18 வயது விஞ்ஞானி கரண் ஜெரத்தின் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை!

2

எண்ணெய் கசிவுகள் கடலுக்கு அடியில் தங்கிவிடுவதை கட்டுப்படுத்தும் புதிய சாதனைத்தை கண்டுபிடித்ததற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பாராட்டு விழாவில் கரண் ஜெரத் இன்டெல்லின் 'இளம் விஞ்ஞானி' விருதை பெற்றுள்ளார். அச்சுறுத்தும் இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு கடல்வளம் மற்றும் அதன் சூழ்நிலையை முற்றிலுமாக அழிக்கிறது. இதை கட்டுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதும், அவை விடாப்பிடியாக மீண்டும் தோன்றி அபாய ஒலி எழுப்பிக் கொண்டு தான் உள்ளன. 2010ல் மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது, கரண், டெக்ஸாசின் பிரெண்ட்ஸ்வுட்டில் வசித்தார். என்னுடைய புறக்கடையில் நிகழ்ந்த அந்த சம்பவம் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்திய பாதிப்பு என்னை தட்டி எழுப்பியது. இதற்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

ஜெரத் ஒரு நாளைக்கு ஒன்பது முதல் பத்து மணி நேரங்கள் ஆராய்ச்சி செய்வது, வடிவைமைப்பது அவற்றை பரிசோதிப்பது என்று இருந்து வந்தார். அவருடைய முயற்சிக்கு தக்க சன்மானம் கிடைத்தது, இன்ட்டெல் அவருடைய கண்டுபிடிப்புக்கு 50 ஆயிரம் டாலர் வழங்கியது, இது அவருடைய நோக்கத்தை அசலாக்கியது. ஆனால் அந்த விருது வழங்கும் விழா முடிந்ததும் ஊடகங்கள் இந்த இளைஞரின் சாதனையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜெரத்தின் கண்டுபிடிப்பில் உள்ள சமுதாய ஆர்வம் ஒருங்கிணைக்கப்படவில்லை. கரண் கண்டுபிடிப்பின் ஒரு மாதிரி அவருடைய படுக்கையறையிலேயே உறங்குகிறது. ஏனெனில் அவருடைய சாதனத்தை முன்எடுத்துச் செல்ல முதலீட்டாளர்களோ அல்லது முயற்சி செய்து பார்க்கவோ யாரும் தயாராக இல்லை.

கரண் தனக்குக் கிடைத்த சன்மானத்தை தன்னுடைய படிப்புக்காக செலவிட்டார். அவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் படிக்கிறார். அவர் தன்னுடைய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினார். அவருக்கு கிடைத்த தொடர் வளங்கள் மற்றும் பல்கலைக்கழகம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் தன்னுடைய மாதிரியை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டார். எப்படி ஒரு காஸ்மோபொலிடன் எண்ணம் அவருக்கு வடிவம் கொடுத்தது, கண்டுபிடிப்புக்கான செயல்முறை மற்றும் ஏன் இது எண்ணங்களாக மட்டுமே உள்ளன, அவை ஏன் முடிவில் ஆயுட்காலம் பெற முடிவதில்லை என்பன பற்றி கரண் ஜெரத் யுவர்ஸ்டோரியுடன் பேசினார்.

நீங்கள் சிறு வயதில் இந்தியா, மலேசியா, அமெரிக்கா என்று வளர்ந்துள்ளீர்கள். உங்களுக்கு கிடைத்த சர்வதேச அனுபவங்கள் எப்படி உங்களை முடிவெடுக்கும் வகையில் வடிவம் தந்தது?

நான் மும்பையில் பிறந்தேன், ஆனால் ஒரு வயது இருக்கும் போது மலேசியாவிற்கு இடம் பெயர்ந்துவிட்டோம். நான் மலேசியாவில் வசித்த போது இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் கொலாலம்பூரில் பயின்றேன், நான் பல்வேறு விதமான கலாச்சாரங்கள், எதிர்எதிர் சிந்தனைகளின் ஒருங்கிணைப்புகளுக்கு மத்தியில் சர்வதேச குடிமகனாக வளர்ந்தேன். அதன் பின்னர் 2008ல் டெக்ஸாசின் பிரென்ட்ஸ்வுட்டிற்கு வந்துவிட்டோம். இங்கு தான் என்னுடைய விஞ்ஞானிக்கான வடிவம் கிடைத்தது என்று நான் நினைக்கிறேன்.

