எக்பீரியன்ஸ் அன்லிமிடட் வழங்கும் கிராம சுற்றுலா!

0

இது கொஞ்சம் வித்தியாசமான கதை. வடக்கும் தெற்கும் சேர்ந்த கதை. பர்பு, வட இந்தியாவை சேர்ந்த மலைவாழ் பெண்; ஷான் தென்னிந்தியாவை சேர்ந்த மலையாளி பையன். இருவரும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது காதல் ஏற்பட்டது. இது திருமணத்தில் முடிந்தது. இப்போது இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனம் துவங்கி இருக்கிறார்கள்.

துவக்கம்

வேலை தான் ஷானையும் பர்புவையும் பெங்களூரில் இருக்க வைத்திருந்தது, ஆனால் அவர்களின் இதயம் இயற்கையான சூழலில் வாழவே விரும்பியது. "எனவே இலாபகரமான தகவல் தொழில்நுட்ப வேலையை விட்டுவிட்டு, 2010ம் ஆண்டு கேரளாவில் உள்ள கிராமத்தில் குடியேறினோம்” என்கிறார். அங்குமட்டுமில்லாமல் தேசம் முழுவதுமுள்ள கிராம வாழ்க்கையை ஆராய்ந்திருக்கிறார்கள். "எங்களின் அமைதியான இந்த கிராம வாழ்க்கையானது கண்டுபிடிப்புகள் பற்றிய கதைகளாலும், ஆய்வுகளாலும் மற்றும் பல்வேறு மக்களோடும் அவர்களின் கலாச்சாரத்தோடும் நட்புரீதியான விசாரிப்புகளாலும் நிரம்பியிருக்கிறது” என்கிறார் ஷான்.

”நான் கேரளவில் சுற்றுலா சென்றிருக்கிறேன் மற்றும் வன சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன்” என்றார் ஷான். அங்கு தன் திறமையையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. “எங்களுக்கு அங்கு தான் இந்த எண்ணம் தோன்றியது, மற்றவர்களுக்காக பணியாற்றும்போதும் எங்களுக்காக பணியாற்றும்போதும் ஒரே மாதிரி தான் பணியாற்றுகிறோம். எனவே புதிதாக ஒரு நிறுவனம் துவங்க திட்டமிட்டோம். இது எங்களுக்கு எங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பளித்தது, கிராம வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவியது” என்கிறார் ஷான். "எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடட்" (Experience Unlimited) என தங்கள் நிறுவனத்திற்கு பெயரிட்டிருக்கிறார்கள்.

இணையப்படுத்தியது

துவக்கத்தில் எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடட், இணையத்திற்கு வெளியே தான் இயங்கியிருக்கிறது, போதை பழக்கத்திலிருந்து மீட்கும் சேவை, யோகா, ஆரோக்கிய திட்டங்கள், முகாம்கள் மற்றும் மலையேற்றம், சாலை பயணங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மற்ற சுற்றுலா சேவை நிறுவனத்தோடும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் சில பெரு நிறுவனங்களையும் அணுகியிருக்கிறார்கள். விரைவிலேயே தங்கள் நிறுவனத்தை இணையப்படுத்த வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

“இந்த இணைய யுகத்தில் யார் வேண்டுமானாலும் இணையத்தை பார்த்து எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என நினைக்கிறோம். நாங்கள் இரண்டு வாரம் யூட்யூபில் சிரமப்பட்டு தேடி எங்களுக்கான ஸ்டேடிக் இணையதளத்தை உருவாக்கினோம்” என்கிறார் ஷான். இணையத்தில் படித்ததை வைத்து தங்கள் தளத்தின் பெயரை நெட்டிக்ரிட்டி என்ற நிறுவனத்தில் வாங்கி இருக்கிறார்கள். என்னமாதிரியான அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம் என்பதை எங்கள் இணையதளம் தெரிவிக்கும். காரணம் எங்கள் வாடிக்கையாளர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள் என்பதே.

இருவருக்கும் தங்கள் நிறுவனத்தை எவ்வாறு இணையப்படுத்துவது என்பது பற்றிய நல்ல புரிதல் இருக்கிறது.

வருங்கால திட்டம்

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஷான் மற்றும் பர்பு இருவரும் தங்கள் வாழ்க்கையை கிராமத்தில் கழித்திருக்கிறார்கள். எனவே கிராம மக்களுக்கு உதவும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இவர்களின் சுற்றுலா ஒருங்கிணைப்பு குழு நன்கு முன்னேறியிருக்கிறது. நன்கு பணம் ஈட்ட துவங்கியிருக்கிறார்கள். கேரளா மற்றும் ஹிமாசலை சுற்றியுள்ள சூழல் சார்ந்த விவசாய சூழலில் தங்கும் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களின் அடுத்துவரும் சுற்றுலாக்களில் மிகச்சிறப்பான அனுபவங்கள் காத்திருக்கின்றன. பைக் சவாரி, கிராமத்தில் வாழ்தல் (மலையேற்றத்துடன் கூடிய), விழாக்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் குடும்ப விடுமுறைகள் போன்றவற்றை திட்டமிட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இணையதளம் சார்ந்த பல முன்னெடுப்புகளை திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் : TEAM YS | தமிழில் : Swara Vaithee