விவசாயிகளுக்கு கை பேசி வழியாக உதவியளிக்கும் நானோ கணேஷ்

கைபேசியில் நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கி விவசாயத்தைத் திறம்பட நடத்துவதற்கு உதவி புரிகிறது ’நானோ கணேஷ்’ எனும் தொழில் நுட்பம்

0

2012 ஆம் மழைப்பொழிவு 20% பற்றாக்குறையாக இருந்தபோது திறமிக்க நீர் மேலாண்மை அவசியமாக இருந்தது, குறிப்பாக விவசாயிகளுக்கு. தொலைபேசியில் பேசுவதற்கே விவசாயிகளைப் பயிற்றுவிக்க வேண்டிய நிலை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் தொலைபேசியானது கடந்த இரண்டு வருட காலமாக விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையைக் கற்றுத் தரும் கருவியாக இருக்கிறது என்பது சுவாரஸ்யமான செய்தி. நானோ கணேஷ் என்ற மென்பொருளை கைபேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பை ஓசியன் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வயலுக்கு நீர் இறைக்கும் எந்திரத்தை 7 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்தபடியே ஆன் – ஆப் செய்து கொள்ள முடியும். அதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது.

இதுவரை நானோ கணேஷ் மென்பொருள் மகாராஷ்ட்ரா, ஆந்திரா, மத்தியப் பிரதேஷ், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் 15000 க்கும் மேலான விவசாயிகளுக்குப் பயனளித்து வருகிறது. இதுவல்லாமல் எகிப்து, தான்சானியா, ஆஸ்திரேலியா, பூட்டான் போன்ற நாடுகளிலும் மேற்படி மென்பொருள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நானோ கணேஷைப் பொருத்துதல் விவசாயிக் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்களின் வாழ்க்கையில் சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விவசாயிகளின் கைத்துணைவர்களும், உள்ளூர் நபரும் அக்ரோ – எலக்ட்ரானிக் கமாண்டோவிற்கு (கிராமப் புற நுட்பவியலாளரை) அழைப்பு விடுத்தால், அவர் நானோ கணேஷைப் பொருத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து இயக்குவதற்கும் உதவிகரமாக இருப்பார்.

ஆரம்பத்தில் உதவிகரமாக இருப்பார்களா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்தது என்பது என்னவோ உண்மைதான். ‘’எங்களது சாதனங்களை வழங்கும் வலைப் பின்னல் முறையை முழுமைப்படுத்தும் வரை விவசாயிகளிடம் நாங்கள் விற்பனை செய்யும் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நேரடியாக உற்பத்தித் தளத்திற்குக் கொண்டு வருமாறு விவசாயிகளைக் கேட்பதுதான் எங்களது பழக்கமாக இருந்தது. ஆனால் மெய்யான விவசாயிகள் நகரத்தில் இருந்து வெகு தொலைவிற்கு அப்பால் இருப்பதால் எங்களது ஆலைக்கு வருவதில் மிகுந்த சிரமம் இருந்தது. ஆகையால் சாதனங்களைத் தாங்களே சுயமாக இயக்கிக் கொள்வதற்குப் பயிற்சி கொடுத்தோம். விவசாயிகளிடம் குறைந்தபட்சமாக 50k – 60k மனித உழைப்பும், எரிபொருள் கட்டணமும் இருந்தால் போதும் விவசாயிகள் மீட்சி பெற்று விடுவார்கள் என்பது இதில் உள்ள ஓர் நலம்சம்’’ என்கிறார் ஓசியானின் நிறுவனரான சந்தோஷ் ஓஸ்ட்வால்.

நானோ கணேஷின் விலை 500 ரூபாயில் தொடங்கி 2800 ரூபாய் வரை உள்ளது. அதன் மாதிரி வகையைப் பொருத்து விலை அமையும். சாதனங்கள் இரண்டு அடுக்கு முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒன்று நேரடியாக ஆலையில் இருந்து விவசாயிகளிடம் விற்பனை செய்வது. மற்றொன்று (300க்கும் மேற்பட்ட) முகவர்கள் மூலமாக விவசாயிகளுக்கு அளிக்கப்படுவது. செய்திப் பத்திரிக்கை, வார, மாத இதழ்களில் விளம்பரம் செய்வதன் மூலமாக நானோ கணேஷ் மின்னணுச் சாதனங்கள் சந்தைப்படுத்தப்படுகிறது.

இப்போதிருக்கும் மிகப்பெரிய சவால் நானோ கணேஷிடம் போதிய நிதியாதாரம் இல்லை என்பதுதான். ‘’கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியில் இருந்து நிதி ஏதும் பெறப்பட்டதில்லை. ஆனால் மாதந்தோறும் எமது உற்பத்திச் சாதனங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. விவசாயிகள் எமது சாதனங்களைப் பயன்படுத்தப் பயிற்றுவிப்பதற்கும், அவர்கள் அதனைச் சோதித்து நம்பிக்கையை அடைவதற்கும் நீண்ட காலம் பிடிக்கிறது அதுதான் இங்கு பிரச்சனையே’’ என்று தங்களது நிலையைப் பகிர்ந்து கொள்கிறார் சந்தோஷ்.

நிதியாதாரம் போதிய அளவு இல்லை என்பதோடு மழைப் பொழிவில் ஏற்பட்டுள்ள பற்றாக் குறையும் தொழிலைப் பெருமளவு பாதித்துள்ளது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த விதமான தீர்வை அளிப்பது என்பதில் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நீரைப் பாய்ச்சுகிற முறை மழை பெய்யாத போதும் அல்லது பணப் பயிர் செய்யும் போதும் பின்பற்றப்படுகிறது. மழை போதுமான அளவு பெய்யும்போது கூட நாட்டில் அங்கங்கே இந்த விவசாய சாதனங்களுக்கான சந்தை உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. ‘’பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் வரை நீர்ப்பாசனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மே மாதத்திலேயே நீர்ப் பற்றாக்குறையாக ஆகி விடுவதால் ஜூன், ஜூலை மாதங்களில் அறவே நீர் இருப்பதில்லை. எனவே நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் நீர் இறைப்புச் சாதனங்களுக்கான விற்பனை பாதிப்பிற்குள்ளாகிறது. எங்களது சாதனங்கள் அவர்களுக்கு எவ்வளவு தான் உபயோகமாக இருந்தாலும் விவசாயிகள் உற்சாகம் அற்ற மனநிலையில் இருக்கும் போது நாங்கள் வணிகத் தன்மையுடன் செயல்பட முடியாது. அவர்கள் எங்களது சாதனங்களில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்று விளக்குகிறார் சந்தோஷ். பருவமழை சரியாகப் பெய்யத் துவங்கிய 2013 க்குப் பின்னரும் கூட நீரிறைப்புச் சாதனங்களுக்கான விற்பனை 10% லிருந்து 20% வரை பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் நானோ கணேஷ் தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் இருந்து பின்னடைந்து விடப்போவதில்லை. தங்களது உற்பத்திச் சாதனத்தைப் பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்காக 2 மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையை நடத்திக் கொண்டுள்ளனர்.

இந்தக் கதையை எழுதியவர் - பிரிந்தா லட்சுமி

தமிழாக்கம் - போப்பு