திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மத்திய அமைச்சகம் வழங்கும் விருதுகள்- விண்ணப்பங்கள் வரவேற்பு!

0

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தொழில் முனைவோர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் தொழில் முனைவோர்களை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் இந்த விருது விழா மத்திய அரசால் நடத்தப்படுகிறது.

30 வயதிற்குள் இருக்கும் தொழில்முனைவோர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருது மற்றும் அங்கீகாரம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

விருது பிரிவில் ஜவுளி மற்றும் தோல்; விவசாயம், உணவு மற்றும் வனவியல் தயாரிப்புகள்; இரசாயன மற்றும் மருந்துகள்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கழிவு மேலாண்மை; கைவினைப்; இ-காமர்ஸ்; IT மற்றும் ITES; சுகாதார; கல்வி மற்றும் பொறியியல் ஆகிய களங்களில்17 முதல் தலைமுறை தொழில் முனைவோர்க்கு விருதுகள் வழங்க இருக்கின்றனர்.

மேலும் ஐஐடி தில்லி, ஐஐஎம் அகமதாபாத், ஐஐடி பம்பாய், டிஐஎஸ்எஸ் மும்பை, ஐஐடி சென்னை மற்றும் கான்பூர் உடன் அரசு இணைந்துள்ளது. சமூக நிறுவனங்கள், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., ஊனமுற்ற நபர்கள் மற்றும் தொழிற்துறை கல்வியில் இருந்து தொழிற்துறை ஆகிய பிரிவில் விருதுகள் வழங்கப்படும்

அங்கீகாரப் பிரிவில் 6 சுற்றுச்சூழல் கட்டமைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் தொழில் முனைவு பயற்சி அளிக்கும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் அடங்கும்.

தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ. 5 லட்சமும், மென்டரிங் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமமும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.neas.gov.in வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது இரண்டாவது ஆண்டு விருது விழாவாகும்.

கடந்த ஆண்டு இவ்விருதை பெற்றவர்கள் வாவ் மோமோ பூட், சரல் டிசைன் சொல்யுசண், மற்றும் JetSetGo விமான சேவைகள். மென்டர் பிரிவில் விருதுகள் பெற்றவர்கள் ஹர்கேஷ் குமார் மிட்டல், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில் மேம்பாட்டு வாரிய தலைவர் மற்றும் சைபர் மீடியா குரூப்பின் தலைவரான பிரதீப் குப்தா. திருச்சிராப்பள்ளி ஆர்இசி  கல்லூரி மற்றும் RUDSETI, கர்நாடகா அங்கீகாரப் பிரிவில் விருதுகளை பெற்றது.