உலகின் சமத்துவ பொருளாதார இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 2-ம் இடம்

0

பொருளாதார அடிப்படையில் இந்தியா உலகின் சமமில்லா சமூகத்தை கொண்டுள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது என்று அண்மை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில், ஒரு சதவீதத்தினர் மொத்த செல்வச்செழிப்பின் 60 சதவீதத்தை கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது. 

க்ளோபல் வோர்ல்ட் ரிப்போர்ட் 2016 அளித்துள்ள அறிக்கை, Credit Suisse Research Institute எனும் மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் உலகில் வாழும் மக்களில், ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறுகி வருவதாகவும், உலக மக்கள் தொகையில் 0.7 சதவீதத்தினர் உலகின் மொத்த செல்வத்தின் பாதியை கொண்டு பெரும் பணக்காரர்களாக உள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இதில் ரஷ்யா உலகின் சமமில்லாத நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அவர்களது நாட்டு செல்வச் செழிப்பில் 74.5 சதவீதத்தை 1 சதவீத மக்கள் மட்டுமே அனுபவித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒரு சதவீத இந்திய மக்கள், மொத்த செல்வத்தில் 58.4 சதவீதமும், தாய்லாந்து 58 சதவீதமும் கொண்டு பட்டியலில் அடுத்தடுத்து வருகின்றனர். ப்ரேசில் நாடு 47.9 சதவீதமும், சீனா 43.8 சதவீதமும் கொண்டு வரிசையில் உள்ளனர் என்று ‘இண்டிபெண்டெண்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஸ்விட்சர்லாந்து உலகின் பணக்கார நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் உலகம் முழுதுமே சமத்துவமில்லா செல்வச்செழிப்புள்ள சமூகம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. 

“கீழ் மட்டத்தில் உள்ள பாதிக்கும் மேலான மக்கள் மொத்த செல்வத்தில் ஒரு சதவீதம் மட்டுமே கொண்டுள்ளனர், ஆனால் செல்வந்தர்களில் முதல் 10 சதவீதத்தினர், உலகின் சொத்துகள் உள்ளடங்கிய 89 சதவீதத்தை கொண்டுள்ளனர்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது உலகில் உள்ள 9 சதவீதத்தினர் மொத்த கடனாளிகளாக உள்ளனர். இதுவே கவலைக்குறிய விஷயமாகும். கணக்குகளின்படி, இந்தியா மற்றும் ஆப்ரிகாவில் வாழும் 80 சதவீத மக்கள் உலக செல்வ பங்கீட்டில் கீழ்பாதியில் உள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் சீனாவிற்கு, மக்கள் தொகை, வளர்ச்சியின் அடிப்பகையில் பல ஒற்றுமைகள் இருந்தாலும், இதில் வந்த முடிவுகள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. சீனாவில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் சதவீதம் வேறுமாதிரியாக உள்ளது. இந்த முரண்பாடு என்னவென்றால், கீழ்மட்ட மக்கள் இந்தியாவில் 31 சதவீதமாகவும், சீனாவில் 7 சதவீதமாகவும் உள்ளனர் .

தனிநபர் செல்வச்செழிப்பு இந்தியாவில் மேலோங்கி உள்ளது. சொத்து, வீடுகள் என்று அனைத்தும் சேர்த்து 86 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் செல்வச்செழிப்பு உயர்ந்து வரும் அளவு, எல்லாருக்கும் அது பங்கிடப்பட்டதாக இல்லை. 

”இந்தியாவில் இன்னமும் வறுமை அதிகமாக காணப்படுகிறது. 96 சதவீத மக்கள் 10,000 அமெரிக்க டாலர்க்கு குறைவாகவே செல்வம் கொண்டுள்ளனர். ஆனால் சீனாவில் அது 68 சதவீதமாக மட்டுமே உள்ளது.” 

சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காலம் தவிர, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நூற்றாண்டில் வேகமாக இருந்துள்ளது. தனிநபர் சொத்தை, அமெரிக்க டாலர் விகிதத்தில் பார்த்தால் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் யூகே நாடுகளில் குறைந்துள்ளது, குறிப்பாக பணமதிப்பு பரிமாற்றத்தின் விகித மாற்றத்தினால் ஆகும்.