இந்த மாறுதலை உங்களுடைய குடும்பத்தினர் எப்படி ஏற்றுக்கொண்டனர்?

என்னுடைய தந்தை நார்வேஜியன் ஷிப்பிங் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராக உள்ளார். என்னுடைய தாயார் ஒரு ஓவியக்கலைஞர். என் தந்தையின் விஞ்ஞானப் பார்வை மற்றும் தாயாரின் கலைத் துறை என இருவரும் அவர்கள் சார்ந்த உலகின் சிறந்த விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

உங்களுடைய புதிய வாழ்க்கையை எப்படி நீங்கள் அமெரிக்காவில் அனுசரித்துக் கொண்டீர்கள்?

அமெரிக்காவிற்கு வந்தது எனக்கு ஒரு பயமுறுத்தும் அனுபவத்தை தந்தது. என் தந்தையுடன் பணிபுரியும் ஒருவரின் குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் எங்களுக்குத் தெரியாது. அதனால் அனுசரித்து செல்வதற்கு சிறிது காலமானது. அதுவும் ஹை ஸ்கூலில் சேர்ந்தவுடன் சரியானது என்று சொல்லலாம். எனக்கு அறிவியலில் நல்ல ஆர்வம் இருந்தது. புதிய முயற்சிகளை செய்து பார்ப்பது எனக்கு ஆச்சரியங்களை அளித்தது.

இந்த சாதனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் எப்போது, ஏன் முடிவு செய்தீர்கள்?

என் தாயாரின் குடும்பத்தினர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர், அதனால் நாங்கள் ஒரு முறை விடுமுறைக்கு அங்கு சென்றோம் அப்போது மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. என்னுடைய புறக்கடையில் இதுநிகழ்ந்ததால் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உண்மையில் நினைத்தேன். சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இன்றைய மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நான் நினைத்தேன். எண்ணெய் கசிவு, பெருங்கடல் சுற்றுச்சூழலை முற்றிலுமாக அழிக்கிறது. நான் நூலகம் சென்று இது தொடர்பாக படிக்கத் தொடங்கினேன். பல்வேறு வடிவங்களை வரைந்து அவற்றிற்கான ப்ளூபிரிண்ட்டுகளையும் எடுத்தேன்.

ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலராக உங்களை மாற்றியது எது?

எனக்கு சுற்றுச்சூழல் மீது அக்கறை உள்ளது, ஆனால் என்னை சுற்றுக்சூழல் பாதுகாவலராக மாற்றியது மெக்சிகோ வளைகுடாவில் நிகழ்ந்த சம்பவம் என்றே நான் கருதுகிறேன். அந்த சம்பவம் என்னுள் ஒரு பொறியை ஏற்படுத்தியது, இதை சரி செய்ய நிச்சயம் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

நீங்கள் அமெரிக்கா திரும்பியதும், அந்த முயற்சியை எப்படி முன் எடுத்துச் சென்றீர்கள்?

நான் அமெரிக்கா திரும்பியதும் எங்களுக்கு ஒரு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது, அதற்கான திட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. நான் என்னுடைய வேதியியல் ஆசிரியரிடம் என்னுடைய திட்டம் பற்றி கூறினேன், அவர் இது தொடர்பான தகவல்களை ஒரு அறிவுரையாளரிடம் பெற எனக்கு உதவினார்.

நான் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை இந்த திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளை கண்டுபிடிப்பதே, ஏனெனில் இணையதளத்தில் போதுமான தகவல்கள் இல்லை. இந்த ஆலோசனை இதற்கு முன்னதாக செயல்படுத்தப்படவில்லை. முயற்சி மற்றும் தவறு என்ற முறையில், என்னுடைய அறிவுரையாளரின் மேற்பார்வையின் கீழ் செயல்முறை செய்து பார்த்தேன்.

உங்களுடைய எண்ணத்தை வளர்த்தெடுக்க உங்களுக்கு என்னென்ன வளங்கள் தேவைப்பட்டன?

என்னுடைய அறிவுரையாளர் நீரியலை ஊக்குவிக்கும் பணியை செய்தார். அவருடைய தொடர்புகள் மூலம் நான் இது தொடர்பான இலக்கியத் தகவல்களைப் பெற முடிந்தது. உண்மையில் நான் அந்த சாதனத்தை உருவாக்கவில்லை. அவர் ஸ்டோனர் பைப்லைன் ஸ்டிமுலேட்டுக்கான மென்பொருள் மாதிரியை உருவாக்கினார். தனது கணிணியில் இதை வடிவமைத்தார், அவர்தன் அலுவலகத்தில் அனுமதி பெற்று என்னை அந்த திட்டத்தை பார்க்க அழைத்து சென்றார். விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு எட்டு முதல் ஒன்பது மணி நேரங்கள் நான் இந்த திட்டத்தில் பணியாற்றினேன்.

அந்த சாதனம் 75 அடிஉயரம் (அது மிகப்பெரிய சாதனம்), அதனால் அதை ஒத்த அலைவரிசையில் ஒரு சாதனத்தை என்னால் இப்போது உற்பத்தி செய்ய முடியாது. முக்கியமாக செயல்முறை மற்றும் மென்பொருளில் சோதித்துப் பார்ப்பதே முதல் அடி. ஆனால் நான் இந்த எந்திரத்தை தயாரிக்க தற்போது பேக்கர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அணுக முயற்சி செய்து வருகிறேன்.

உங்களுடைய சாதனம் கோட்பாடு நிலையிலேயே உள்ளது, அது உண்மையில் பரிசோதித்து பார்க்கப்படவில்லை, அப்படி இருக்கையில் இது எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?

எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு கண்டுபிடிப்பை கோட்பாடுநிலையில் தான் முதலில் பரிசோதனை செய்வார்கள். நான் பயன்படுத்தியுள்ள ஸ்டோனர் பைப்லைன் சிமுலேட்ட்ருக்கான மென்பொருள் அனைத்து தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தும் ஒரு சிறந்த முறை. நான் இதை உறுதியாகச் சொல்வேன் இது கட்டாயம் வேலைசெய்யும். என்னுடைய அடுத்த அடியே இந்த திட்டத்தை செயல்படுத்தி கட்டமைப்பது தான். அந்த நம்பிக்கையை நோக்கி தான் நான் இப்போது சென்று கொண்டிருக்கிறேன்.

இந்த சாதனத்தை மென்பொருள் மூலம் அடுத்த அளவுக்கு எடுத்துச் செல்ல நான் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை பேராசிரியர்களுடன் விரைவில் கலந்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

உங்கள் எண்ணத்தை நடைமுறைப்படுத்த, வேலையில் ஏற்பட்ட திருப்பங்கள் மற்றும் நுணுக்கங்களை சரி செய்ய எவ்வளவு நாட்கள் ஆனது?

நான் இது தொடர்பாக பலரிடம் பேசினேன், குறும்படங்கள் பார்த்தேன், ஏராளமாக படித்தேன். பிரிட்டிஷ் பெட்ரோலியம் இது போன்ற ஒன்றை ஏற்கனேவே செய்துள்ளது. ஆனால் அது நிச்சயமாக ஒரு பெரிய முயற்சி, நான் அந்த வெர்ஷனில் சில மாற்றங்களை செய்தேன். இப்போதைய வடிவமைப்பை பெற நான் ஏறத்தாழு 30 வெவ்வேறு வடிவமைப்புகளை கடந்து வந்தேன் என நான் நினைக்கிறேன்.

உங்களது சாதனம் எவ்வளவு நேரத்தில் எண்ணெய் கசிவை சரி செய்யும் என்று நீங்கள் திட்டம் வகுத்துள்ளீர்கள்?

என்னுடைய சாதனம் எண்ணெய் படிந்துள்ள இடங்களில் சென்று அங்கிருந்து எண்ணெயை சேகரிக்கும் பணியை செய்யும், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த கசிவை நிரந்தரமாக சரிசெய்யும் வரை இதன் சேவை தொடரும். இந்த சாதனம் பெருங்கடலில் ஏற்படும் அசுத்தத்தை மாற்றும் வழியை காண்பிப்பதோடு, கடல்வளங்களையும் அழிவில் இருந்து பாதுகாக்கும்.

உங்கள் சாதனம் 75 அடி உயரம் என்றும் அது 100 டன் கணக்கில் கணமாக இருக்கும் என்றும் நீங்கள் சொல்லும் போது, அதை எப்படி கசிவு ஏற்படும் இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்?

போக்குவரத்து ஒரு பிரச்சனையே இல்லை, ஏனெனில் அதை சுமந்து சென்று அங்கே இறக்கிவைக்க தேவையான கப்பல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இது 300 டன் எடை உள்ளதால் இது நேரடியாக கடலுக்கு அடியில் சென்று விடும் நீரில் மிதக்காது, அதனால் சாத்தியக்கூறுகளை பற்றி கவலை இல்லை.

இந்த சாதனத்தை மேலும் மேம்படுத்துவதற்காக உங்களது சன்மானத் தொகையை செலவிடப் போகிறீர்களா?

நான் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்திற்கு சில நாட்களில் செல்ல திட்டமிட்டுள்ளேன். நான் சன்மானத்தை என்னுடைய கல்லூரி படிப்பிற்காக செலவிடப் போகிறேன், இதனால் என் பெற்றோருக்கு என் படிப்பு செலவை பற்றிய கவலை இருக்காது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் பெட்ரோலியம் என்ஜினியரிங் பள்ளியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது, எனவே நான் அங்கு இருப்பதால் நான் பல்வேறு சிறந்த பேராசிரியர்கள் மற்றும் சாதனங்களை கையாள முடியும், இதை நான் என்னுடைய திட்டத்தை மேலும் வளர்க்க பயன்படுத்திக் கொள்வேன்.

நீங்கள் இன்ட்டெல் பரிசை வென்றவுடன் உங்களை எதாவது முதலீட்டாளர்கள், கார்ப்பரேஷன்கள் அல்லது பேக்கர்கள் அணுகியுள்ளனரா?

இது வரை இல்லை. கல்லூரி படிப்பு மற்றும் என்னுடைய கண்டுபிடிப்பை எப்படி உலகுக்கு முன்எடுத்துச் செல்வது என்ற இரண்டையும் சமனப்டுத்தும் வழியை கண்டுபிடித்தவுடன் விரைவிலேயே நான் அவர்களை அணுக உள்ளேன்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது உங்களது கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் இது எப்படி ஒரு நிரந்தர தீர்வை அளிக்கும், விருது பெறும் விழாவிற்கு பிறகு அதற்கான ஆர்வம் குறைந்தது எப்படி?

நான் ஏமாற்றமடைந்துவிட்டேன். இந்த சாதனத்தால் என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும். நான் அதை செய்து காட்டுவேன். அதை பல்கலைக்கழகத்தில் மேம்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகிறேன் அதன் பிறகு முதலீட்டாளர்களை அணுகுவேன். நான் டிசம்பர் மாதம் இந்தியா வந்து என்னுடைய திட்டம் பற்றி விளக்க உள்ளேன். நிச்சயம் அதில் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த கேள்வியை கேட்பது முரண்பாடாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எதாவது தோல்விகளை அனுபவம் செய்துள்ளீர்களா?

நான் பலநேரத்தை பாதுகாப்பற்ற நிலையிலே கழித்திருக்கிறேன், அதே போல வாழ்க்கையில் எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என கூட தெரியவில்லை. ஆனால் அறிவியல் கண்காட்சி தான் எனக்கு என்ஜினியரிங் மீதான விருப்பத்தை உணர வைத்தது. இந்த இன்ட்டெல் விருது என்னை சரியான பாதையில் பயணிக்க உதவியது. இது என்னுடைய கண்டுபிடிப்புகளைத் தொடர்வதற்கான நம்பிக்கையை தந்துள்ளதோடு அதை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளித்துள்ளது. உங்களுடைய எண்ணம் சிறிதோ பெரிதோ, வயது ஒரு தடை இல்லை என்பதை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. உண்மையை நோக்கி நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம், இந்த உலகம் உங்களை உற்று நோக்கிக் கொண்டு இருக்கும்.

படைப்பாளர்கள் மற்றும் லட்சியத்தோடு உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?

இளம் தலைமுறையினர் ஏன் என்ற கேள்வியை எப்போதும் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது அந்தஸ்தை பொருத்தது அல்ல. இது உலகில் மாற்றங்களை நிகழ்த்தி அவற்றை மேலும் சிறப்பாக அமைப்பதோடு, பாதுகாப்பையும் அளிக்கும் தீர்வாக இருக்க வேண்டும். எப்போதும் உங்களது எண்ணங்களை விட்டுக் கொடுக்காதீர்கள். அதற்கு உந்துதல் அளித்து முன்எடுத்துச் செல்ல வேண்டும்.