மத்திய பட்ஜெட்: வாழ்க்கை வசதியை மேம்படுத்தும் திட்டமான ‘சங்கல்ப்’ ரூ. 4000 கோடி செலவில் துவங்கப்படும்!

0

நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று நாடாளுமன்றத்தில் 2017-18ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்துப் பேசுகையில் பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் தற்போதைய 60 மாவட்டங்கள் என்பதிலிருந்து நாடுமுழுவதிலும் உள்ள 600 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். 

நாடு முழுவதிலும் சர்வதேச தரத்திலான திறமைகளுக்கான இந்தியாவின் 100 மையங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த மையங்கள் முன்னேறிய பயிற்சியை வழங்கும் என்பதோடு வெளிநாட்டு மொழிகளிலும் பயிற்சிகளை வழங்கும். இந்தியாவிற்கு  வெளியே வேலை வாய்ப்புகளைத் தேடும் நமது இளைஞர்களுக்கு இவை உதவி செய்வதாக அமையும்.

2017-18 நிதியாண்டில் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதற்கென திறனை வளர்த்துக் கொள்வது, விழிப்புணர்வைப் பெறுவதற்கான ‘சங்கல்ப்’ திட்டம் ரூ. 4000 கோடி செலவில் துவங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். நாட்டிலுள்ள 3.5 கோடி இளைஞர்களுக்கு பொருத்தமான பயிற்சியை இந்த ‘சங்கல்ப்’ திட்டம் வழங்கும்.