1.3 லட்சம் இந்தியர்கள் செவ்வாய் கிரகம் செல்ல நாசா இடமிருந்து போர்டிங் பாஸ் பெற்றுள்ளனர்...

0

இன்சைட் (Insight) என்கிற விண்கலம் நாசாவால் 2018-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி செலுத்தப்பட்டு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி தரையிறங்க உள்ளது.

நாசாவின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தின் துணை டொமைனான இன்சைட் வலைதளத்தில் உலகெங்கிலுமிருந்து 24,29,807 பேர் பதிவுசெய்துள்ளனர். இந்த 24 லட்சம் பேரில் 1,38,899 பேர் இந்தியர்கள். பதிவு செய்தவர்களுக்கு டிஜிட்டல் போர்டிங் பாஸ் வழங்கப்படும். தேவையான ஆய்வு மற்றும் அனுமதிக்குப் பிறகு இந்தப் பெயர்கள் ஒரு ’மைக்ரோ சிப்’பில் பொறிக்கப்பட்டு விண்கலத்தில் பதிக்கப்படும்.

அமெரிக்காவிலிருந்து 6,76,773 பேர் பதிவுசெய்து இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர். இரண்டாவது சீனாவிலிருந்து 2,62,752 பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக இந்தியா இடம்பெற்றுள்ளது.

இன்சைட் செவ்வாய் கிரக திட்டத்தைத் தாண்டி கோள்கள் மற்றும் சூரிய மண்டல அறிவியல் சார்ந்த அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும். அதாவது நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு உள் சூரிய மண்டலத்தின் பாறை கோள்கள் உருவான செயல்முறையை புரிந்துகொள்ள உதவும் என்று நாசா தெரிவிக்கிறது.

அதிநவீன புவியியர்பியல் கருவிகளைக் கொண்டு இன்சைட் செவ்வாய் கிரகத்தின் கீழ்ப்பகுதியை ஆய்வு செய்யும். புவியியல் கிரகங்கள் உருவானதன் செயல்முறைகள் சார்ந்த கைரேகைகள் மற்றும் கோள்களின் முக்கிய அறிகுறிகளான ‘பல்ஸ்’ (Seismology), வெப்பநிலை (heat flow probe), ரிஃப்ளெக்ஸஸ் (precision tracking) ஆகியவற்றை அளவிடும்.

புவியியல் கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன? இது அறிவியலின் முக்கியமான அடிப்படைக் கேள்விகளில் ஒன்று. இன்சைட் இந்த கேள்விக்கான விடையளிக்க முயல்கிறது.

இது தொடர்பான வளர்ச்சியாக எலான் மசுக்கின் ஸ்பேஸ் எக்ஸ் 2024-ம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழவைப்பது குறித்தும் தனது சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் பூமியில் விமான நேரத்தை குறைத்து அதிபட்ச தூரத்தையும் ஒரு மணி நேரத்தில் கடந்து முடிக்கவும் திட்டமிடுகிறது.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL