இந்திய மலையேற்றமும், தில்ஷத் மாஸ்டர் குமாரின் கனவுகளும்

இந்திய மலையேற்றமும் தில்ஷாத் மாஸ்டர் குமாரின் கனவுகளும்

0

49 வயதாகும் தில்ஷத் மாஸ்டர் குமார், புற்றுநோயுடன் போராடும் போது, இதுவரை நடந்த அனைத்தும் போதும் என்றே இருந்தார். தன் இரத்தத்தையும், வியர்வையையும் மற்றவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதற்கு வீணாக்காமல், தன் ஆற்றலையும், பலத்தையும் வைத்து தானே ஏதாவது ஒன்றை உறுவாக்கி விட்டுச் செல்ல வேண்டும் தன் நான்கு வயது குழந்தைக்காக என்று எண்ணினார்.

தில்ஷத், பல தொடக்கங்களுக்கு காரணமாக இருந்தவர். 22 வருடங்கள், தொலைக்காட்சி துறையில் பணிபுந்தார். ஸ்டார் மூவிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஜீ சினிமாவைத் தொடக்கி வைத்தார்.

பின்னர், ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து என்.ஜி.சி. மற்றும் ஹிஸ்டரி சேனல்களைத் துவக்கி வைத்தார். ஒரு புது அணியை உருவாக்கி, அவர்களை வைத்து செயல்படுவதில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார். "அதற்கு பிறகு, தொலைக்காட்சியில் வேலைப் பார்த்தது போதும் என்று எண்ணிய போது, 18 மாதங்கள் ரோனி ஸ்க்ரூவாலாவுடன் வேலைப் பார்த்தேன்", என்று கூறினார். சுயமாக சிந்தித்து வாழும் தில்ஷத், அந்த சமயம் யூடிவிக்காக இரண்டு சேனல்களை நிறுவி துவக்கிவைத்தார்.

"நீண்ட காலத்திற்கு பிறகு புதியது ஒன்றை கற்றுக்கொண்டேன். சொந்த நிறுவனம் வைத்திருக்கும் ஒருவருக்கு வேலைப் பார்ப்பதும், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வேலைப் பார்ப்பதும் முற்றிலும் வேறுபட்டது என்று. அந்த வழியில், ரோனி எனக்கு தொழில்முனைவராக இருப்பதை பற்றி நிறைய நிறைய கற்றுக்கொடுத்தார்", என்று கூறுகிறார். நான் கற்றவை :

  • உங்களுக்கும் பரிமாற்றங்களுக்கும் இடையே அகங்காரம் என்பது இருக்கக்கூடாது. பேச்சுவார்த்தைச் நடத்தும் போது, அகங்காரத்தை வெளியே விட்டுவிட வேண்டும்.
  • எந்த மேம்பாட்டிலும் உணர்வுபூர்வமாகக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும். வளர்த்துவிட்டு, விட்டுவிடு!
  • நிதியைச் சமாளிப்பவர்களை விட நீ அதிமாக எண்களைக் கற்றுக் கொள்.

இந்த தத்துவங்கள்தான் தில்ஷத்தை சொந்தமாக செயல்பட வைத்தது. ஐக்ரிதி நியூ மீடியா என்ற சமூக ஊடகத்தை 2008- ஆம் ஆண்டில் தொடங்கினார்.

"தொலைக்காட்சிக்கும் சமூக ஊடகத்திற்கும் இடையே ஒரு இடைவெளியைப் பார்த்தேன். அந்த நேரத்தில், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சமூக ஊடகம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆதலால், நான் சமூக ஊடகப் பிரச்சாரங்களை தயாரித்து என்.ஜி.சி, சேனல் வி. மற்றும் ஸ்டார் நிறுவனங்களுக்குப் பணிபுரிந்தேன். மிகவும் விரும்பி செய்தேன். அனைவரும் தீவர பிரச்சாரத்தை எதிர்ப்பார்த்தனர், சந்தை இயக்கவியலைப் பற்றி அறியாமல். அதே நேரத்தில், சாகச பயண நடவடிக்கையாளர்களுக்கான ஒரு சந்தையை என் நண்பர்கள் செளம் பால் மற்றும் சச்சின் பன்சால் என்பவர்களுடன் தொடங்கினேன். இந்த துறை அமைப்பற்றது என்பதை உணர்ந்தோம். ஏழு வருடத்திற்கு முன்பு, பத்தாயிரதிற்கும் மேற்பட்ட பயண நிர்வாகிகள் தங்கள் சொந்த வலைத்தளங்களில், பயண அட்டவணைகள் மற்றும் பயணங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அவர்களின் தகவல்களை எங்கள் சொந்த வலைத்தில் வெளியிட செய்வது இயலாத ஒன்று. நாங்கள் கூட நடை வீரர்களை இந்த நிர்வாகிகளுடன் இணைத்து தகவல் சேகரிக்க முயன்றோம். ஆனால், முடியவில்லை என்று தில்ஷத் சொன்னார்.

"இது போன்ற ஒன்றை வடிவமைப்பது சரியான முடிவு இல்லை என்று தெரிந்தது. முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதில் எங்களின் திட்டங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே, இந்த முயற்சியை, ஒரு பொது பயண பத்திரிகையாக ஃபரின்டோ.காம் farinto.com என்ற பெயரில் மாற்ற முடிவெடுத்தோம்".

இணை உலகில், இவரது கணவர் அக்ஷய், தனது மெர்குரி இமாலய ஆய்வு பயணத்திற்கு (MHE) நடவடிக்கைகளையும், வேலையையும் சமாளிக்க ஒரு நபரை தேடிக் கொண்டிருந்தார். தில்ஷதிற்கு இந்த துறையில் பலமான பின்னணி இருந்தது. ஒரு பக்கம் தன் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் தனக்கென்ற ஒன்றை உருவாக்கி அவரது குழந்தைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்றும், குடும்பத்துடன் போதிய நேரம் கழிக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

அப்போது, MHE என்பதற்கு அதிக தெளிவான சாதகம் இருப்பதை உணர்ந்தார். "பயணத்தொழில் வர்த்தகத்தைப் பற்றி படிக்கும் போது, 2013ல் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மில்லியன் உள்நாட்டு பயணிகள் இருப்பதாகவும் இந்த எண் தொடர்ந்து பெருகுவதாகவும் அறிந்தேன். அந்த வணிகத்தில், நான் 5% மட்டுமே தேர்ந்தெடுத்தாலும், பயன்கள் அருமையாக இருக்கும்", என நம்பியதாக தில்ஷத் கூறுகிறார். இந்த நோக்கம் தான் அவரை தனித்துவம் வாய்ந்த பணிகளைச் செய்ய ஊக்கம் அளித்தாக கூறுகிறார்.

"என் மனதிற்கு நெருக்கமான, பணிகள் நிறைவு பெற்று செயல்படுத்த காத்திருக்கும் நிகழ்வு; நாங்கள் சியாச்சின் சிகரத்தில் இந்தியாவின் நடவு கொடியை நட 35வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த ஏற்பாடு செய்தது. இந்த பயணம், கர்னல் நரேந்திர 'புல்' குமார் உடன் முடிவு செய்யப்பட்டது. இவர் தான், இந்திய புராணத்தில் இந்திய தேசியக்கொடியை சியாச்சின் சிகரத்தில் முதலில் நட்டவர். இந்த மலையேற்றம் இயன்றதற்கு காரணம் பாதுகாப்பு அமைச்சகம் கொடுத்த அனுமதி மற்றும் கர்னல் நரேந்திராவுடன் ஏற்பட்ட கூட்டு முயர்சி", என்கிறார் தில்ஷத். இதற்காக தில்ஷத் கடினமாக உழைத்திருக்கிறார். மேலும், இது போன்ற மலையேற்றம் வேறு யாராலும் வழங்கப்பட முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

எங்கள் பயண அனுபவங்களில், MHE படங்கள் மற்றும் வீடியோக்கள் கொண்ட தொகுப்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப் படாமல் இருக்கிறது". மேலும், தன் சுயநலனுக்காக உழைக்கிறார். இதுவரையில், இந்திய இமாலயப்பிரதேசத்தில் ஆவணப்படங்கள் எடுக்க ஏற்பாடு செய்கிறார். கடந்த ஆண்டைப் போல், MHE மலைவாசி மற்றும் ஆய்வாளரான ரீன்ஹோல்ட் மெஸ்னர் மற்றும் அவரது சுவிஸ் குழுவை வைத்து இமையத்தில் படப்பிடிப்பு செய்தார். தற்போது, இதை தில்ஷத் ஒரு வணிக நோக்கத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளார். 8 பெண் கண்டுபிடிப்பாளர்களை வைத்து, 60 நாள் படப்பிடிப்பை ஏற்பாடு செய்ய உள்ளார். அந்நேரம், அவர்கள் கங்கை நதியின் முழு நீலத்திற்கும் செல்வார்கள்.

தில்ஷத் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (EBC) மற்றும் பல்வேறு மலையேற்ற பாதைகளில் பயணித்துள்ளார். அவர் சொல்கிறார், "EBC தான் மலையேற்றத்தின் உச்சக்கட்டம். அதுவும் அது இந்தியாவில் இருக்கிறது". EBC சரியான பாதை, திட்டம், குறியீடு, மற்றும் குப்பைத் தொட்டியுடன் இருக்கிறது. "எடுத்துக்காட்டிற்கு, கார்வால் - உத்தரகண்ட் பகுதியில் குவாரி மலையேற்றம் 12,500 அடி உயரம் உள்ளது. இது பெரிய சவால். நிலப்பரப்பு மாறி வருவதால், மலை முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது. 5 நிமிட நேரமெடுக்கும் ஒரு பாதை எங்களுக்கு இது போன்ற சம்பவத்தால் 2.5 மணி நேரம் எடுத்தது", என்கிறார் தில்ஷத். இது போன்ற நிச்சயமற்ற கூறுகள் இவரை தூண்டுகிறது. மலையேற்ற பாதைகளை பிரபலப்படுத்த முடியாததில் வருத்தம் அடைந்தாலும், இந்திய மலையேற்றத்தின் முழு முகத்தையும் ஒவ்வொன்றாக மாற்ற முயற்சி செய்து வருகிறார் தில்ஷத்.