அழகுப்பொருட்களில் அடங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள்- சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம்!

0

இன்று அழகு சாதனப்பொருட்களான சாம்பூ, முக க்ரீம்கள் மற்றும் சோப்புகள், கடைகளில் அதிகம் விற்பனையாகும் பொருட்களாகும். ஆனால் நம்மில் பலருக்கும் தெரியாது அதனுள் அடங்கியுள்ள மைக்ரோபீட்ஸ் (5 மில்லிமீட்டர் பிளாஸ்டிக் காப்சியூல்கள்) தோல் ஊட்டமளிக்கும் வைட்டமின்களுடன் சேர்க்கப்படுகிறது என்று. இந்த மணிகள் பயன்படுத்தும் போது, தளர்ந்து இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. ஆனால் இது நன்மை பயக்கும் என்று நாம் நம்பும் அதே சமயம், இவை நச்சுத்தன்மை கொண்டவை, அதை தூக்கி எரியும்போது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவதில்லை. இவை நிலத்தடி நீர், ஏரிகள், குளங்கள், கடல் மற்றும் நதிகளை பாதிக்கின்றது. 

“இவை பொது சாக்காடைகளின் வழியை அடைத்து, நகரின் கட்டமைப்பை சிதைக்கின்றது,” என்கிறார் ஃபிட் & க்ளோ இணை நிறுவனர் மனீஷ் சவுத்ரி.” 

தயாரிப்பாளர் அழகு சாதனங்களிலும் இயற்கை பொருட்களை பயன்படுத்தத் துவங்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் செலுலோஸ் அடிப்படைக் கொண்ட மணிகளை இதில் சேர்க்கவேண்டும் என்கிறார் மனீஷ். 

அண்மையில் பெங்களுருவின் ஏரிகள் அடைத்துக்கொண்டு நுரையுடன் காணப்பட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இது நாடு முழுவதிலும் நடந்துவருகிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான சரியான விழிப்புணர்வு பிரச்சாரம் இல்லை. பிளாஸ்டிக் பொருளை அழகு பொருட்களில் சேர்ப்பதன் விளைவைப் பற்றி மேற்கத்திய நாடுகளில் உள்ள விழிப்புணர்வை போல் இந்தியாவில் பெரிதளவில் இல்லை. 

சில தினங்களுக்கு முன் டெஸ்கோ பிஎல்சி, சுமார் 67.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய அழகு பொருட்களை 2017க்குள் ஒழிக்கப்போவதாக அறிவித்தது. அதேபோல் அமெரிக்காவும் அங்குள்ள தயாரிப்பாளார்களை இந்த பிளாஸ்டிக் மணிகளை அழகுப்பொருட்களில் கலப்பதை நிறுத்த கேட்டுவருகிறது. கடந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம், அழகு சாதனங்களில் உள்ள பாலிமர் பொருட்கள் இன்னும் 100 ஆண்டுகள் வரை அழியாமல் கேடு விளைவிக்கும், குறிப்பாக தண்ணிர்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்துள்ளது. 

இது ஏன் தற்போது முக்கியம்?

இந்தியாவில் சிஐஐ’இன் அறிக்கைப்படி, அழகுப்பொருட்கள் துறை உலகில் சுமார் 274 பில்லியன் டாலர் மதிப்பையும், இந்தியாவில் 4.6 பில்லியன் டாலர் மதிப்பையும் கொண்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்துறை (இ-வர்த்தகம் சேர்த்து) 60 பில்லியன் டாலர் அளவும் அதில் 9 சதவீதம் அழகுப்பொருட்கள் துறை பங்கு வகிக்கிறது. 

“பல வாடிக்கையாளர்கள் தற்போது இயற்கைப் பொருட்கள் ப்ராண்டுகளை நோக்கி செல்கின்றனர், அவற்றில்தான் இதுபோன்ற பிளாஸ்டிக் கலப்பு இல்லை. அழகுப் பொருட்கள் தயாரிக்கும் இளையதலைமுறை நிறுவனங்களும் விழிப்புணர்வுடன், சுற்றுச்சூழல் மீது அக்கறைக் கொண்டு தங்கள் தயாரிப்பை செய்கின்றனர்,” 

என்கிறார் அவா ஸ்கின் கேர் நிறுவனர் ப்ரீத்திகா. புற்றுநோய் உருவாக்கக்கூடிய இந்த நச்சுத்தன்மை உடைய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க இ-வணிகம் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் இன்னமும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்கிறார் அவர். 

“இந்த பொருளில் மைக்ரோபீட்ஸ் என்ற பிளாஸ்டிக் பொருள் கலந்துள்ளது என்று அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி, அது நீர் மற்றும் நகரை பாதிக்கும் என்றும் குறிப்பிடலாம்,” என்கிறார் ப்ரீத்திகா. 

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர் பொருட்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. சில பொருட்கள் பெரிய வர்த்தகர்களாலும், சில இ-வணிகம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் இன்னமும் இந்த மைட்ரோபீட் பிரச்சனை குறித்து சரிவர அறியவில்லை. நம் நீர் நிலைகளை பாதிக்கக்கூடிய இவைகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்கத்தொடங்க வேண்டிய நேரம் இது. யூகே, அமெரிக்கா போன்ற நாடுகள் இதை தடை செய்து வருகின்றனர். சீன தயாரிப்பு பொருட்களை தவிர்த்து வருகின்றனர். இதுவே இந்திய வாடிக்கையாளர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம். 

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா