயே தன் படிப்பையும் தொடர்ந்தார்.

3. வரலாறு பேசும் சட்டத்தை போராடி வென்றார்

தன் கணவரிடம் இருந்து விலகி வாழ்ந்த ருக்மாபாய் மீது மார்ச் 1884-ல் அவர் கணவர் தாதாஜி வழக்கு பதிவு செய்தார். திருமண உரிமை மீறல் என்று அவர் மீது வழக்கு பதிவானது. இருப்பினும் அதற்கு இணங்காமல் கணவரிடம் இருந்து விலகியே இருந்தார். அதன் பின் நீதிபதி ராபர்ட் ஹில், ருக்மாபாய் அறியாத வயதில் கட்டாய திருமணத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார், அதனால் இத்திருமணம் செல்லாது என அறிவித்தார். இது இந்து மரபிற்கு எதிரானது என அந்த சமூதாயம் அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்தது.

4. புனைப்பெயர் கொண்டு பத்திரிகையாளர் ஆனார்

மீண்டும் 1886-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தனது கருத்தை பதிவு செய்யவதற்காக ’ஹிந்து லேடி’ என்னும் புனைப்பெயர் கொண்டு பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்களுக்கு குரல் கொடுத்து எழுதினார். அந்த எழுத்துக்கள் பல சர்ச்சைகளை கிளப்பியது, பலரும் அதை பற்றிப் பேசினர். அதன் பின் 1887-ல் நீதிமன்றம் ருக்மாபாய்க்கு இரு தண்டனைகளை கொடுத்தது. ஒன்று கணவருடன் இணைந்து வாழ வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும். ருக்மா கணவருடன் வாழாமல் சிறை சென்றார்.

5. பிரிட்டனின் பழைய சட்டத்தை மாற்றினார்

இந்த தீர்ப்பு எங்கும் பரவ, பிரிட்டன் ஊடகத்தின் பார்வையையும் இதன் பக்கம் திருப்பியது. இதன் மூலம் 1891 குழந்தை திருமணத்தை தடை செய்யும் வகையில் ஒப்புதல் பெரும் சட்டத்தை பிரிட்டிஷ் கொண்டு வந்தது.

6. மருத்துவர் ஆகும் கனவை நிறைவேற்றினார்

பிரபலமான மருத்துவர் எடித் பேச்சே உதவியுடன் ருக்மாபாய் லண்டன் பெண்கள் மருத்துவ கல்லூரியில் தன் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். ஈவா மெக்லாரன், வால்டர் மெக்லாரன் மற்றும் டஃப்பரின் நிதியின் உதவியோடு இந்திய பெண்களுக்கு மருத்துவ உதவி செய்தார். 1989-1894 தன் படிப்பை முடித்துவிட்டு 1894 சூரத் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக 35 வருடமாக பணியாற்றினார். 1930-ல் ஒய்வு பெற்று 1955-ல் 91வயதில் இறந்தார் இவர்.

எதற்கும் அஞ்சாமல் தன் உரிமைக்காக குரல் கொடுத்த புரட்சி பெண் இவர் 

Related Stories

Stories by YS TEAM TAMIL