இந்தியாவின் இளம் சிஇஒ சிந்துஜா ராஜாராமன் இன்று ஒரு வெற்றித் தொழில்முனைவர்!

6

சென்னையில் பிறந்த சிந்துஜா ராஜாராமன் 14 வயதாக இருந்தபோதே ஒரு நிறுவனத்தின் சிஇஒ’ ஆக பணியாற்றி, நாட்டின் இளம் சிஇஒ என்று அழைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு அவர் சென்னை வேலம்மாள் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ‘செப்பன் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட்’ எனும் நிறுவனத்தின் சிஇஒ’ ஆக பொறுப்பேற்றார் என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்டது. 

பட உதவி: TadPoles
பட உதவி: TadPoles

சிந்துஜாவின் சக வயது மாணவர்கள் தங்களின் தேர்வுகள் பற்றி கவலையோடு தயார் செய்து கொண்டிருந்த வேளையில், தனது பெயரை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற செய்தார் அவர். இந்தியாவின் இளம் சிஇஒ மற்றும் 2டி அனிமேட்டர் என்ற பட்டதையும் பெற்றார்.

சூப்பர் சாதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர் சிந்துஜா. அவரது தந்தை தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் காரிகேச்சரிஸ்ட் மற்றும் இவரது தங்கை ஜப்பானிய கவிதை வடிவான ஹைக்கு கவிதைகளை எழுதும் இளம் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். சிந்துஜாவிற்கு பலவித மென்பொருள்களில் வேலை செய்ய தெரியும். ப்ளாஷ், போட்டோஷாப், கோரெல் பெயிண்டர், மாயா, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், இன்னும் பல. உலக வெப்பமயமாதல் மற்றும் டூபர்குலோசிஸ் குறித்த குறும்படங்களை தயாரித்துள்ளார். 2010இல் செப்பன் நிறுவனத்தில் 18-25 வயதுடையோர் அமைந்த குழுவை தலைமை ஏற்று நடத்தியுள்ளார் சிந்துஜா. 

“நான் ஆறாவது வகுப்பு படித்து கொண்டிருந்தபோதே அனிமேஷன் செய்ய கற்றுக் கொண்டேன். என் முதல் மூன்று 2டி ப்ராஜக்ட்கள் சேவை தொடர்பானது. அவை யூட்யூபில் உள்ளது. நான் அனிமேட்டர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். சிஇஒ எனக்கு இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதவி மட்டுமே, நான் அதையும் தாண்டி என் மதிப்பை கூட்டிக்கொள்ள விரும்புகிறேன். அனிமேஷனுக்கு வயது ஒரு தடையில்லை. யார் வேண்டுமானாலும் அதை செய்யமுடியும்,” 

என்று கூறுகிறார் சிந்துஜா. குமரன் மணி என்பவர் சிந்துஜாவை செப்பன் நிறுவனத்தின் சிஇஒ’ ஆக பதவியளித்து, அவருக்கு நல்ல வாய்ப்யையும், தளத்தையும் ஏற்படுத்திக்கொடுத்தார். செப்பனில் 10 ஊழியர்களுடன் பணிபுரிந்த அனுபவம் சிந்துஜாவுக்கு உள்ளது. அப்போது மூன்று பெரிய ப்ராஜக்ட்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற அவர், சென்னை ஷாப்பிங் மையமான டி.நகர் பகுதியை அதேபோல் அனிமேஷனில் உருவாக்கினார். ஜனவரி 26 ஆம் தேதி 1997 பிறந்த சிந்துஜாவுக்கு தற்போது 19 வயது ஆகிறது. 

கட்டுரை: Think Change India